இலங்கை அரசியல்வாதி இளந்திரை சரவணமுத்து சுட்டுகொல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடெங்கும் கலவரம். கொழும்பு நகர வீதிகளில் எங்கு திரும்பினும் ஒரே பிணக்குவியல்..தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
நீங்கள் கேட்கலாம்… எதற்கு ஒரு தமிழர் கொல்லப்பட்டதற்கு தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் என்று! இலங்கை அரசியலில் எழுதாத விதி என்று ஒன்று இருக்கிறது! அது..இலங்கையில் யார் இறந்தாலும் சரி.. இயற்கையாகவோ.. வன்முறையாலோ ..தமிழர்களை தாக்கி கொல்ல யாவர்க்கும் உரிமை உண்டு...! தமிழர்கள் வெறும் தெரு நாய்களாகத்தான் தெரிந்தார்கள்...! இது பக்கத்து நாட்டு அரசியல் வாதிகளுக்கு தெரியாது..அவர்கள் வெறும் பணத்துக்காகவும் பதவிக்காகவும் அரசியல் செய்பவர்கள்..சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் சந்தர்ப்பவாதிகள்.
தமிழர்கள் கொல்லப்படுவது சமூக தமிழ் நீதி கட்சி தலைவர் இளமாறனுக்கு தெரிய வந்தது.
"அங்கு கொல்லப்படுவது தமிழர்கள் மட்டுமல்ல ..மனிதர்கள்..! எல்லோரையும் மனிதராக பாருங்கள். சிங்களவர்கள் நம் சகோதரர்கள் ..அவர்களை அரவணையுங்கள்"..
"சிங்களவன் என்றாலே கொலைகாரனாக தான் பார்க்கிறது தமிழினம் ...ஏன்?" உறுமினார் இளமாறன்! தமிழன் ஒருவன் இப்படி வேதாந்தம் வேசியது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
"சிங்கள அரசு நமக்கு எப்போதும் கெடுதல் செய்ததில்லை ...நாமாக அவர்களுக்கு கட்டுப்படாமல் போனதால் தான் இவ்வளவும் நடந்துள்ளது. நாம் இப்போது அமைதியாக இருக்கவேண்டும் ..இலங்கை அரசுக்கு ஆதரவு தருவதை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவே கூடாது. நம் தமிழர்கள் அங்கு சென்று வன்முறை செய்கின்றனர்....வன்முறையாளர்
திடீரென கூட்டத்தில் ஒரே சலசலப்பு...! ஒருவன் ஓடினான் இளமாறன் நோக்கி.. காதில் ஏதோ கிசுகிசுத்தான்...அரக்க பறக்க ஓடினார் இளமாறன்..
காரணம்... இலங்கை சென்றிருந்த தனது ஒரே மகன் தனஞ்செயன் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டான் என்ற தகவல் இப்போது தான் அவரை எட்டியிருந்தது ..
இப்போது தான் உணர்ந்தார் இளமாறன்!
தேளுக்கு தேன் ஊற்றியதை நினைத்து வருந்தி அழுதபடி ஓடினார் .....
நாஞ்சில்நாட்டான் Dr. E.M Shankar
3 comments:
please remove word verification
Dear Friend I dont know how to remove the word verification. Could you please let me know?
Now I found that and removed word verification. Thanks a lot
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்