Friday, January 29, 2010

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

Purple Frog: பன்றி போன்ற மூக்கு உடைய இவை இந்தியாவில் (கேரளா) காணப்படுகிறது, 2003 ஆண்டுதான் கண்டுபிடிக்கபட்டது. இது பூமிக்கடியில் சுமார் 13 அடி ஆழத்தில் தான் வாழும். இனபெருக்க காலத்தில் வெளிவந்து இரண்டுவாரங்கள் மட்டுமே பூமியின் மேல் உலா வரும்.



Monito Del Monte (little mountain monkey): தென் அமெரிக்காவில் காணப்படும் இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் இருந் இங்கு இடம் பெயர்ந்து வந்ததாக கருத படுகிறது, இது பொதுவாக குரங்கு இனத்தை சாராதவை. இவற்றின் வாலில் அதிக அளவு கொழுப்பினை சேமித்து வைத்துகொள்ளும், உணவு இல்லாத காலங்களில் இதனை பயன்படுத்தி கொள்ளும். 5 inch அளவே வளரும். இதுவும் அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமாகும்.



Echidna: முட்டையிட்டு பாலூட்டும் இரண்டு உயிரினங்களில் இதுவும் ஓன்று (மற்றொன்று பிளாட்டிபஸ்). பல் இல்லாத இவை கரையான்களை உண்டு வாழும். முட்டையிட்டு அதனை தனது வயிற்று பகுதியில் உள்ள பையினுள் வைத்து கொள்ளும், இதற்க்கு பாலூட்ட காம்பு கிடையாது ஆனால் வயிற்று பகுதியில் தோல் குமிழ் போன்று அமைந்திருக்கும், இதன் வழியாக கெட்டியான பாலினை சுரக்கும் அதனை குட்டிகள்குடிக்கும்.



Bumblebee Bat: தாய்லாந்து நாட்டில் காணப்படும் உலகின் மிக அழகான மிக சிறிய வவ்வால் இது தான் ( ஒரு இஞ்சு) . உலகில் தற்பொழுது சுமார் இருநூறு வவ்வால்களே உயிர் வாழ்கின்றன.





Dugong: யானையின் தோற்றமும் திமிங்கலத்தின் வாலை போன்றும் உள்ள இவை நீரில் வாழும். அதிகமாக வேட்டையாடபடுவதால் இதுவும் அழியும் தருவாயில் உள்ள உயிரினமாகும்.

Spring Hare: கங்காரு மற்றும் முயலின் தோற்றத்தை ஒத்து உள்ள இவை சிறிய முன் கால்களையும், நீண்ட பின்கால்களையும் உடையது.

Tuesday, January 26, 2010

அறிவோமா அறிவியல்: உலகின் சில விசித்திரமான விலங்குகள்

Hooded Seal: ஆர்டிக் பகுதியில் காணப்படும் இவ்வகை ஆண் சீல்களுக்கு வாய் மற்றும் மூக்கு பகுதியில் பலூன் போன்ற அமைப்பு உள்ளது. புவி வெப்பமடைதல் காரணத்தால் இவை அழியும் தருவாயில் உள்ளது.




Olm (human fish): ஐரோப்பாவின் தென் பகுதியில் காணப்படும் இவை பார்வை இல்லாதவை, சுமார் நூறு வருடங்கள் வரை வாழும், குறிப்பாக பத்து வருடங்கள் வரை உணவில்லாமல் உயிர்வாழும். இதன் தோல்கள் மனிதர்களை போல் உள்ளதால் இவை human fiah என்று பட்டபெயர் இட்டுஅழைக்கபடுகிறது.



Leaping Lesbian Lizards: அமெரிக்க பாலைவனக்களில் காணப்படும் இந்த பல்லியினத்தில் ஆண் உயிரினங்கள் கிடையாது, பெண் ஓணான் சில நேரங்களில் ஆண் போல் செயல்பட்டு உடலுறவில் ஈடுபடும்.




Kakapo: உலகில் மிக அரிதாக காணப்படும் கிளி வகையை சார்ந்த இவற்றால் பறக்க இயலாது, இது சுமார் நான்கு கிலோ எடைஉடையது, நியூசிலாந்து நாட்டில் காணப்படும் இவற்றின் எண்ணிக்கை சுமார் அறுபது தான்.


Solenodon: கரிபியன் தீவு நாடுகளில் காணப்படும் இவை மிக கொடிய விஷம் உடையதாகும். இன்னும் ஒரு சில உயிரினங்கள் மட்டுமே இப்புவியில் உயிரோடு இருக்கிறது.



- தொடரும்

Saturday, January 23, 2010

உலகில் உள்ள வித்தியாசமான சில மரங்கள்


AXEL ERLANDSON’S CIRCUS TREE -
சாண்டா குருஸ், கலிபோர்னியா


PIRANGI CASHEW TREE,BRAZIL, உலகின் மிக பெரிய முந்திரி மரம் இதுதான். இது சுமார்
8,500 square meter அளவு பரந்து விரிந்து உள்ளது.



TREE OF LIFE, BAHRAIN, உலகின் அதிசயமாக கருதப்படும் இந்த மரம் கடந்த நானூறு வருடங்களாக ஒரு துளி தண்ணீரும் இல்லாமல் நடு பாலைவனத்தில் வளர்ந்து வருகிறது.


CHAPEL OAK OF ALLOUVILLE – BELLEFOSSE பிரான்ஸ் நாட்டில் உள்ள மரம் சுமார் ஆண்டுகளாக வளர்ந்துவரும் இம்மரம் சாதாரண மரம் மட்டும்மல்ல இதில் ஒரு தேவாலயமும் உள்ளது.



BAOBAB – MADAGASCAR



GERMAN SHERMAN – (SEQUIA NATIONAL PARK)
அமெரிக்காவில் உள்ள இந்த மரம் சுமார் 2500 வருடங்களாக வளர்ந்து வருகிறது, இதன் உயரம் 275 அடிகளாகும்.



SILK COTTON TREES OF TA PROHM,
ANGKOR THOM, CAMBODIA


TULE TREE OF OAXACA, MEXICO


DRAGON TREE, CANARY ISLANDS


WOLLEMI PINE, AUSTRALIA, டயனோசர்ஸ் வாழ்ந்த காலமாகிய சுமார் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த இந்தமரம் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் காணபடுகிறது.

தமிழில் டைப் செய்ய


View My Stats