Wednesday, December 17, 2008

அறிவோமா அறிவியல்: ஓணான் வகை விலங்குகளின் அதிசய உலகம்!

(அனைத்து வீடியோ வையும் கண்டிப்பாக காணுங்கள்)

பச்சோந்திகளின் இனபெருக்கம்: தாய் பச்சோந்தி முட்டைகளை இடுவதற்கு ஏதுவான ஒரு இடத்தை தேர்வுசெய்து அதில் சிறய பள்ளம் ஒன்றை தோண்டி அதில் சுமார் முப்பது முட்டைகள் வரை இடும், பின் அதன் மேல் மண்ணை போட்டு மூடிவிட்டு சென்றுவிடும், மீண்டும் அந்த இடத்திற்கு தாய் பச்சோந்தி திரும்பிவருவதில்லை. தன் குழந்தைகளை திரும்பி கூட பார்க்காது. சில மாதங்கள் முதல் சில வருடங்கள் கூட ஆகலாம் பச்சோந்தி குஞ்சுகள் பொரித்து வெளிவர, வெளிவந்த குஞ்சுகள் மூடியிருக்கும் மண்ணை உடைத்துவிட்டு வெளியேறி புது வாழ்கையை துவக்கும்.



பறக்கும் பாம்பும் பறக்கும் ஓணானும்: இந்தோனிசியா காடுகளில் காணப்படும் பறக்கும் பாம்புகள் பறக்கும் ஓணான்களை வேட்டையாட முயற்சிக்க அவை எப்படி பறந்து பாம்புகளை ஏமாற்றுகிறது என்பதை வீடியோவில் காணுங்கள்.



இரத்தத்தை பீச்சியடிக்கும் ஓணான்கள்: தன்னை உண்ணவரும் எதிரி மிருகங்களின் மேல் இரத்தத்தை பீச்சியடித்து பயமுறுத்திவிட்டு ஓடிவிடும்.




Frilled Lizard: தொகை விரித்தாடும் ஓணான்......முன் கால்களை தூக்கிக்கொண்டு பின்னங்கால்களை பயன்படுத்தி அசைந்தாடிவரும் அழகு அருமை. அருமையான வீடியோ.



முதலையின் முட்டையை பாதுகாக்கும் பறவைகள்: முட்டையிட்டு முட்டைகளை பாதுகாக்கும் முதலை உணவு தேடி நீரினுள் செல்லும் போது இந்த பறவைகள் முட்டையை பாதுகாக்க போராடுவதை பார்க்கும் போது ஆச்சிரியமாக இருக்கும்.



பாலைவன பாம்பும் ஓணானும்: ஆப்பிரிக்காவின் கொடிய பாலைவனத்தில் வாழும் பாம்பு மற்றும் ஓணானின் வேட்டையாடும் தந்திரம் நம்மை பிரம்மிக்க வைக்கும்.



காதலியின் கரம்பிடிக்க மல்யுத்தம் போடும் Monitor Lizard: மல்யுத்தம் செய்து எது வெற்றி பெறுகிறதோ அதுதான் காதலியின் கரம்பிடிக்க முடியும்.




தண்ணீரின் மீது நடக்கும் ஓணான் (Water Walker): எதிரியிடம் இருந்து தப்புவதற்காக தண்ணீரின் மீது நடந்து செல்வது அதிசயமாக இருக்கும்.



நன்றி: National Geography


No comments:

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats