Thursday, October 23, 2008

தலைவிரி கோலமாய் தமிழன்னை.. தாங்கமுடியவில்லையே !


தமிழ் பண்டார வன்னியும் மீனவனும் செட்டியும் தேவனும்
நாடானும் வெள்ளாளனும் கருஞ்சிருத்தைகளுமாய்
என் தமிழ் கொடிகளை பிறந்த வீட்டிலேயே

கருவறுக்கும் உரிமையை கொடுத்தது யாரடா
சிங்கத்துக்கும் அரக்கனுக்குமாய் பிறந்த
சிங்களவனே
..

உனக்கு பயந்து சிறகுகள் ஒடிந்து போய்
குடலறுபட்டு குற்றுயிராய்
குவலயத்துள் எங்கெங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறது
என் இலங்கை தமி
ழ்குடிகள் ………

தலைவிரி கோலத்தில் என் தாய் தமிழ் நிற்பதை
தனையன் என்னால் பார்த்து அழத்தான் முடிதிறது...
அழுவதற்கு என்று தமிழா உன்னோடு

கலைஞரும்
, வைகோவும்,
திருமாவும்
, ராமதாசுவும், சீமானும், அமீரும்
என தம்பிகள்
12 கோடி பேர் உண்டு உனக்கு ………
இங்கு சில அத்வைத பூனைகள் மட்டும் நடிக்கின்றன
அழுவது போல..........

அவை ஆரிய பூனைகள் என்பது
உனக்கும் எனக்குமே தெரியும் தமிழா
..

நானும் இந்தியனாக மட்டுமே நடத்தப்படுகிறேன்,
எனென்றால் நான் வெறும் தமிழனாயிற்றே..
!
சீக்கியனை அடித்தால் சீருகிறாய்
வங்காளியை அடித்தால் வாடிப்போய்விடுகிறாய்
தமிழனை அடித்தால் மட்டும்

தடுக்க மறுக்கிறாயே
..
நீ எனக்கு எப்படி தமயனாக இருக்க தகுதி உடையவன்
?

எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன
எப்படி ...?
உன்னை காப்பாற்றுவேன்?? அய்யகோ
….
எம் கைகள் சிறகாகினால்
இப்போதே அங்கு வந்துவிடுவோம் குருவிகளாக பறந்து!

இங்கும் சிலர் உன் அழிவைக்கண்டு
குலவைடுகிறார்கள் கூட்டமாய் அமர்ந்து..

திராவிட இனம் அழிவதை
தெலுங்கனும்
மலையாளியும்
கன்னடனுமாய் வேடிக்கை பார்ப்பது
விநோதமாக தான் உள்ளது..

நெஞ்சு பொறுக்குதில்லை ..
இந்தியனே முன்னின்று கொல்கிறான், என் தாய் தமிழனை...!
நியாயம் கேட்கிறேன் ..யார் பதில் சொல்வார்..?
எரிகிறது என் ரத்தம்!!


-------------------நாஞ்சில் நட்டான் Dr. E. M. சங்கர்

2 comments:

Anonymous said...

..../அழுவதற்கு என்று தமிழா உன்னோடு
கலைஞரும், வைகோவும்,
திருமாவும், ராமதாசுவும், சீமானும், அமீரும்
என தம்பிகள் 12 கோடி பேர் உண்டு உனக்கு ...\

கலைஞன்,திருமா, ராமதாசு...? மத்திய அரசிடம் கேட்டு அழுபவாகள் இந்த வரிசை கொஞ்சம் இடிக்கிறது. அருமையான கவிதை. கவிதையுடன் நில்லாமல் நீங்களாகவே கட்டிவைத்திருக்கும் உங்கள் கைகளை அவிழ்த்துக் கொண்டு வெளிவாருங்கள். நீங்கள் அரசில் வியாதி இல்லையே.டாக்டர்.சங்கர்

யாழ்

Anonymous said...

..../அழுவதற்கு என்று தமிழா உன்னோடு
கலைஞரும்,திருமாவும், ராமதாசுவும்..../ அட இவர்கள் அழுவது தமிழருக்கா அல்லது தமது நாற்காலிகளுக்கா? அருமையான கவிதை நன்றி தமிழக சகோதரனே. நீ விழி்த்தெழுந்தால் நிச்சயம் ஈழத்தமிழர் நிம்மதியாய் வாழ்வர். யாழ்

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats