Friday, October 17, 2008

அறியியல் வினோதம்: தெரியுமா தற்கொலை செய்துகொள்ளும் எலிகளை?

ஆர்டிக் பகுதி நாடுகளில் குறிப்பாக நார்வே நாட்டில் காணப்படும் லேம்மிங்க்ஸ் (Lemmings) எனப்படும் எலிகளின் இனபெருக்கம் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மிக அதிகமாக பெருகிவிடும். உடனடியாக அக்கூட்டத்தில் உள்ள சற்று வயதான எலிகள் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கும் அதாவது கூட்டமாக தற்கொலை (Mass Suicide) செய்துகொள்வதென. அதற்கான நாட்கள் நெருங்கியவுடன் அவையனைத்தும் ஒருஇடத்தில் கூடும் பின்னர் அவை கடல் இருக்கும் திசையை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும். அவை செல்லும் வழியில் வரும் தடங்கல்களை பற்றி கவலைபடாமல் பல நூறு மைல்கள் கூட நடந்து செல்லும். இறுதியாக அவை கடற்கரையில் வந்துசேர்ந்ததும் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும். சில ஆராய்ச்சியாளர்கள் இவை தற்கொலை செய்துகொள்வதில்லை. இவை இனபெருக்கத்தின் காரணமாக அதிகமாக பெருகிவிட்டதால் புதி இடத்தை தேடி செல்வதாக கூறுகிறார்கள் (எது எப்படியோ அவை தற்கொலைசெய்துகொள்வது நமக்கு கண்ணீரை வரவழைக்கும் என்பது உண்மை). எலிகள் தற்கொலைசெய்து கொள்ளும் கட்சியை காண இங்கே சொடுக்கவும் (வீடியோ 1, வீடியோ 2)

1. Humpback whales: உலகில் உயிர்வாழும் உயிரினங்களிலேயே இவைதான் அதிக சத்தத்தை எழுப்புகிறது.
2. Giant squid: உலகில் உயிர்வாழும் உயிரினங்களிலேயே மிகப்பெரிய கண்களை உடையது. (40 cm diameter)
3. Dalmation dogs: பத்தில் மூன்று பங்கு டால்மேசன் நாய்களுக்கு காதுகேட்கும் திறன் இல்லாமல் இருக்கும், காரணம் inbreeding (breeding between close relatives).
4. African Elephant: குட்டிபோட்டு தாய்பால் அதிகநாட்கள் கொடுக்கும் விலங்கு. (சுமார் 22 மாதங்கள்)
5. Short-nosed bandicoot: ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த விலங்குதான் குட்டிபோட்டு குறைந்த நாட்கள் தாய்பால் கொடுக்கும் விலங்கினமாகும். (சுமார் 12 நாட்கள்)6. Black Mambo snake: இந்த பாம்பு கடித்தால் 95% உயிர் போவது நிச்சயம் (மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு)
7. Hummingbird: இவை தனது உடல் எடையை போன்று பாதி அளவு உணவை ஒருநாளில் உட்கொள்ளும். (60 கிலோ உடல் எடை கொண்ட மனிதன் 30 கிலோ உணவை ஒரே நாளில் உண்பதற்கு சமம்)

8. whale shark: உலகிலேயே அதிக பற்களை கொண்ட விலங்கு இதுதான் (சுமார் 4000 பற்கள்). ஒவ்வெரு பல்லின் அளவும் 3 mm நீளமே உடையது. இந்த மீனின் வளர்ச்சி சுமார் 40 அடி நீளமும் 15 டன் எடையும் உடையது.
9. Spine-tailed swift: உலகிலேயே அதிவேகமாக பறக்கக்கூடிய பறவை இதுதான். (சுமார் 145-160 kph)


10. Newborn kangaroo: கங்காரு குட்டி பிறக்கும் பொது அதன் அளவு 2.5 cm தான்.

5 comments:

Vadielan R said...

உங்களுடைய இந்த பதிவு முந்தைய பதிவுகளும் அருமை உங்கள் பணி சிறக்க என்றும் பிரார்த்திக்கும்

உங்கள் அன்புடன்

வடிவேலன் ஆர்.

ஆட்காட்டி said...

8ஆம் படம்-பல்லு 3மிமீ ஆ, மீனே அவ்வளவு தானா?

Dr. சாரதி said...

வடிவேலன் .ஆர் அவர்களே உங்களுடைய வாழ்த்துகளுக்கு என்னுடைய நன்றிகள்
.......

Dr. சாரதி said...

ஆட்காட்டி அவர்களுக்கு, தவறுக்கு மன்னிக்கவும். தவறு திருத்தப்பட்டுள்ளது.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

நசரேயன் said...

அருமையான பதிவு .. ரெம்ப நல்லா இருக்கு

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats