Tuesday, October 28, 2008

அறிவோமா அறிவியல்: உலகின் பத்து வலிமையான விலங்குகள்!

உலகின் பத்து வலிமையான விலங்குகள் அதன் உடல் எடையுடன் ஒப்பிட்டு எடுக்கப்பட்டது.

10. Grizzly bears: இவை தனது எடையில் 0.8 மடங்கு அதிகமான எடையை சுமக்கும் தன்மையுள்ளது. இதன் எடை சுமார் 1500 பவுண்ட்கள், இதனால் 1200 பவுண்ட்கள் சுமக்கமுடியும். அதாவது நன்கு வளர்ந்த 8 மனிதர்களை சுமப்பதற்கு சமம்.


9. Mussel: தனது உடல் எடையை விட இரண்டு மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. அதாவது அதன் ஓடுகள் அதனை விட இரண்டு மடங்கு எடை அதிகம்.
8. Anaconda: தனது எடைக்கு சமமான உயிரினங்களை சுருட்டி இறுக்கி கொல்லும் திறனுடையது. இதன் எடை சுமார் 500 பவுண்ட்கள், அதாவது ஒரு அனகோண்டாவல் ஒரே நேரத்தில் 4 மனிதர்களை சுருட்டி கொல்லும் திறனுடையது.

7. Ox: தனது எடையை விட ஒன்றரை மடங்கு அதிகம் எடை அதிகமாக சுமக்கும் திறனுடையது. இதனுடைய சராசரி எடை சுமார் 1300 பவுண்ட்கள் இவற்றால் 2000 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது. அதாவது 13 மனிதர்களை தொக்கி செல்லும் திறனுடையவை.
6. Tiger: தனது எடையை விட இரண்டு மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதனுடைய சராசரி எடை சுமார் 600 பவுண்ட்கள் இவற்றால் 1200 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது.

5. Eagle: பறவையினத்தின் மிக வலிமையான பறவையாகும். தனது உடல் எடையை விட நான்கு மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதன் வலிமையை பெரிய கார்கோ விமானத்துடன் ஒப்பிடும் பொது இவற்றின் வலிமையே அதிகமானது.

4. Gorilla: இவை தனது எடையை விட பத்து மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. இதனுடைய எடை சுமார் 450 பவுண்ட்கள் இவற்றால் 4600 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது. அதாவது முப்பது மனிதர்களை தூக்குவதற்கு சமம்.

3. Leafcutter Ants: இவை தனது எடையை விட 50 மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் திறனுடையது. உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு டிரக்கை தூக்குவதற்கு சமம்.

2. Elephant: இதனுடைய எடை சுமார் 12000 பவுண்ட்கள் இவற்றால் 20000 பவுண்ட் எடையை தூக்கும் திறனுடையது. அதாவது 130 மனிதர்களை சுமந்து செல்லும் திறனுடையது.

1. Rhinoceros Beetle: இதன் உடல் எடையுடன் ஒப்பிடும்போது உலகில் மிக வலிமையான விலங்கு இதுதான். தனது உடல் எடையை விட 850 மடங்கு எடையை தூக்கி செல்லும் திறனுடையது. அதாவது ஒரு மனிதன் பீரங்கியை தூக்குவதற்கு சமம்.

நாம் மனிதர்களையும் சும்மா சொல்லக்கூடாது ஒரு மனிதன் தனது எடையை விட மூன்று மடங்கு அதிக எடையை தூக்கியதே சாதனையாகும்.

1 comment:

ஆட்காட்டி said...

பாத்துட்டம்.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats