Thursday, October 23, 2008

அறிவோமா அறிவியல் வினோதம்!

1. நம்முடைய பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினம் நீல திமிங்கலம் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனை பற்றிய சில விசித்திரமான செய்திகளை காண்போமா.


* நீல திமிகலங்களின் எடை சுமார் 170 டன் வரை இருக்கும் (அதாவது 1,70,000 கிலோகிராம்; 22 யானைகளுக்கு சமம்).
* இதயம் நம்மவூரு Hyundai Santro அளவு இருக்கும்.
* அதனுடைய மிகப்பெரிய இரத்த நாளத்தின் வழியே ஒரு மனிதனால் எளிதாக நீந்தி செல்லமுடியும்
* இதன் உணவு பழக்கம் மிகவும் வேடிக்கையானது, கண்ணுக்கு தெரியாத மிக நுண்ணிய உயிரினம் தான் இதன் உணவு, மிக முக்கியமாக Krill (சிறிய வகை இறால்) மற்றும் Zoo Plankton எனப்படும் நுண் உயிரினம் தான்.
* நீல திமிங்கலம் அழியும் தருவாயில் உள்ள ஒரு விலங்கினமாகும்.

2. மனிதனுக்கும் ஓட்டகசிவிங்கிக்கும் ஒரே எண்ணிக்கையிலே கழுத்து எலும்புகள் உள்ளது, அதாவது கழுத்து ஏழு எலும்பால் ஆனது.
3. சிங்கங்கள் உடலுறவு கொள்ளவேண்டும் என்று நினைத்துவிட்டால் ஒரு வாரம் தொடந்து 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ளும். ஆனால் பாவம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் அந்த எண்ணமே அதற்கு வருமாம்.
4. Clam எனப்படும் மெல்லுடலி வகையை சார்ந்த சிப்பிகள் பிறக்கும் பொது ஆணாகவே பிறக்கும். பெண்ணாக விரும்பும் பொது அவை பெண்ணாக மாறிக்கொள்ளும். அனால் திரும்பவும் ஆணாக மாற முடியாது.5. Roadrunners எனப்படும் பறவை பறப்பதைவிட நடக்கவும் ஓடவும் தான் விரும்புகிறது. இவை ஒரு மணிநேரத்திற்கு 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் ஓடும் திறனுடையது.
6. Angler fish எனப்படும் மீன் இனத்தில் உள்ள ஆண் மீன்கள் எப்பொழுதும் பெண் மீன்களின் மேல் ஒட்டியே இருக்கும். ஆண் மீன்கள் பிறந்தவுடனே பெண் மீன்களை கண்டுபிடித்து ஒட்டி கொள்ளும் இல்லையேல் அவை உடனே உயிர் இழந்துவிடும். இங்குதான் ஆண்டவனின் படைப்பின் அதிசயம் ஆண் மீன்களுக்கு பெண் மீன்களை அறிந்துகொள்ளும் விதமாக அதன் மூளையில் உள்ள ஆல்பாக்டோரி லோப் மிக வேகமாக பெண் மீனை அதன் வாசனையின் மூலமாக உணர்ந்துகொண்டு பெண் மீனின் மேல் வந்து ஒட்டிக்கொள்ளும் . ஆண் மீன்களின் இரத்த நாளங்கள் பெண் மீனின் இரத்த நாளங்களுடன் இணைந்துவிடும் இதன் மூலம் தனக்கு தேவையான உணவினை பெண் மீனின் இரத்ததில் இருந்து எடுத்துக்கொள்ளும்.
7. Capybara: தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த எலிதான் எலி இனத்தின் மிக பெரிய உயிரினமாகும். இவை சுமார் நாற்பது கிலோ வரை எடையுள்ளது.

8. Bengal Tigers தான் பூனையினங்களில் மிகவும் தண்ணீரை விரும்பும் புலியினமாகும். இவை தண்ணீரில் கூட விரட்டி சென்று தனது உணவினை பிடித்துக்கொள்ளும் திறனுடையது.


9. ஜெல்லி மீன்கள் தன் உடலில் 95% தண்ணீரையே கொண்டுள்ளது.

10. Panda எனப்படும் கரடி குட்டிகள் பிறக்கும் பொது சுண்டெலியை விட சின்னதாகதான் இருக்கும் (இதன் எடை சுமார் 150 கிராம் தான்). ஆனால் நன்கு வளர்ந்த பாண்டா கரடி 115 கிலோ எடை இருக்கும்.


5 comments:

Keddavan said...

மிகவும் சுவாரசியமான பதிவுகள்..பயனுள்ள பதிவுகள்..

Keddavan said...

இன்னும் இதைப்போன்ற பதிவுகளை தொடருங்கள்..

Vadielan R said...

நண்பரே நீங்கள் அறிவியல் ஆயிரம் அல்ல அறிவியல் ஜீவி வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்

Dr. சாரதி said...

Rajeepan, வடிவேலன் .ஆர் நன்றி தங்களின் அன்பான ஆதரவு என்னை மென்மேலும் உற்சாகபடுத்துகிறது.

Srigurusankar said...

நல்ல தகவல்கள். என் குழந்தைகளுக்கு சொல்லித்தர முடியும். நன்றி.
ஸ்ரீகுருசங்கர்.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats