Saturday, October 11, 2008


ஒரு இளம் மகளின் தந்தை பாசம்

பெற்ற குழந்தையை பேணிக்காப்பதுதான் பெற்றோரின் கடன். இந்த கடமையில் இருந்து தவறும் பெற்றோரால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கபடுவது என்பது உண்மையே. நேற்று தூத்துக்குடியை சேர்ந்த இந்த குடிகார தந்தை அவருடைய ஆசை மகளை அழைத்துக்கொண்டு போதையில் தள்ளாடி தள்ளாடி நாகர்கோவில் நகரில் சென்றார். அவரை பின்தொடர்ந்து இந்த இளம் பிஞ்சு அப்பா! அப்பா! என்று கதறியபடி சென்றாள். அந்த பிஞ்சு குழந்தையை அடிபத்தும் மிரட்டுவதுமாக சென்ற குடிகார தந்தை போதையில் மயங்கி அங்கே இருந்த சாக்கடை ஓரம் விழுந்தான். பாவம் அந்த இளம் தளிருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்பா! அப்பா! என்று தொட்டு தொட்டு மருவியது அப்போது குடிகார தந்தை அவளின் கையை தட்டிவிடுவதும் மிரட்டுவதுமாக இருந்த அவன் திடீரென்று குழந்தையை தூக்கி ரோட்டில் தள்ளிவிட பார்க்கிறான். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அவனையும் அந்த குழந்தையையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி பக்கத்தில் இருந்த காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தார்கள் . காவல்நிலையம் சென்றபின்னரும் அந்த குடிகார தந்தை மயங்கி விழுந்தார். சிறுமி அவரை எழுப்ப முயற்சி செய்ய அது தோல்வியிலேயே முடிகிறது. " குழந்தையை தூங்கவைத்து ஈ, கொசு அண்டாதவாறு அருகில் இருந்து கவனிக்கும் தந்தையை பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே அந்த குழந்தை தந்தையை மொய்த்த ஈ யை விரட்டிய காட்சி கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது".

7 comments:

ஆட்காட்டி said...

தமிழ்

கிறுக்குப்பையன் said...

ச்சே அந்த பிஞ்சு மனசு என்ன பாடு பட்டிருக்கும் ....குடிகாரர்களே குடியுங்கள் .....குடும்பத்தை பார்த்து கொள்ளுங்கள் ...

Anonymous said...

பெற்ற பல மகன்களில் ஒருவன் குடி வெறியால் தன் வாழ்கையையும், தன் சந்ததியையும் அழிப்பதும் பார்த்தும் மனம் மாறாத அரசன்( கருணாநிதி) அரசாலும் நாட்டில் இதெல்லாம் சாதாரணம்!?

Anonymous said...

அரசன்(கருணாநிதி) குடிகார மகன் மு. க. முத்து

Dr. சாரதி said...

நன்றி நண்பர்களே.......

Vadielan R said...

இவர்களை எல்லாம் நிற்க வைத்து சுட வேண்டும்

NanjilDMK said...

ஆட்காட்டி, ராஜ மற்றும் வடிவேலன் ......
தங்கள் வருகைக்கு நன்றி

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats