Monday, October 20, 2008

தமிழா! உடனடியாக தேவை இந்த ஒற்றுமைதான்.....'

தென் ஆப்ரிக்காவில் உள்ள க்ருகேர் தேசிய விலங்கியல் பூங்காவில் (Kruger National Park) பலவிதமான காட்டுஉயிரினங்கள் இயற்கையான சூழ்நிலையில் வாழ்ந்துவருகிறது. சரி இனி நான் சொல்லவந்ததை சொல்கிறேன்.

ஒருநாள் ஒரு பெரிய காட்டுஎருமை கூட்டத்தில் இருந்து தனது குட்டியுடன் தாய் மற்றும் தந்தை காட்டுஎருமை மேய்வதற்காக ஒரு ஆற்றின் ஓரமாக செல்கிறது. அப்பொழுது அவற்றிக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான் குட்டிஎருமை சிங்கங்களுக்கு இரையாகும் என்று.
சற்று தொலைவில் இரையை எதிர்நோக்கி ஒரு காட்டுராஜா கூட்டம். அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த குட்டி எருமையை குறி வைத்தாகிவிட்டது. மெதுவாக குட்டியை நோக்கி நகர தாய் மற்றும் தந்தை எருமை தனது குட்டியை கேடயம் போல் பாதுகாத்து அழைத்துக்கொண்டு ஓடுகிறது. என்னதான் ஓடினாலும் சிங்ககளின் சூட்சிவலையில் இருந்து தப்பமுடியாமல் பக்கத்தில் இருந்த ஆற்றினுள் தவறிவிழ சிங்கங்கள் சூழ்ந்துகொண்ட்டு அதை இரையாக்க அதன் கழுத்தை கவ்வி கொண்டு மேல்வர முயற்சி செய்கிறது, ஆற்றினுள் இருந்து ஒரு முதலையும் தன் பங்கிற்கு அந்த குட்டி எருமையை பிடித்து இழுக்க சிங்கங்கள் வெற்றிபெற்று கரையில் கொண்டுவந்து அதனை கடித்து கொதறிகொண்டு இருக்கிறது.
அப்பொழ்துதான் ஒரு அதிசயம் நிகழ்கிறது. குட்டியை பிரிந்த தாயும் தந்தை எருமையும் தனது கூட்டத்தை அழைத்
துவந்து அந்த சிங்ககங்களை படுத்திய பாடினை இந்த வீடியோவில் காணவும்.

என் ஈழத்து தமிழ் சொந்தங்களே உங்களையும் இதே போன்று நம் தமிழ் சமுதாயம் ஓன்றுஇணைந்து பாதுகாக்கும். அதற்கான சூழ்நிலைதான் தற்பொழுது தமிழகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் தொடந்து நடந்துவருகிறது.

தமிழா இதுதான் தருணம்..... 5 அறிவு காட்டுஎருமைக்கு இருக்கும் இனஉணர்வு நமக்கும் வரட்டும். நம் ஈழத்து தமிழ் சொந்தங்கள் வாழ ஒன்றிணைவோம்.

3 comments:

Anonymous said...

ஏற்கனவே இந்த வீடியோவ நான் பார்த்திருக்கேன்.

விடாமல் முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த என் குழந்தைகளுக்கு காட்டியுள்ளேன்.

மீண்டும் பார்க்கத் தந்தற்கு நன்றி.

Anonymous said...

please remove 'word verification'. it is a disturbance.

Dr. சாரதி said...

வடகரை வேலன் அவர்களுக்கு நன்றி. How to remove word verification. Could you please let me know?

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats