Monday, November 3, 2008

அறிவோமா அறிவியல்: யானை சில வியப்பூட்டும் செய்திகள்!

1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.
3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது.


5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.
6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.


8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும்.


9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்

12. யானையின் communication பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.


15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.


16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான்.

18. இரண்டாம் உலக போரின்போது போடபட்ட முதல் குண்டில் இறந்தது ஒரு யானை மட்டுமே (பெர்லின் விலங்கியல் பூங்காவில்)

19. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான்.

Saturday, November 1, 2008

அறிவோமா அறிவியல்: அழிவின் விளிம்பில் உள்ள பத்து பாலூட்டிகள்!

உலகில் ஏற்படும் சுற்றுப்புறசூழ்நிலை மாற்றங்களாலும், உணவிற்காகவும், மருத்துவத்திற்க்ககவும் விலங்கினங்கள் கொல்லபடுவதால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது. இது விலங்கின ஆர்வலர்களையும் சுற்றுப்புற சூழ்நிலை ஆராய்ச்சியாளர்களையும் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளது. சிலவருடங்களாக சர்வதேச சமூகம் விழித்துக்கொண்டு பல சட்டங்களும் பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ததினால் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது. இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விழிப்புணர்வு வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

அழியும் தருவாயில் உள்ள நம் பாலூட்டி இனங்களை பற்றி நாம் காண்போம்.

1. Baiji or Yangtze River Dolphin: சீனாவில் உள்ள Yangtze என்னும் ஆற்றில்
காணப்படும் இந்த நன்னீர் வாழ் டால்பின்கள் இன்று உலகில் பத்து அல்லது அதைவிட குறைவாகே உள்ளது. 1950 யில் இந்த இனத்தின் எண்ணிக்கை 6000....இன்று?(தற்பொழுது அழிந்து விட்டதாகவே கருதப்படுகிறது)

2. Vancouver Island Marmot: கனடா நாட்டில் காணப்படும் இந்த அழகான விலங்கினம் தற்பொழுது அழியும்தருவாயில் உள்ளது. 1997 ஆம் ஆண்டு மிக குறைவாகவே காணபட்ட இந்த இனம் ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால் தற்பொழுது சுமார் 200 விலங்குகள் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.


(இதன் முகத்தை பாருங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னால் உருவான இந்த இனம் இன்று அழியும் தருவாயில்.....எல்லாவற்றிக்கும் மனிதனின் சுயநலமே.....)

3. Seychelles Sheath-tailed Bat: செஷல்ஸ் தீவுகளில் காணப்படும் இந்த வவ்வால் இனம் இன்று சுமார் 50-100 தான் உள்ளது. இந்த இனம் எதனால் அளிக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

4. Javan Rhinoceros: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணபட்ட இந்த காண்டாமிருக இனம் தற்பொழுது சுமார் 60 தான் உள்ளது. இது அழிவதற்கு முக்கிய காரணம் இதன் கொம்புகள் மருத்துவ குணம் உடையது என்ற மூட நம்பிக்கையால் வேட்டையாடபடுவதால் தான்.
5. Hispid hare: இந்தியாவிலும் நேபாளத்திலும் பரவலாக காணபட்ட இந்த முயலினம் தற்பொழுது 110 தான் உள்ளதாக கணக்கிட பட்டுள்ளது. இவை பொதுவாக வேட்டையாடபட்டதினால் அழிந்துகொண்டிருக்கும் இனமாகும். இன்னொரு காரணம் காடுகள் அழிக்கபடுவதினால்.

(பொன்னுசாமியிலும், தலைப்பாகட்டியிலும் முயல் கறி சாப்பிடும் போது கவனிக்க....)

6. Northern hairy-nosed Wombat: தற்பொழுது சுமார் 113 தான் உயிருடன் இருப்பதாக
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்திலும் கணக்கிடபட்டுள்ளது. கால்நடை பண்ணைகள் அமைத்ததின் காரணமாக இவ்வினம் அழிந்து கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.


7. Tamaraw or Dwarf Water Buffalo: பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டுமே காணப்படும் இந்த எருமைகளின் எண்ணிக்கை சுமார் 30 -200 வரை இருக்கலாம். வேட்டை, காடுகள் அழிப்பு மற்றும் பலவகையான நோயினால் அழிந்துகொண்டிருக்கிறது.
8. Iberian Lynx: ஐரோப்பாவில் அழிந்து கொண்டிருக்கும் மிக முக்கியாமான இனம் இந்த பூனையினம் தான். தற்பொழுது 120 விலங்குகள் தான் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ளதாக கணக்கிட பட்டுள்ளது. வேட்டையாடுதல், உணவு பற்றாகுறை போன்றவற்றால் அழிந்துவருவதாக சொல்லப்படுகிறது. (இதன் முக்கிய உணவு முயல்கள்தான், முயலைத்தான் மனிதன் விடுவதில்லையே)


9. Red Wolf: அமெரிக்கா மற்றும் கனடா காடுகளில் காணப்படும் சிவப்பு ஓநாய்கள் தற்பொழுது சுமார் 150 தான் உள்ளது. இவை வேட்டை மற்றும் காடுகள் அழிப்பு போன்றவற்றால் அழிந்துவருகிறது.


10. Dwarf blue sheep: சீனாவில் காணப்படும் இவ்வகை மலையாடுகள் சுமார 200 தான் உள்ளதாக கணகிடபட்டுள்ளது. அதிக வேட்டையாடுதல், மற்றும் காடுகள் அழிப்பு போன்றவற்றால் அழிந்துவருகிறது.

இன்னும் அதிர்ச்சியான விஷயங்களுடன் வரும்..........




அறிவோமா அறிவியல்: உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்ச்சிகள்!

10. Kjellfossen falls: நார்வே நாட்டின் இந்த நீர்வீழ்ச்சி உலகின் பத்தாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் சுமார் 550 மீட்டர்கள்.9. Sutherland falls: நியுசிலாந்த்து நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் ஒன்பதாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும் இதன் உயரம் 580 மீட்டர்கள்.
8. Cuquenan Falls: தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் எட்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் 670 மீட்டர்கள்.
7. Yssestrengene falls: நார்வே நாட்டின் இந்த நீர்வீழ்ச்சி உலகின் ஏழாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் சுமார் 680 மீட்டர்கள்.6. Ostre Mardola Foss falls: நார்வே நாட்டின் மற்றொரு மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சி உலகின் ஆறாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம சுமார் 700 மீட்டர்கள்.
5. Yosemite falls: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி உலகின் 5வது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 739 மீட்டர்கள்.


4. Mongefossen falls: நார்வே நாட்டின் மற்றொரு மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சி உலகின் நான்காவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் 773 மீட்டர்கள்.

3. Utigord falls: நார்வே நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி உலகின் மூன்றாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 787 மீட்டர்கள்.

2. Tugela falls: தென் ஆப்ப்ரிக்காவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 947 மீட்டர்கள்.
1. Angel falls: தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் மிக உயரமானதாகும். இதன் உயரம் 979 மீட்டர்கள் அதாவது சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரம். இந்த நீர்வீழ்ச்சி 1912 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்க பட்டது. ஆனால் இதை கண்டுபித்தவர் இத்தனை வெளியே தெரியப்படுத்தவில்லை ஆகையால் மீண்டும் இன்னொரு விமானியால் 1933 ஆண்டுதான் வெளி உலகிற்கு தெரியபடுத்தபட்டது.


தமிழில் டைப் செய்ய


View My Stats