உண்மை (Faith) சொல்லட்டுமா
2002 ஆம் ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நன்னாளில் இந்த நாய் (Faith) பிறந்தது. பிறக்கும் போதே இதற்கு மூன்று கால்கள் மட்டுமே, வலிமையான இரண்டு பின்னங்கால்களும் வலிமையற்ற ஒரு முன்னம்கால் மட்டுமே இருந்தது. பிறக்கும் பொழுது நடக்கும் திறன் இல்லாமல் போனதால் இதன் தாய் கூட வளர்க்க விரும்பவில்லை.
அந்த அப்பாவி ஜீவனின் உரிமையாளரும் கூட இது பிழைக்கும் என்று நினைக்கவில்லை, எனவே இதனை கொன்றுவிடலாம் என்று உரிமையாளர் நினைக்கும் தருணத்தில் ஜூடு பிரிங்பெல்லோ மனிதநேயம்மிக்க ஒருவர் எடுத்து வளர்க்க விரும்பி அதனை தன்னுடன் எடுத்து சென்று வளர்த்தார். அதன் பிறகு அவர் அதற்கு எப்படி நடக்கவேண்டும் என்ற பயற்சி அளிக்கிறார் அதற்கு உண்மை (Faith) என்றும் பெயர் சூட்டுகிறார்.
முதலில் சர்ப்பிங் பலகையில் நிற்பதற்கு பயிற்சியும், இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து என்னொரு இடத்திற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறார். சில நாட்கள் சென்ற பிறகு பின்கால்களில் நின்று குதித்தால் அதற்கு பரிசாக சிறிது வேர்கடலை கொடுக்கிறார். அவர் வீடில் இருக்கும் என்னொரு நாய் கூட அதற்கு உற்சாகம் கொடுக்கிறது. ஆறு மதங்கள் கடந்த நிலையில் உண்மையால் மனிதர்களை போல் பின் கால்களை கொண்டு நடக்க முடிகிறது.
இன்று இதை பற்றி செய்தி வெளியிடாத பத்திரிகை மற்றும் தொலைகாட்சி சேனல் இல்லை. இதனை கதையின் நாயகனாக கொண்ட புத்தகமும் ('With a Little Faith' )வெளியிட பட்டுள்ளது. இன்று உலக புகழ் பெற்று விட்ட இதனால் நன்றாக நடக்க முடிகிறது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு நல்ல உதாரணம் தான் இந்த உண்மை.
இந்த உண்மை சம்பவத்தின் உட்கருத்தை பின்னோட்டத்தில் எழுதவும்.
.