Thursday, December 4, 2008

விலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள்



உங்களுக்கு தெரியுமா எறும்புகள் கட்டும் ராமர் சேது பாலம்: அடர்ந்த அமேசான் காடுகளில் உள்ள இந்த எறும்பினங்கள் கட்டும் பாலம் அதன் மூலம் ஏரி அல்லது ஆறுகளை கடக்கும் விதம், கடக்கும் போது எதிர்படும் அபாயகரமான சூழல்களை தாண்டி செல்லும் விதம், ராணி எறும்பினை பாதுகாக்கும் முறை ....கண்டிப்பாக கண்கள் பனிக்கும்.

வீடியோ வை காண இங்கே சொடுக்கவும்..


Leafcutter ant: இந்த எறும்பு எப்படி இலையை வெட்டி எடுத்து செல்கிறது என்பதை காணுங்கள்.



Ant Lion Vs Ant: Ant loin கண்ணி கட்டும் முறையும் அதில் மாட்டிக்கொள்ளும் எறும்பும்.



Super Ant: தன் எடையை விட பத்து மடங்கு அதிகமான எடையை தூக்கி கொண்டு தள்ளாடி தள்ளாடி செல்லும் அழகே தனிதான்.



பூஞ்சை விவசாயம் செய்யும் எறும்புகள்: அமேசான் காடுகளில் உள்ள leafcutter எறும்புகள் தனது கூடுகளில் பூஞ்சைகளை வளர்த்து அவை காளானாக மாறுவதற்கு முன் அறுவடை செய்து உணவாக்கிகொள்ளும் தன்மை அசாத்தியமானது.



எறும்புகளின் நத்தை வேட்டை: ஒரு நத்தையை துரத்தி துரத்தி வேட்டையாடும் முறையை காணுங்கள்.



நல்ல மேய்ப்பான் எறும்புகள்: Aphids எனப்படும் சிறிய வகை பூச்சிகளை தனது முதுகில் சுமந்து கொண்டு உணவு உள்ள செடிகளில் கொண்டு மேயவிடும் அப்பொழுது ஏதேனும் எதிரிகள் தாக்கினால் அவற்றை எறும்புகள் போராடி துரத்திவிடும். பின் அந்த aphid களின் பின்புறத்தில் காணப்படும் குழாய் போன்ற பகுதியில் வாயைவைத்து உறிந்து தனக்கு தேவையான உணவை எடுத்துகொள்ளும்.










4 comments:

Anonymous said...

அற்புதம், மனிதன் தான் சிறந்த படைப்பு, ஆற்றைவுள்ளவன் என்பதைப்பற்றியெல்லாம், சிந்திக்க வைத்தது.

Anonymous said...

survival of the fittest.. ??!!!

வடுவூர் குமார் said...

காடுகளில் எண்ணிக்கைதான் வலிமை என்று சமீபத்தில் ஒரு தொடரில் பார்த்த ஞாபகம் வந்தது.

முனைவர் இரா.குணசீலன் said...

அரிய பல செய்திகளை அறிந்துகொண்டேன்

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats