Tuesday, October 21, 2008

அறிவோமா அறிவியல் வினோதம்
1. மரம்கொத்தி பறவை ஒரு செகண்டுக்கு 20 முறை மரத்தை கொத்தும் திறனுடையது . அதிவேகம்தானே?
2. Electric eel என்னும் மீன் 650 வால்ட் மின்சார அதிர்வை வெளியிடும், நீங்கள் தொட்டுப்பார்த்தால் அப்புறம் என்ன shock தான் அடிக்கும்.
3. Dragonfly: உலகில் மிகவேகமாக பறக்கக்கூடிய பூச்சியினம் (insect) நம்ம ஊரு தட்டான் பூச்சிதான். இதன் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர். (ஆச்சரியம்தான் )
4. lobster: இது ஒரு பவுண்ட் எடையளவு (சுமார் அரைகிலோ) வளர்ச்சியடைய சுமார் ஏழு வருடம் வரையகுமாம். நாமதான் ஒரு lobster- யை ஒரு நிமிடத்தில் சாபிட்டுவிடுவோமே. 5. நன்கு வளர்ந்த கங்காருவால் ஒரே நேரத்தில் 30 அடி நீளத்தை தாண்டுமாம். அடேங்கப்பா!6. உலகில் நோய் தாக்காத ஒரே விலங்கு சுறா மீன்கள் தான், ஏனென்றல் அவைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (immune system)அதிகம். இதனுடைய நோய் எதிர்ப்பு சக்தி புற்று நோயை கூட தடுக்கும் தன்மையுடையது. (நமக்கும் இதே போல இருந்தால்...)
7. Albatross என்னும் கடல் பறவை பறக்கும் போதே தூங்கும் தன்மையுடையது.
8. எறும்புகள் தூங்குவதே இல்லை

9. Bumblebee bat: தாய்லாந்து நாட்டில் காணப்படும் இந்த வவ்வால்கள்தான் உலகில் உள்ள பாலூட்டி இனங்களில் மிகசிறியது (ஒரு நாணயத்தின் அளவே இருக்கும்)
10.ஒட்டகசிவிங்கி குட்டி பிறக்கும் பொது ஆறு அடி உயரத்தில் இருந்து கீழே விழும் (அட பாவமே!) 11. மரமேறி ஆடு தெரியுமா? மொராக்கோ நாட்டில் உள்ள ஆடுகள் மரமேறி இலை தழைகளை சாப்பிடும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.....

3 comments:

Anonymous said...

//மரமேறி ஆடு தெரியுமா? மொராக்கோ நாட்டில் உள்ள ஆடுகள் மரமேறி இலை தழைகளை சாப்பிடும். //

survival of the fittest ! தரையில் இல்லை!! எனவே...

Note : Please remove the word verification , (இதுதான் எனக்கு வந்த முதல் கமெண்ட்..!!ஹிஹிஹி.. )

Dr. சாரதி said...

ராமன் உங்களுடைய வருகைக்கு நன்றி.

ஆட்காட்டி said...

நன்றி.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats