Monday, December 22, 2008

பெண்களே உஷார்.....

கடந்த வாரம் சென்னையில் ஒரு பரபரப்பு, ஆங்கிலோ இந்தியன் பெண் ஆட்டோ ஓட்டுனரின் துணையுடன் தனது அருமை கணவனை கொன்று விட்டு கள்ளகாதலன் ஆட்டோ ஓட்டுனருடன் தலைமறைவாகி விட்டாள்.

அவள் அலுவலகம் சென்றுவர ஒரு ஆட்டோ ஓட்டுனரை அவளின் கணவனே ஏற்பாடு செய்துள்ளான். கால மாற்றம் அவளின் மனதையும் கல்லாக்கி கட்டிய கணவனையே கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. இங்குதான் அந்த அன்பான கணவனின் நேசத்தை புரிந்து கொள்ளவேண்டும். அவள் ஏற்கனவே இரண்டு முறை அதே ஆட்டோ ஓட்டுனருடன் அழகான இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு ஓடிவிட்டாள், ஆனாலும் அவன் அவளை மன்னித்து என்று கொண்டதன் விளைவு கொலையில் முடிந்தது.

எனக்கு ஓன்று புரியவில்லை, இது போன்று நடைபெற்ற அனைத்து கொலைகளிலும் குற்றவாளிகள் காவல் துறையினரால் கண்டுபிடிக்கபட்டு சிறையில் கம்பிதான் எண்ணி கொண்டு இருக்கிறார்கள் இறுதியில் தனது குழந்தைகளையும் ஆதரவற்ற நிலையில் தவிக்கவிட்டு என்ன சுகத்திற்காக கள்ளக்காதலனை தேடினார்களோ அதுவும் நிறைவேறாமல் கம்பி என்னும் இவர்கள் ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இதுபோன்று நடக்காது, ஆனால் அதற்க்கு நேர் எதிர்மறையாக நடப்பதின் காரணம் புரியவில்லை.

சரி இனி விசயத்திற்கு வருவோம், எளிதில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் பெண்களுக்கானது ஒரு எச்சரிக்கை பதிவு.

பெண்கள் பொதுவாக மலரினும் மெல்லிய குணம் படைத்தவர்கள் என்பதை நான் நம்புகிறவன், இவர்களை மயாக்குவதற்க்காக ஆண்கள் செய்யும் வித்தைகள் பல, நான் எல்லா ஆண்களையும் சொல்லவரவில்லை, பொதுவாக பெண்கள் யார் யாரிடம் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்.....

பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள்: இது சென்னைக்கு பொருந்தாது என்றே நினைக்கிறான், உதாரணத்திற்கு தென் மாவட்டங்களை எடுத்துகொள்வோம், இங்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தான் ஹீரோக்கள் (ரஜினி மற்றும் கமலை மிஞ்சுவிடுவார்கள்) எனக்கு தெரிந்த ஒரு ஓட்டுனருக்கு குறைந்தது பத்து காதலிகளாவது இருந்திருப்பார்கள் அதில் எத்தனை பெண்கள் நாசமாகபட்டு இருப்பார்கள்.....
பஸ்சுக்காக ஓடிவரும் பெண்களுக்கு பஸ் நிறுத்தத்திற்கு முன்பாகவே பஸ்சை நிறுத்தி ஏற்றி கொள்வது, பஸ்சை வேகமாக ஒட்டி கவருவது...மற்றும் உதவி செய்வது போன்று நடித்து திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களை வெகு சுலபத்தில் வசிகரித்து விடுவார்கள்.....

கடைஊழியர்கள் : பெண்கள் பெரும்பாலும் புழங்கும் எந்த கடைகளாக இருந்தாலும் அங்குள்ள பெரும்பாலான ஆண்களுக்கு சபல புத்தி கண்டிப்பாக இருக்கும் அருமையாக பேசுவார்கள், பிறகு ஒன்றிரண்டு இரட்டை அர்த்தமுள்ள ஜோக் அடிப்பார்கள், மெதுவாக கையை வைப்பார்கள் எதிர்ப்பு தெருவித்தால் அடங்கிவிடுவார்கள் இல்லையேல் அவ்வளவுதான்....

ஆட்டோ ஓட்டுனர்கள்: பொது மக்களிடம் மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பு பெர்ற்றவர்கள், எனவே இவர்களின் நாவில் தேன் மழை கொட்டும் (பெண்களிடம் மட்டும்).

இன்ஸ்டால்மேன்ட் வசூலிப்பவர்கள்: இவர்கள் பொதுவாக பகலில் கணவர்கள் மற்றும் ஆண்கள் இல்லாத நேரத்தில் பணம் வசூலிக்கவருவதால் இவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்....

சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள்: இவர்கள் மீது சீக்கிரம் சந்தேகம் வராது, ஆனால் இவர்கள் மீதும் கவனமாக இருக்கவேண்டும்.

பெண்களே உங்களுக்கு யார் மீதேனும்சந்தேகம் வந்தால் உடனடியாக தைரியமாக எதிர்ப்பை காட்டுங்கள் அடங்கி போனால் வாழ்க்கையில் பல சோதனைகள் வர வாய்ப்புண்டு.

Saturday, December 20, 2008

அறிவோமா அறிவியல்: பறவைகள் சில வினோதங்கள்!

Dipper bird: தண்ணீருக்குள் நீந்தி சென்று இரை தேடும் குருவி.புத்திசாலியான Raven: காகம் இனமான ரேவன்ஸ் மிகவும் புத்திசாலியானது, கயிற்றில் கட்டபட்ட உணவை மனிதர்கள் போலவே எடுப்பது, தேவையான உணவை உண்டபின் பதுக்கி வைத்து கொள்வது போன்றவை சிறப்பு பண்புகளாகும்.Riflebird: பெண் குருவியை மயக்குவதற்காக இவை செய்யும் நடனம் மிகவும் அருமை. பெண் பறவைகள் சீக்கிரத்தில் மயங்காது....ஐயோ பாவம்! இறுதியில் ஆம்பிளைக்கு வெற்றி....Thrasher Vs King snake: நான்கு அடி நீளமுள்ள கொடிய பாம்பை சிறிய குருவி கொத்தி விரட்டும் துணிவு...அடேங்கப்பா...Hummingbirds: உலகின் மிக சிறிய பறவையின் அதிசய உலகம்....மயில்: என்னதான் இருந்தாலும் நம்முடைய மயிலின் அழகே தனிதான்.அப்பாவின் தாய்மை: Rhea எனப்படும் பறவைனத்தில் அப்பாக்கள் தான் அடைகாத்து குஞ்சுகளை வளர்த்து பெரியவர்களாக்கும்.


Friday, December 19, 2008

அறிவோமா அறிவியல்: விலங்குகளின் ஒற்றுமை (Mutualism)!

துப்பரவு செய்யும் மீன்கள்: Caribbean cleaning goby மற்றும் சிறிய இறால் வகை மீன்கள் பிற பெரிய மீன்களின் வாய்க்குள் சென்று அதனுள் இருக்கும் ஒட்டுண்ணிகளையும், இறந்த தசை துணுக்குகளையும் சுத்தம் செய்யும் பெரிய மீன்கள் எக்காரணத்தைகொண்டும் அந்த சிறிய மீன்களை துன்புறுத்தாது.

Ant Vs Caterpillar: வண்ணத்து பூச்சியின் இளம் லார்வாவும், எறும்பின் நட்பும் மிகவும் ஆச்சிரியமான ஓன்று. லாராவின் உடம்பில் சுரக்கும் ஒருவகையான இனிக்கும் திரவத்தை இந்த எறும்புகள் உண்ணும், எதிரி எறும்புகள் சிலநேரம் லார்வாக்களை வேட்டையாடும்பொழுது எதிரி எரும்புகளுடன் போராடி மீட்டு கொண்டுவரும். (கண்டிப்பாக வீடியோவை காணுங்கள்)எருமையும் குருவிகளும்:உயிர்காப்பான் (தேள்) தோழன் Uromastyx and Scorpion: (கண்டிப்பாக வீடியோவை காணுங்கள்)Thursday, December 18, 2008

சுனாமி !

2004 வருடம் தேதி டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி அமைதியான அதிகாலை நேரம் உலகையே மாபெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சுனாமி என்னும் ஆழிப்பேரலை எனது நண்பர்கள் உட்பட உலகம் முழுதிலும் சுமார் 2 லட்சம் மக்களின் உயிரை பலிவாங்கிய அந்த கோரமான நாட்கள் நம்மில் இருந்து சீக்கிரம் மறைந்து போகாது. சுனாமியில் உயிர் இழந்த அனைத்து ஆன்மாக்களும் சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

சுனாமியின் அறிவியல் உண்மைகள்:

இலங்கையில் சுனாமி தாக்கியபோது ஒரு குடும்பமும் மற்றும் சிலரும் தத்தளிப்பதை காட்டும் கொடுரமான வீடியோ பதிவுதாய்லாந்து நாட்டில் கடற்கரையோர விடுதியில் தங்கி இருந்த ஒருவர் எடுத்த சுனாமி வீடியோ

சர்பிங் வீரர் ஒருவர் சுனாமி போன்ற பெரிய அலையில் விளையாடுவதை காணும் போது இருக்கையின் நுனிக்கே வந்துவிடுவீர்கள். ஒரு அலையின் உயரம் இவ்வளவா என பிரமித்துபோவிர்கள். (ஒரு கோடி மக்கள் பார்த்துள்ள வீடியோ)
Wednesday, December 17, 2008

அறிவோமா அறிவியல்: ஓணான் வகை விலங்குகளின் அதிசய உலகம்!

(அனைத்து வீடியோ வையும் கண்டிப்பாக காணுங்கள்)

பச்சோந்திகளின் இனபெருக்கம்: தாய் பச்சோந்தி முட்டைகளை இடுவதற்கு ஏதுவான ஒரு இடத்தை தேர்வுசெய்து அதில் சிறய பள்ளம் ஒன்றை தோண்டி அதில் சுமார் முப்பது முட்டைகள் வரை இடும், பின் அதன் மேல் மண்ணை போட்டு மூடிவிட்டு சென்றுவிடும், மீண்டும் அந்த இடத்திற்கு தாய் பச்சோந்தி திரும்பிவருவதில்லை. தன் குழந்தைகளை திரும்பி கூட பார்க்காது. சில மாதங்கள் முதல் சில வருடங்கள் கூட ஆகலாம் பச்சோந்தி குஞ்சுகள் பொரித்து வெளிவர, வெளிவந்த குஞ்சுகள் மூடியிருக்கும் மண்ணை உடைத்துவிட்டு வெளியேறி புது வாழ்கையை துவக்கும்.பறக்கும் பாம்பும் பறக்கும் ஓணானும்: இந்தோனிசியா காடுகளில் காணப்படும் பறக்கும் பாம்புகள் பறக்கும் ஓணான்களை வேட்டையாட முயற்சிக்க அவை எப்படி பறந்து பாம்புகளை ஏமாற்றுகிறது என்பதை வீடியோவில் காணுங்கள்.இரத்தத்தை பீச்சியடிக்கும் ஓணான்கள்: தன்னை உண்ணவரும் எதிரி மிருகங்களின் மேல் இரத்தத்தை பீச்சியடித்து பயமுறுத்திவிட்டு ஓடிவிடும்.
Frilled Lizard: தொகை விரித்தாடும் ஓணான்......முன் கால்களை தூக்கிக்கொண்டு பின்னங்கால்களை பயன்படுத்தி அசைந்தாடிவரும் அழகு அருமை. அருமையான வீடியோ.முதலையின் முட்டையை பாதுகாக்கும் பறவைகள்: முட்டையிட்டு முட்டைகளை பாதுகாக்கும் முதலை உணவு தேடி நீரினுள் செல்லும் போது இந்த பறவைகள் முட்டையை பாதுகாக்க போராடுவதை பார்க்கும் போது ஆச்சிரியமாக இருக்கும்.பாலைவன பாம்பும் ஓணானும்: ஆப்பிரிக்காவின் கொடிய பாலைவனத்தில் வாழும் பாம்பு மற்றும் ஓணானின் வேட்டையாடும் தந்திரம் நம்மை பிரம்மிக்க வைக்கும்.காதலியின் கரம்பிடிக்க மல்யுத்தம் போடும் Monitor Lizard: மல்யுத்தம் செய்து எது வெற்றி பெறுகிறதோ அதுதான் காதலியின் கரம்பிடிக்க முடியும்.
தண்ணீரின் மீது நடக்கும் ஓணான் (Water Walker): எதிரியிடம் இருந்து தப்புவதற்காக தண்ணீரின் மீது நடந்து செல்வது அதிசயமாக இருக்கும்.நன்றி: National Geography


Tuesday, December 16, 2008

அறிவோமா அறிவியல்: விலங்கினங்களும் அதன் வேட்டையின் தந்திரங்களும்!

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவுதான் மூல ஆதாரம். உணவுக்காக வேட்டையாடும் பொழுது மட்டும் கருணை என்பதை சிறிதும் காணமுடியாது. ஒவ்வொரு விலங்கினகளும் வெவ்வேறான முறையையை கையாண்டு உணவினை தேடிக்கொள்ளும்.


Albatross Vs Tiger Shark:
குஞ்சு பொரித்து வளர்ந்து வரும் இளம் Albatross கடல் பறவைகள் கடலில் பறந்து பழகும் தருவாயில் கடலில் உள்ள பயங்கர சுறா மீன்களால் வேட்டையாடப்படுகிறது, அப்படி வேட்டையாடும் போதுதான் அந்த இளம் பறவைகளுக்கு பறக்க வேண்டும் என்கிற வேட்கை அதிகமாகி பறக்க ஆரம்பிக்கிறது. சுமார் பத்து சதவீதம் Albatross கடல் பறவைகள் இளம் வயதிலேயே சுறா மீன்களுக்கு இரையாகிறது.Baboon குரங்குகள் Vs Flamingo பறைவைகள்: குரங்குகள் பொதுவாக இலை, தழை, பழம், மற்றும் சிறிய விலங்கினங்களை தான் வேட்டையாடும், ஆனால் இங்கு சில பபூன் குரங்குகள் ஆயிரகணக்கான பிளமிங்கோ பறவை கூட்டத்தில் புகுந்து எப்படி வேட்டையாடுகிறது என்பதை காணும் போது அதிசயமே....பெரிய பூரான் Vs சுண்டலி: பெரியா பூரான்களின் வாலில் எதிரிகளை எளிதில் மயங்கடிக்கும் அதி பயங்கர விஷ கொடுக்கு உண்டு, ஆனாலும் சளைக்காமல் மிக அருமையாக பூரானை வேட்டையாடும் சுண்டலியின் திறமை அதிசயமே....
சிறுத்தை Vs மான்குட்டி: அழாகான மான் குட்டி ஒரு தாய் மற்றும் குட்டி சிறுத்தையிடம் மாட்டி கொள்கிறது. இதை பயன்படுத்தி தாய் சிறுத்தை இளம் சிறுத்தைக்கு வேட்டைக்கு training கொடுக்கிறது.
சிங்கங்களை அசிங்கபடுத்திய முள்ளம்பன்றி: சிங்க கூட்டம் ஒரு முள்ளம்பன்றியை வேட்டையாட நினைத்து ஏமாந்து போவது கண்டிப்பாக அசிங்கமே.. ஆனாலும் முள்ளம்பன்றியின் துணிவை நாம் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
White-Bellied Sea eagle Vs Sea snake: உலகின் மிக கொடிய விஷம் உடைய விலங்கு கடல் பாம்புகளே அவற்றை கடல் கழுகு மிக சாமார்த்தியமாக வேட்டையாடி தனது குஞ்சுகளுக்கு உணவூட்டும்.நன்றி: www.nationalgeography.com

Monday, December 15, 2008

அறிவோமா அறிவியல்: விலங்குகளின் தாய்மை!

உலகின் மிக பெரிய மகிழ்ச்சியான கணம் தாய்மையை உணரும் அந்த தருணம் தான். அதுவும் விலங்கினங்கள் தாய்மையை போற்றும் பண்பு இவ்வுலகில் ஈடு இணை இல்லாதது. இங்கு நாம் சில விலங்குகளின் தாய்மையின் மேன்மையை காண்போம்.

கண்டிப்பாக அனைத்து வீடியோகளையும் காணுங்கள்

வால்ரசும் (Walrus) அதன் குட்டியும்: பிறந்து ஒருமணி நேரமே ஆன வால்ரஸ் குட்டியை அதன் தாய் அதன் கூட்டத்தில் இருந்து தனியே விலகி அழைத்து வந்துவிடும், ஏன்னென்றால் கூட்டம் இருக்கும் இடத்தை தேடித்தான் பிற எதிரி விலங்குகள் வரும், எனவே குட்டியை காப்பாற்ற வேண்டி தனியே அழைத்து வந்துவிடும். இப்படியே இரண்டுவாரம் கழிந்த பின் மற்றொரு பெண் வால்ரஸ் தாயுடன் இணைந்து கவனித்து கொள்ளும். அது குட்டியை அணைத்து கொள்வது மனிதர்கள் தனது குழந்தையை அணைத்து கொள்வது போலவே இருக்கும்.
தன் குட்டியை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றும் Gemsbok வீரத்தாய்: இரையை தேடி வரும் இரு இளம் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்ட தனது தனது குட்டியை வீரத்துடன் போராடி காப்பாற்றும் முயற்சி தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது.
யானை சீலும் (Elephant seal) அதன் பிரசவமும்: இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் வாழும் சீல் குட்டியை பிரசவிப்பதும், குட்டியை பேணுவதும் அருமை.மரவாத்தும் (Wood Duck)அதன் குஞ்சுகளும்: தாய் மர வாத்து தனது முட்டையை மரங்களில் உள்ள பொந்துகளில் இட்டு 30 நாட்கள் அடைகாக்கும். குஞ்சுகள் பொரித்து வெளி வந்து 12 மணிநேரத்தில் தாய் அழைத்ததும், தனது தாயை கண்டுகொண்டு சுமார் 15 அடி உயரம் உள்ள மரத்தில் இருந்து திறமையாக நீரில் குத்தித்து தாயுடன் நீந்தி செல்லும் அழகே அழகுதான்.
Saturday, December 13, 2008

அறிவோமா அறிவியல்: அனகோண்டா சில வினோதங்கள்!


பாஞ்சாலி அனகோண்டா (Breeding ball): இனபெருக்கத்துக்கு தயாராகும் முறை மிகவும் வித்தியாசமானது, ஒரு பெண் அனகோண்டாவை பல ஆண் (சில நேரங்களில் 12) அனகொண்டாக்கள் ஒரே நேரத்தில் இணைய துடிக்கும், அனைத்து ஆண் அனகொண்டாவும் பந்து போல பெண் அனகோண்டாவை பிணைந்து கொள்ளும். ஆனால் அதில் ஒரே ஒரு ஆண் மட்டுமே இணையும். இந்த வீடியோவில் ஒரு அதிசய நிகழ்வை நீங்கள் காணலாம், அதாவது அனகோண்டாவின் காலை. (இதைதான் பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களோ)
அனகோண்டாவின் வேட்டை: கருவை சுமக்கும் பெண் அனகொண்டாகள் சுமார் ஏழு மாதங்கள் வரை உணவு அருந்தாது அதாவது குட்டிகள் பிறக்கும் வரை, எனவே இதற்க்கு தேவை ஒரு அருமையான உணவு வேட்டை, எனவே உலகின் மிக பெரிய எலி இனமான Capybara -வை தேர்ந்து எடுத்து கொன்று அதனை சாப்பிடும்.
அனகோண்டா பிறப்பு: பெரும்பான்மையான பாம்பினங்கள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும், சில பாம்பினங்கள் குட்டி போடும், அனகோண்டாவும் குட்டி போடும் இனத்தை சார்ந்ததுதான், ஒரு நேரத்தில் சுமார் நாற்பது குட்டிகள் வரை ஈனும் (Video). அதில் இளம் குட்டிகள் உயிர் தப்பி பலிப்பது மிக குறைவே. இந்த வீடியோவில் பிறந்த குட்டிகளை ப்ராணா எனப்படும் மீன்களும், பூனையின விலங்குகளும் எப்படி வேட்டையாடி அவற்றை கொன்று விடுகின்றன என்பதை காணலாம்.விஞ்ஞானியை கடித்த அனகோண்டா: விஷ தன்மை இல்லாத இந்த பாம்பு ஒரு விஞ்ஞானியை கடிக்கும் காட்சி....
கொசுறு: தற்பொழுது தமிழகத்தை ஆட்டிபடைக்கும் இருதலை மணியன்........


Friday, December 12, 2008

அறிவோமா அறிவியல்: விலங்கியல் வினோதங்கள்!

சுமை தூக்கும் நண்டுகள் (Carrier Crab): இந்தோனிசியா கடலில் காணப்படும் சில நண்டு வகைகள் தனது முதுகில் பிற உயிரினங்களை சுமந்து சென்று அவை வேட்டையாடி உண்ணும் உணவை பெற்று கொண்டு அவற்றிக்கு ஒரு இடத்தில் இருந்த இன்னொரு இடத்திற்கு செல்ல உதவி செய்யும். இரண்டு உயிரினங்களும் பயன்பெற்று கொள்ளும்.மண்ணில் மறைந்து கொள்ளும் சிப்பிகள்: பொதுவாக சிப்பிகளுக்கு மூளை கிடையாது, ஆனால் அவை பெரிய sting ray போன்ற மீன்களிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக மண்ணில் புதைந்து கொள்வது அதிசயமே, இருந்தாலும் sting ray - கள் அதையும் தோண்டி பிடித்து உண்ணுகின்றன.கொடிய கடல் தாமரையும் சில மீன்களும்: பொதுவாக கடல் தாமரையில் உள்ள நீட்சிகளில் பிற சிறிய கடல் உயிரினங்களை கொல்லும் அளவுக்கு விசத்தை சுரக்கும். எனவே இதன் அருகில் எந்த விலங்கினகளும் வருவதில்லை. இதையே பயன்படுத்தி Clownfish எனப்படும் மீன் கடல் தாமரை நீட்சிகளுக்குள் ஒளிந்து கொண்டு மாற்ற எதிரிகளிடம் இருந்து தப்பித்து கொள்ளும். கடல் தாமரைகள் இந்த மீன்களுக்கு மட்டும் விசத்தை பயன்படுத்தாமல் பாதுகாத்து கொள்ளும். ஏனென்றால் இவை பிறந்ததிலிருந்தே கடல் தாமரைகளுடன் வாழ்வதால்.பவள பாறைகளின் இனபெருக்கம்: ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரே நேரத்தில் அனைத்து பவள பாறைகளும் விந்துக்களையும் கருமுட்டைகளையும் வெளியிடும். இவை இணைந்து புதிய உயிரினமாக உருபெற்று பல நூறு கிலோ மீட்டர்கள் சென்று கடலின் அடிபகுதியில் புதிய காலணியை உருவாக்கும். இப்படி உருவான பவள பாறைதான் ஆஸ்திரேலியாவில் காணப்படும் 2500 கிலோ மீட்டர் நீளம் உள்ள பவள பாறை காலணிகள்.கடல் வெள்ளரியும் அதன் புத்திசாலிதனமும்: மண்ணில் புதைந்து கொண்டு எதிரிகளிடம் இருந்து எப்படி தப்பித்து கொள்ளுகிறது எனபதையும், அதன் நீட்சிகளை பயன்படுத்தி உணவு தேடி எப்படி உண்ணுகிறது என்பதையும் காணும் போது ஆச்சிரியமாக இருக்கும்.மின் விளக்கு பொருத்திய ஜெல்லி Plankton : மிக நுண்ணிய உயிரினங்களை மிக அருகில் காணும் போது அதிசயமே!கடல் அரக்கன்: வேற ஒன்றும் இல்லை சாதாரண சிப்பிகள் தான், இவை சுமார் 250 கிலோ எடை வரை வளரும், மிக பெரிய ஓடுகளின் வாயை திறந்து வைத்திருக்கும் போது மனிதர்கள் மாட்டிகொண்டால் கூட பெரிய இழப்புகள் ஏற்படும்.


கடல் வெள்ளரியின் பின் புறத்தின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் மீன்: கடலின் அடிபகுதியில் வாழும் இந்த மீன்கள் அருகில் உள்ள கடல் தாவரங்களை போல் மிமிகிரி செய்து கொண்டு வாழும், ஏதேனும் எதிரிகள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள கடல் வெள்ளரியின் பின்புறத்தின் உள்ளே சென்றுவிடும், இது கடல் வெள்ளரிக்கு கூட தெரியாது.பிடித்திருந்தால் பின்னோட்டம் போடுங்கள்...இது போல் நிறைய எழுதுகிறேன்....

Thursday, December 11, 2008

அறிவோமா அறிவியல்:கொரில்லாக்கள் சில வினோதங்கள்!

பூமியில் வாழும் மிகப்பெரிய மனிதர்களின் மூதாதையர்கள் (Primates) கொரில்லாகள்தான். நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சுமார் 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும். கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடிகள் வரை நீளும். இவை பொதுவாக நான்கு முதல் எட்டு மனிதர்களின் பலத்திற்கு சமமான பலத்தினை பெற்றிருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாகளை விட உருவத்தில் பாதி அளவுதான் இருக்கும்.

Adult male and female Gorillas

கொரில்லாக்கள் மனிதர்களை போல் கை மற்றும் கால்களில் தலா பத்து விரல்களையும், கண்கள் மனிதர்களை போல் முன்னோக்கிய பார்வையும், 32 பற்களையும் பெற்றிருக்கும். ஆனால் கால்களை விட கைகள் மிக நீளமாகவும் அதிக தசைகளையும், கைகளில் உள்ள விரல்களை போல் கால்களிலும் இருக்கும். Adult கொரில்லாக்களின் (Age-15) முதுகில் உள்ள ரோமங்கள் வெளிர்நிறத்தில் (silverback) மாறிவிடும்.

கொரில்லாகளால் மனிதர்கள் போல் கைகளை ஊன்றாமல் நடக்க முடியும் ஆனால் அவை அவ்வாறு நடக்க விரும்புவதில்லை. இவைகளுக்கு கோபமும் எரிச்சலும் வரும்போது மட்டுமே கைகளை தூக்கி நெஞ்சில் அடித்து பயங்கரமாக சத்தமிடும்.
கொரில்லாக்கள் பொதுவாக 50 வருடங்கள் வரை உயிர்வாழும். இதன் குட்டிகள் மிக சிறியவையாக 2 கிலோ எடையே இருக்கும். குட்டிகள் பொதுவாக 3 வருடங்கள் வரை தாயை சார்ந்தே வாழும் ஆண் கொரில்லாக்கள் 12-13 வருடத்திலும் பெண் கொரில்லாக்கள் 11-12 வருடத்திலும் பருவ வயதை எட்டும். கூட்டம் கூட்டாமாக வாழும் இவை இளம் வயது கொரில்லாகளுக்கு உணவு சேகரிக்கும் முறை, குழந்தை பரிமாரிப்பு, தாங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றை கற்று கொடுக்கும்.

கொரில்லாக்கள் உடல் அசைவுகள், சத்தம், முக மாற்றத்தின் மூலமாக பேசிக்கொள்ளும். மனிதர்களின் சத்தத்தை போல் சத்தம் போடமுடியாது, ஆனால் நம் கற்றுகொடுத்தால் செய்கைகளையும், நாம் பேசும் மொழியையும் அறிந்து செயல்படும்.
கொரில்லாக்கள் மிகவும் புத்திசாலியானது. அவை நம்மைபோல எல்லாவிதமான Emotion -களையும் ( love, hate, fear, grief, joy, greed, generosity, pride, shame, empathy, and jealousy) பகிர்ந்துகொள்ளும். கொரில்லாக்கள் நம்மைபோல் சிரிக்கும், சத்தம் போட்டு அழும் ஆனால் அழும்போது கண்ணீர் வராது.

Crying Gorillas

Smiling Gorilla

கொரில்லா குடும்பத்தில் ஒரு Silverback, பிரச்சனை செய்யாத தன்மையுடைய பலம் வாய்ந்த ஒரு ஆண் கொரில்லா, வயதுக்கு வாராத ஒரு ஆணும் (8-13 years old) மூன்று அல்லது நான்கு வயதுக்கு வந்த பெண் கொரில்லாவும், 5 -8 வயதுக்கு வராத பெண் கொரில்லாகளும் இருக்கும். சிலநேரங்களில் குடும்பங்கள் இதைவிட சிறியதாகவும், பெரியதாகவும் இருக்கலாம். சில நேரம் இளம் ஆண் கொரில்லாக்கள் கூட்டமாக தனியாகவும் சுற்றிகொண்டிருக்கும்.

ஒரு கொரில்லா குடும்பம்
கொரில்லாக்கள் இரவுநேரம் 13 மணி நேரமும், மத்திய வேளைகளில் சிறிது நேரமும் தூங்கும், மாற்ற நேரங்களில் உணவை தேடி உண்டுகொண்டிருக்கும். இவை பொதுவாக கிழங்கு, பழம், இலை, தளை, எறும்பு, கரையான் போன்றவற்றையும் உண்ணும். தூங்குவதற்கு வசதியாக சிறிய மரங்களில் படுக்கைகளை தயார் செய்து கொள்ளும், படுக்கைகள் springy platform போன்று இருக்கும்.
மூன்று வகையான கொரில்லாக்கள் உள்ளன அவை Western Lowland, Eastern Lowland and Mountain gorillas, இவை ஆப்ப்ரிக்காவில் வாழும் இடத்தை பொருத்து பெயரிடபட்டுள்ளது. இதில் Mountain கொரில்லாக்கள் அழியும் தருவாயில் உள்ளது, தற்சமயம் சுமார் 400-600 வரையே உயிர்வாழ்கிறது.
Mountain gorilla

Western Lowland gorilla

Eastern Lowland Gorilla

கொரில்லாக்கள் மிகவும் அமைதியானவைகள், இவைகளின் முதல் எதிரியே மனிதன்தான், இன்றும் ஆப்ரிக்காவில் இவை உணவுக்காக வேட்டையாட படுகிறது. பிற விலங்குகளை பிடிக்க இவற்றை கண்ணியில் பயன்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் விலங்கியல் பூங்ககளுக்காக பிடிக்கப்படும் குட்டி கொரில்லாகாக அதன் முழு குடும்பமும் அழிக்கபட்டுவிடும் ஏனென்றால் முழு குடும்பமும் அந்த குட்டிக்காக போராடுவதால்தான்.


மாமிசத்துகாக கொல்லபட்ட கொரில்லாக்கள் (கண்களில் கண்ணீரை வரவளைக்கும் கொடூரம்)


இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் ..............

Wednesday, December 10, 2008

உங்களுக்கு தெரியுமா?

மழை துளியின் வேகம் என்ன தெரியுமா சராசரியாக மணிக்கு 12 கிலோமீட்டர் வேகம் (12Km/h).

சராசரியாக ஒரு பெண் ஒரு நாளைக்கு வார்த்தைகள் 7000 பேசுகிறார்கள் ஆனால் ஆண்கள் சராசரியாக 2000 வார்த்தைகளே பேசுகிறார்கள்.

சராசரியாக ஒரு மனிதனுக்கு 1,44, 000 கொசுக்கள் என்கிற விகித்தில் உலகில் இருக்கிறது.


உருளை கிழங்குக்கு மனிதர்களை விட அதிக குரோமோசோம்கள் அதாவது மனிதனை விட இரண்டு குரோமோசோம்கள் அதிகம் மனிதனுக்கு 46 உருளை கிழங்குக்கு 48.

குழந்தைகளுக்கு ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை கண்களில் இருந்து கண்ணீர் வராது.பழங்காலத்தில் சீனர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அரை கிலோ உப்பை தின்பார்கள்.

உலகின் மிக நீளமான தெரு கனடா நாட்டில் உள்ள டோரோண்டோ நகரில் உள்ள Yonge Street தான் இதன் நீளம் 1896 கிலோமீட்டர்கள், இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

உலகின் மிக பழமையான ஜனநாயக நாடு Iceland-தான்நாம் ஒவ்வொரு முறை தும்மும் போதும் நம் மூளையில் சில செல்கள் இறக்கின்றன.


பூமி சூரியனை சுற்றும் வேகம் என்ன தெரியுமா 660,000 miles/h

அந்த காலத்தில் கை குலுக்கி கொள்வது கையில் ஆய்தம் இல்லை என்பதை தெரியபடுத்தவே.

அறிவாளிகளின் முடியில் அதிக அளவு துத்தநாகமும் தாமிரமும் இருக்கும்.

பழங்கால கிரேக்க நாட்டில் காதலை தெரியப்படுத்த பெண்களை நோக்கி ஆப்பிளால் எறியவேண்டும் பழத்தை பிடித்தால் காதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.
தேன் ஏன் தெரியுமா எளிதில் ஜீரணம் ஆகிறது அது ஏற்கனவே தேனியால் ஜீரணிக்க பட்டுவிட்டதால்.

தும்மும் பொது ஏன் தெரியுமா மற்றவர்கள் நம்மை வாழ்த்துகிறார்கள். நாம் தும்மும் பொது நம்முடைய இதயம் ஒரு மில்லி செகண்ட் நின்று விடுவதால்.Tuesday, December 9, 2008

விலங்குகள் சில வினோதங்கள்!

திமிங்கலங்களும் அதன் உணவு பழக்கமும்: நாம் எல்லாருக்கும் தெரியும் பூலோகில் வாழும் மிகப்பெரிய விலங்கினம் திமிங்கலம்களே என்று. திமிங்கலம்களில் இரண்டு வகை உண்டு ஓன்று பற்களை உடைய "toothed whales" மற்றொன்று பற்கள் இல்லாத "baleen whales".

toothed whale

பற்கள் உடைய திமிங்கலங்கள் மீன் மற்றும் பெரிய கடல் வாழ் விலங்கினங்களை உண்ணும், ஆனால் பற்கள் இரையை பிடிக்கமட்டுமே பயன்படுத்தும் அதனால் சுவைக்க முடியாது.

ஆனால் பற்கள் இல்லாத திமிங்கலங்கள் கண்ணுக்கு தெரியாத "mass of plankton" மட்டுமே உண்ணும், இதன் தாடைகள் நூற்று கணக்கான அரிப்பு போன்ற தட்டுகளை கொண்டிருக்கும் இந்த பகுதியின் பெயர் தான் "baleen".
plankton அதிகமாக இருக்கும் இடத்தில் வாயை அகலமாக திறந்து மூடும் போது baleen-கள் சல்லடை போன்று plankton-களை வடிகட்டிவிடும்.

baleen whale

திமிக்ங்கலங்களுக்கு மனிதர்களை போன்றே நுரைஈரல்களால் (Lungs) சுவாசிக்கும், எனவே சுவச்சிக்கும் போது கடல் மட்டத்தின் மேல் வந்து காற்றை சுவாசிக்கும். திமிங்கலங்களால் தொடர்ந்து நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து கொண்டு கடலினுள் இருக்கும் திறனுடையவை.

நின்று கொண்டே உறங்கும் குதிரைகள்: மனிதர்களால் நின்றுகொண்டு தூங்க முடியாது கண்டிப்பாக சிறிது நேரத்தில் கிழே விழுந்துவிடுவோம். ஆனால் குதிரைகளால் நின்று கொண்டே தூங்க முடியும். இவை நின்று கொண்டு தூங்கும் போது கால்களின் முட்டுகளின் இணைப்பு lock-ஆகி விடும்.


பொதுவாக குதிரைகள் படுத்துக்கொண்டு தான் தூங்க விரும்பும் ஏனென்றால் அதன் உடலின் எடை பூமியை நோக்கி அழுத்துவதால் மூச்சு விடுவதற்கு கடினமாக இருக்கும். இருந்தாலும் குதிரைகள் பெரும்பாலும் நின்று கொண்டே தூங்குகின்றன. யானைகளாலும் நின்று கொண்டே தூங்க முடியும்.

விலங்குகளும் அவற்றின் தூக்கத்தின் அளவுகளும்:

Brown Bat: 19.9 Hours.


Giant Armadillo: 18.1 hours


Python: 18 hours
Owl Monkey: 17 hours
Infant Human: 16 hours

Tiger and Tree shrew: 15.8 hours

Squirrel: 14.9 hours
Ferret: (14.5 hours)

Three-toed Sloth: (14.4 hours)

Golden Hamster: (14.3 hours)
Lion: 13.5 hours
Gerbil: 13.1 hours

Rat:12.6 hours
Cheetah:12.1 hours
Mouse:12.1 hours
Rabbit: 11.4 hours
Jaguar: 10.8 hours

Duck: 10.8 hours
Dog: 10.6 hours
Bottle-nosed dolphin: 10.4 hours

Baboon: 10.3 hours
Chimpazee: 9.7 hours
Guinea Pig: 9.4 hours
Adult Human: 8 hours
Pig: 7.8 hours

Guppy Fish: 7 hours
Gray Seal: 6.2 hours
Elderly Human: 5.5 hours
Goat: 5.3 hours
Cow: 3.9 hours
African Elephant: 3.3 hours
Donkey: 3.1 hours
Horse: 2.9 hours
Giraffe: 1.9 hours

தமிழில் டைப் செய்ய


View My Stats