அறிவோமா அறிவியல்: விலங்கியல் வினோதங்கள்!
சுமை தூக்கும் நண்டுகள் (Carrier Crab): இந்தோனிசியா கடலில் காணப்படும் சில நண்டு வகைகள் தனது முதுகில் பிற உயிரினங்களை சுமந்து சென்று அவை வேட்டையாடி உண்ணும் உணவை பெற்று கொண்டு அவற்றிக்கு ஒரு இடத்தில் இருந்த இன்னொரு இடத்திற்கு செல்ல உதவி செய்யும். இரண்டு உயிரினங்களும் பயன்பெற்று கொள்ளும்.
மண்ணில் மறைந்து கொள்ளும் சிப்பிகள்: பொதுவாக சிப்பிகளுக்கு மூளை கிடையாது, ஆனால் அவை பெரிய sting ray போன்ற மீன்களிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக மண்ணில் புதைந்து கொள்வது அதிசயமே, இருந்தாலும் sting ray - கள் அதையும் தோண்டி பிடித்து உண்ணுகின்றன.
கொடிய கடல் தாமரையும் சில மீன்களும்: பொதுவாக கடல் தாமரையில் உள்ள நீட்சிகளில் பிற சிறிய கடல் உயிரினங்களை கொல்லும் அளவுக்கு விசத்தை சுரக்கும். எனவே இதன் அருகில் எந்த விலங்கினகளும் வருவதில்லை. இதையே பயன்படுத்தி Clownfish எனப்படும் மீன் கடல் தாமரை நீட்சிகளுக்குள் ஒளிந்து கொண்டு மாற்ற எதிரிகளிடம் இருந்து தப்பித்து கொள்ளும். கடல் தாமரைகள் இந்த மீன்களுக்கு மட்டும் விசத்தை பயன்படுத்தாமல் பாதுகாத்து கொள்ளும். ஏனென்றால் இவை பிறந்ததிலிருந்தே கடல் தாமரைகளுடன் வாழ்வதால்.
பவள பாறைகளின் இனபெருக்கம்: ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரே நேரத்தில் அனைத்து பவள பாறைகளும் விந்துக்களையும் கருமுட்டைகளையும் வெளியிடும். இவை இணைந்து புதிய உயிரினமாக உருபெற்று பல நூறு கிலோ மீட்டர்கள் சென்று கடலின் அடிபகுதியில் புதிய காலணியை உருவாக்கும். இப்படி உருவான பவள பாறைதான் ஆஸ்திரேலியாவில் காணப்படும் 2500 கிலோ மீட்டர் நீளம் உள்ள பவள பாறை காலணிகள்.
கடல் வெள்ளரியும் அதன் புத்திசாலிதனமும்: மண்ணில் புதைந்து கொண்டு எதிரிகளிடம் இருந்து எப்படி தப்பித்து கொள்ளுகிறது எனபதையும், அதன் நீட்சிகளை பயன்படுத்தி உணவு தேடி எப்படி உண்ணுகிறது என்பதையும் காணும் போது ஆச்சிரியமாக இருக்கும்.
மின் விளக்கு பொருத்திய ஜெல்லி Plankton : மிக நுண்ணிய உயிரினங்களை மிக அருகில் காணும் போது அதிசயமே!
கடல் அரக்கன்: வேற ஒன்றும் இல்லை சாதாரண சிப்பிகள் தான், இவை சுமார் 250 கிலோ எடை வரை வளரும், மிக பெரிய ஓடுகளின் வாயை திறந்து வைத்திருக்கும் போது மனிதர்கள் மாட்டிகொண்டால் கூட பெரிய இழப்புகள் ஏற்படும்.
கடல் வெள்ளரியின் பின் புறத்தின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் மீன்: கடலின் அடிபகுதியில் வாழும் இந்த மீன்கள் அருகில் உள்ள கடல் தாவரங்களை போல் மிமிகிரி செய்து கொண்டு வாழும், ஏதேனும் எதிரிகள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள கடல் வெள்ளரியின் பின்புறத்தின் உள்ளே சென்றுவிடும், இது கடல் வெள்ளரிக்கு கூட தெரியாது.
பிடித்திருந்தால் பின்னோட்டம் போடுங்கள்...இது போல் நிறைய எழுதுகிறேன்....
5 comments:
நன்றாக இருக்கு, இன்னும் சொல்லுங்கள்.
ஐயா உங்களுடைய அறிவியலை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? யாருக்காகவும் உங்களுக்காகவும் உங்கள் ரசிகர்களுக்காகவும் எழுதுங்கள் நன்றி
நன்றாக உள்ளது. தொடருங்கள் தொய்வின்றி....நன்றி
உங்களுடைய அனைத்தும் படித்து வருகிறேன் , தொடரட்டும் உங்கள் அறிவியல் பயணம்,
வடுவூர் குமார்,வடிவேலன்.ஆர், கார்த்திகேயன், Felix Raj தாங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.....
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்