உலகின் மிக மலிவான விலையுள்ள பொருள்: தமிழனின் உயிர்தான்....
அடுத்து, சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 1983 முதல் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 1,00,000. இப்பொழுது சொல்லுங்கள் உலகின் மிக மலிவான விலையுள்ள பொருள் தமிழனின் உயிர்தானே?
சத்தியமாக சொல்கிறேன் வலிக்குதுங்க......
நேற்று சென்னையில் தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் மாநாடு அதில் கலந்துகொள்ள குமரிமாவட்ட இளைஞர்கள் பலகனவுகளுடன் சென்னை நோக்கி பயணம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான் இதுதான் அவர்களின் கடைசி பயணம் என்று. அதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் கல்யாண ஆகி முப்பது நாட்களே ஆன புதுமாப்பிளையும் ஒருவர். இவர்களின் பயணம் திருச்சி அருகில் விபத்தில் முடிவடைகிறது. பாவம் இவர்களை பெற்றவர்களின் நிலைமை, நம் பிள்ளையும் ஒருநாள் அரசியல்வாதியாகி கைநிறைய சம்பாதிப்பான் என்று தானே அவர்கள் இவர்களை வழியனுப்பிஇருப்பார்கள்.
நான் எந்த அரசியவாதிகளையும் குறைசொல்ல வரவில்லை, அவர்களுக்கு தேவை தன் பெயர் கின்னஸ் புக்கில் வரவேண்டும், அடுத்த தேர்தலில் அவர்கள் கூடிய கூட்டத்தை காட்டி பாருங்கள் எனக்கு எவ்வளவு இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறி கோடிகளையும் பல தொகுதிகளையும் பெறமுடியும். ஆனால் இந்த இளைஞர்களை பெற்றவர்களுக்கு 50,000 அல்லது 1,00,000 ரூபாயை கொடுத்து பத்திரிக்கையில் விளம்பரம் தேடி கொள்வார்கள்.
இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியும் தமிழகத்தின் சாலைகளின் நிலைமை. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த சாலைவிபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,768 (கண்டிப்பாக நம்மால் நம்பமுடியாது) (http://www.tn.gov.in/sta/tables-a1.htm).
நானும் தொடர்ந்து கவனித்து வருகிறேன் ஒவ்வொரு மாநாட்டின் போதும் கண்டிப்பாக ஓன்று அல்லது இரண்டு விபத்துகள் அதில் கண்டிப்பாக சில உயிரிழப்புகளும் இருக்கும். என்னுடைய கேள்வியெல்லாம் நான்தான் தமிழகத்தை காக்க வந்தகடவுள் என்று கூறிக்கொள்ளும் உங்களுக்கு நாம் மாநாடு நடத்தினால் கண்டிப்பாக உயிரிழப்பு இருக்கும் என்று தெரிந்த பின்பும் எப்படி துணிந்து நடத்துக்றீர்கள். so யாரோபெத்த பிள்ளைதானே நமக்கென்ன வந்தது இதுதானே உங்களுடைய நினைப்பு. வாழ்க உங்களுடைய கொள்கை........
அடுத்து, சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 1983 முதல் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 1,00,000. இப்பொழுது சொல்லுங்கள் உலகின் மிக மலிவான விலையுள்ள பொருள் தமிழனின் உயிர்தானே?
சத்தியமாக சொல்கிறேன் வலிக்குதுங்க......
5 comments:
Road accident is happening everyday at every place...But we should aware from this...We can't flame anyone for this accident...you don't flame anyone for this it's happening allover country...You give some instruction about how do escape an accident?...Who know what's happening tomorrow...
Its happening every day, arasiyala irukavan evanum makkalukku seiyanumnu varala, sambatikanumnu thaan varanunga.
நண்பர் முருகன் அவர்கள் வருகைக்கு நன்றி.
நான் கடந்த இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருக்கிறேன், இங்கு நம் நாட்டை விட கார்களின் எண்ணிக்கை அதிகம் தான் ஆனால் இதுவரை நான் ஒரு சாலைவிபத்தையும் கண்டதில்லை. நம் நாட்டை பொறுத்தவரை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால் தான் அது சாவு. கடந்த நான்கு ஆண்டில் தமிழகத்தில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சங்கள் அதில் உயிரிழந்தொர்களின் எண்ணிக்கை 42000. நம் மக்களுக்கு ஏன் சாலைவிபத்து பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை என்பதுதான் என்னுடைய வருத்தம் எல்லாம்.
நான் எந்த ஒரு தனிமனிதனையும் குற்றம் சொல்லவரவில்லை.
இன்று காலை இலங்கையில் நடந்துவரும் வான்தாக்குதலால் தமிழ்மக்கள் படும் அவதியை காணும் பொழுது கண்களில் கண்ணீர்! மேல்கண்ட சாலைவிபத்தின் கொடூரம் தாங்கமுடியாமல் எழுதிய பதிவு தான்.
தவறானால் மன்னிக்கவும்
Speed அவர்களே நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இவை தினசரி நடப்பவைதான் என்று நினைத்து ஒதுங்கி விடுவதால் தான் உயிருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடுகிறது.
தமிழனின் பலமும், பலவீனமும் அவன் கொள்ளும் உணர்வே! தமிழ் இனம், தமிழ் மொழி என்றாலே ஒரு வித ஒவ்வாமை ஆகி விட்டது. காரணம்? அந்த ஆயுதம் மலிவான காரணங்களுக்குப் பாவிக்கப் போய், இன்றைய தேவைக்கு உதவாமல் போய்விட்டது. ஒரு நாள் அவனது ஈரல் பிடுங்கும் காலம் வர, அவன் நிச்சயம் விழித்தெழுவான்! அதுவும் விரைவில்!!
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்