அறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது உறுப்புகள்! (Part-2)
மனித இனம் விலங்குகளில் இருந்துதான் பரிணாம முறையில் (evolution) உருவானது என்பதற்கான சில அடையாளங்கள் இன்னும் நம் உடலில் தங்கியுள்ளன இவை பொதுவாக நம் உடலில் தேவை இல்லாத உறுப்பாகத்தான் (vestigial organs) இருக்கிறது, ஏற்கனவே தேவை இல்லாத உறுப்புகள் பத்தினை பார்த்தோம் மீதி பத்து தேவை இல்லாத உறுப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
11. Vermiform Appendix: நமது பெருங்குடலின் இறுதி பகுதியில் காணப்படும் நீண்ட குழல் போன்ற தசை அமைப்புதான் அப்பன்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை அதிகபடியான தாவர செல்லுலோஸ்களை ஜீரணிக்க உதவுகிறது. அதாவது தாவர உண்ணி விலங்கினங்களுக்கு தேவையான பகுதியானது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நமது உடலிலேயே தங்கி பயனற்ற உறுப்பாக உள்ளது.
12. BODY HAIR: கண் இமை முடிகள் நமது கண்களுக்குள் வியர்வை நீர் வழியாமல் தடுக்கிறது, அதுபோல ஆண்களின் மீசை மற்றும் தாடி பெண் பாலினத்தை கவருவதற்காக உள்ளது. உடலில் உள்ள மற்ற உறுப்புகளில் ரோமங்கள் தேவை இல்லாதவையே. இவையும் குரங்கில் இருந்துதான் மனிதன் பரிணாம வளர்ச்சியில் உருவானான் என்பதின் அடையாளங்கள்தான்.
13. THIRTEENTH RIB: சிம்பன்சி மற்றும் கொரில்லாகளில் காணப்படும் இந்த எலும்பு மனித இனத்திலும் சுமார் 8 சதவீதத்தினர் பெற்றுள்ளார்கள். மனித இனத்தில் பொதுவாக 12 நெஞ்சு எலும்புகளே இருக்கும்.

14. PLANTARIS MUSCLE: புதிய மருத்துவ மாணவர்களால் தவறாக இது ஒரு நரம்பாக உணரப்படும் இந்த தசையானது குரங்கினத்தில் காணப்படும். இந்த தசை நமது உடலிலும் தங்கிவிட்டது.
15.Male Uterus: முழு வளர்ச்சியடையாத கருப்பை ஆண்களின் புராஸ்டேட்டு சுரப்பியில் தொங்கிகொண்டிருக்கும்.
16. Fifth Toe: பொதுவாக மனிதனின் மூதாதையர்கள் காலில் உள்ள அனைத்து விரல்களையும் மரத்தில் ஏறுவதற்கும், கிளைகளில் தொங்குவதற்கும் பயன்படுத்தியது. மனிதர்களில் கால் பெருவிரல் மிக முக்கியமாதாகும் அதாவது மனிதன் நடக்கும் போது நிலைதடுமாறாமல் உதவுகிறது. மற்ற விரல்கள் இதற்க்கு உதவியாக இருக்கிறது.
17. Female Vas Deferens: ஆண் இனபெருக்க மண்டலத்தில் காணப்படும் இந்த பகுதி பெண்ணின் கருப்பையின் அருகில் உபயோகம் இல்லாமல் இருக்கிறது.
18. Pramidalis Muscle: கங்காரு இன உயிரினங்களில் காணப்படும் முக்கோண தசையமைப்பனது pubic bone உடன் இணைந்து இருக்கும் இவை பொதுவாக 20 சதவீத மனிதர்களில் காணப்படுகிறது. .
19.Coccyx: நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தபின் பாலுட்டிகளின் வால் காணமல் போய்விட்டது. ஆனால் மனிதர்களின் முதுகு எலும்பு நுனியில் தற்போதும் காணப்படும் வால் எலும்புகள் தேவை இல்லாதவையே.
20.Paranasal Sinuses: நம்முடைய விலங்கின மூதாதையர்களிடம் காணப்பட இந்த வாசனை உணரும் இந்த பகுதி தற்பொழுதும் நமது மூக்கின் அருகில் அமைந்துள்ளது.

2 comments:
அருமையான பதிவு...வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
அருமையான பதிவு...வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்