Monday, December 15, 2008

அறிவோமா அறிவியல்: விலங்குகளின் தாய்மை!

உலகின் மிக பெரிய மகிழ்ச்சியான கணம் தாய்மையை உணரும் அந்த தருணம் தான். அதுவும் விலங்கினங்கள் தாய்மையை போற்றும் பண்பு இவ்வுலகில் ஈடு இணை இல்லாதது. இங்கு நாம் சில விலங்குகளின் தாய்மையின் மேன்மையை காண்போம்.

கண்டிப்பாக அனைத்து வீடியோகளையும் காணுங்கள்

வால்ரசும் (Walrus) அதன் குட்டியும்: பிறந்து ஒருமணி நேரமே ஆன வால்ரஸ் குட்டியை அதன் தாய் அதன் கூட்டத்தில் இருந்து தனியே விலகி அழைத்து வந்துவிடும், ஏன்னென்றால் கூட்டம் இருக்கும் இடத்தை தேடித்தான் பிற எதிரி விலங்குகள் வரும், எனவே குட்டியை காப்பாற்ற வேண்டி தனியே அழைத்து வந்துவிடும். இப்படியே இரண்டுவாரம் கழிந்த பின் மற்றொரு பெண் வால்ரஸ் தாயுடன் இணைந்து கவனித்து கொள்ளும். அது குட்டியை அணைத்து கொள்வது மனிதர்கள் தனது குழந்தையை அணைத்து கொள்வது போலவே இருக்கும்.




தன் குட்டியை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றும் Gemsbok வீரத்தாய்: இரையை தேடி வரும் இரு இளம் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்ட தனது தனது குட்டியை வீரத்துடன் போராடி காப்பாற்றும் முயற்சி தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது.




யானை சீலும் (Elephant seal) அதன் பிரசவமும்: இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் வாழும் சீல் குட்டியை பிரசவிப்பதும், குட்டியை பேணுவதும் அருமை.



மரவாத்தும் (Wood Duck)அதன் குஞ்சுகளும்: தாய் மர வாத்து தனது முட்டையை மரங்களில் உள்ள பொந்துகளில் இட்டு 30 நாட்கள் அடைகாக்கும். குஞ்சுகள் பொரித்து வெளி வந்து 12 மணிநேரத்தில் தாய் அழைத்ததும், தனது தாயை கண்டுகொண்டு சுமார் 15 அடி உயரம் உள்ள மரத்தில் இருந்து திறமையாக நீரில் குத்தித்து தாயுடன் நீந்தி செல்லும் அழகே அழகுதான்.




4 comments:

Anonymous said...

i really like ur post. i never miss any of ur posts.keep doing anna..... and best wishes.

Suresh M said...

Hi,
Your posts are really good and more informative. Keep going..

Thanks,
Suresh M

Dr. சாரதி said...

Anonymous, Suresh Meenakshisundaram, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

Jayadev Das said...

அபாரம் நண்பரே, குறிப்பாக மரத்தில் இருந்து குதிக்கும் வாத்து குஞ்சுகள்.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats