Friday, October 31, 2008

தமிழகம்- ஒரு மலையாள எழுத்தாளரின் பார்வையில்!பால் சக்கரியா (மலையாள நாட்டின் பிரபல எழுத்தாளர்)

தமிழகத்தின் வளர்ச்சி:

தமிழ்நாட்டில் சின்னச் சின்ன கிராமங்கள் கூட முன்னேறி வரு
வதை நான்கவனித்திருக்கிறேன். புதிய நெடுஞ்சாலைகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் இணைக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் தொழிற்சாலைகளால் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. என்னை அதிகம் மகிழ்ச்சிக்குள்ளாக்குவது தமிழகத்தின் சிறு கிராமங்களில் தென்படும் பள்ளி மாணவர்களின் அபரிமிதமான வளர்ச்சிதான். தமிழ்நாட்டின் எதிர்காலம் அழியாத எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பது இந்தச் சின்னச் சின்ன முகங்களில்தான்.


முல்லை பெரியாறு பிரச்சனை:


"இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளும் மீடியாவும் ஊதிப் பெரிதாக்கும் விஷயம்தான். அதனால் அவர்களுக்கு ஆதாயம் இருக்கிறது. கேரளாவில் தண்ணீர் கொண்டு என்ன செய்ய முடியும் என எனக்கு நன்றாகத் தெரியும். கேரளாவின் 40 நதிகளில் ஓடும் 7804 கோடி கனமீட்டர் நீரில் வெறும் 8 சதவிகிதம் மட்டுமே அங்கே பயன்படுத்தப்படுகிறது. மீதி 92 சதவிகிதமும் கடலுக்குத்தான் செல்கிறது. நாங்கள் தின்னுகிற அரிசி, காய்கறிகள், கறிவேப்பிலையில் இருந்து குருவாயூரில் அர்ப்பணம் செய்யும் பூக்கள் வரை தமிழ்நாட்டில் இருந்துதான் வருகின்றன. கேரளா கொடுக்கும் தண்ணீரைக் கொண்டு தமிழக விவசாயிகள் வேர்வை சிந்தி உருவாக்கும் விளைபொருட்கள்தான் மலையாளிகளின் அன்றாட உணவு. இரண்டு நாள்கள் லாரி ஸ்டிரைக் வந்தால் கேரளாவில் மக்களுக்கு சாப்பிட காய்கறிகள் கிடைக்காது. உண்மையில் மலையாளிகள் செய்யவேண்டியது, கேரளாவில் வீணாகும் தண்ணீரை மேலும் அதிகமாக தமிழகத்துக்குக் கொடுத்து அதற்கு நியாயமான விலையையும் தன்னிடம் இல்லாத அரிசி, காய்கறி, பழங்களை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்வதும்தான்.''(5-11.2008 குமுதம் இதழில் வெளியானது)
அறிவோமா அறிவியல்- சில அறிவியல் வினோதங்கள்!

1. Koalas: ஆண் கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான் உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். (நல்ல ஷிபிட் முறைதான்).
2. Basenji: ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான். (குரைக்காத நாய் கடிக்குமா?)
3. Hagfish: இந்த மீனின் பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும். (இது அதிசயமே!).
4. Owl: ஆந்தைகளால் எலும்பு, இறகு மற்றும் விலங்குகளின் முடி போன்றவைகளை ஜீரணிக்க முடியாது. எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து முடி எலும்பு போன்றவற்றை சுருட்டி வாந்தி எடுத்துவிடும். (ஐயோ பாவம்....)
5. Kissing bugs: இந்த பூச்சிக்கு மனித இரத்தம் ரெம்ப பிடிக்கும் அதுவும் உதட்டில் உள்ள இரத்தம் தான் பிடிக்குமாம். (அதனால்தான் இந்த பெயரோ?)6. Spitting cobra: இந்தவகை பாம்புகளால் தனது விஷத்தை சுமார் எட்டு அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும் திறனுடையது. அதுவுன் நம்முடைய கண்ணை நோக்கித்தான். (ரெம்ப கவனமாத்தான் இருக்கனும்). 7. Hyena: உலகில் உள்ள எல்லா படைப்புகளிலும் ஆண்தான் பெண் உயிரினத்தைவிட பெரியதாக இருக்கும். ஆனால் இவற்றில் பெண் தான் உருவத்தில் பெரியதாக இருக்கும். (இங்க பெண்ணாதிக்கம் அதிகம் போலும்).
8. Jaeger: இந்த பறவைகள் எந்த கடல் பறவைகள் கொஞ்சம் வீக்கா இருக்கோ அதனை வசமா பிடித்து தனது வாயில் என்ன உணவு இருக்கிறதோ அதனை அந்த கடல் பறவையின் வாய்க்குள் திணிக்கும். பின்னர் திணித்ததை வெளிய வாந்தி எடுக்க வைத்து கொடுமை செய்யும். (இருந்தாலும் ரெம்ப மோசம்தான்!)இதுதான் கொடுமைக்கார பறவைஇதுதான் அப்பாவி பறவை (பார்த்தல் பாவமா இல்லே!)

9. Booby: பாவம் இந்த கடல் பறவைகள் ஏனென்றால் இவை அதிக கவனமாக இருப்பதில்லை இதனால் மனிதர்கள் எளிதாக பிடித்துவிடமுடியும். (முட்டாபய பறவை..)10.Green Herons: இந்த பறவைகள் அதி புத்திசாலியானது. சின்ன வண்டுகள் அல்லது பூச்சிகளை தண்ணீரின் மீது போடும் மீன்கள் இரைதான் என்று மேல வந்தால் அவ்வளவுதான் ஒரு வினாடிக்குள் இதன் வாய்க்குள் போய்விடவேண்டியதுதான். (உக்காந்து யோசிப்பாங்களோ?)

Thursday, October 30, 2008

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

1. Stromboli Island: இத்தாலி நாட்டில் உள்ள மிகசிறிய தீவுதான் இது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் தொள்ளாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவின் அடிபாகம் கடலுக்கடியில் சுமார் இரண்டாயிரம் மீட்டர் அடியில் இருக்கிறது. இந்த எரிமலை அடிக்கடி சீறும். இந்த தீவில் உருவாகும் கடல் அலைகள் மிக பெரியது சுமார் பத்து மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால் கடலை ஒட்டிய கிராமங்கள் அடிக்கடி சுனாமியால் பாதிக்கபடும். 2. Chichagoff Island: வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் அருகில் உள்ள இந்த தீவு மிக அழகானது. உலகின் பெரிய தீவுகளில் 109 வது இடத்தை பெறுகிறது.
3. Socorro Island: மெக்சிகோ நாட்டில் உள்ள இந்த தீவும் ஒரு எரிமலை தீவே. இந்த அழகான தீவில் பலதரப்பட்ட தாவரங்களும் விலங்கினகளும் காணப்படுவது இதன் சிறப்பாகும்.

4. Darwin Island: சார்லஸ் டார்வின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஈக்குவடார் நாட்டில் அமைந்துள்ள இந்த தீவு கேலபகாஸ் தீவு கூட்டங்களில்
ஒன்றாகும். இந்த மிகசிறிய தீவில் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள கடல்
உயிரினங்களை கண்டுகளிக்கலாம். 5. Staten Island: தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலை தொடரின் கிழக்கு பகுதியின் எல்லையில் அமைந்துள்ளது. அதாவது இந்த தீவு அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமானதாகும்.6. Kornati Island: குரசியா நாட்டில் உள்ள இந்த தீவும் மிக அழகானது.
7. Lavezzi Island: பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அழகான தீவு.
8. Easter Island: தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள இந்த தீவில் பெரிய பாறைகளில் செதுக்க பட்டுள்ள மனித முகங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும்.

9. Fayal Island: போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்த தீவு நீல தீவு என்று அழைக்கபடுகிறது.
10. Moorea Island: பிரான்ஸ் நாட்டினுடைய என்னொரு அழகான தீவுதான் இது.
11. Lakshadweep: என்னதான் இருந்தாலும் நம்ம லட்சத்திவீன் அழகே அழகுதான்.

Wednesday, October 29, 2008

வாத்தும் அதன் குஞ்சுகளும்........

வாத்தும் அதன் குஞ்சுகளும் சாலையை கடந்து செல்லும் அழகு ஒரு கவிதை.....நிஜமாக இந்த புகைபடங்களை காணும் போது நம் இதயத்தில் பொங்கிவரும் இன்பத்தை உணர்வீர்கள்......

மிக அதிகாக போக்குவரத்து நெரிசல் உள்ளசாலையில் செல்லும் அம்மா வாதத்தையும் அதனுடைய குஞ்சுகளையும் ஒரு கடமை தவறா காவலர் எப்படி சாலையை கடக்க உதவுகிறார் என்பதை இந்த வீடியோவில் காணவும்.

தமிழில் டைப் செய்ய


View My Stats