Saturday, October 25, 2008

அறிவோமா அறிவியல் ஆயிரம்: புத்திசாலியான விலங்குகள்!
உலகில் மனிதன்தான் மிகபுத்திசாலியான உயிரினம் என்று எல்லோராலும் ஏற்றுகொள்ளபட்டாலும் மாற்ற விலங்கினகளும் நம்மைபோன்று புத்திசாலிகள் தான் என்று பல விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது . நம்மால் கற்றுக்கொள்ளமுடியும், பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியும் , சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்திக்க முடியும், சுக துக்க உணர்வுகளை வெளிபடுதமுடியும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும் ஆகவே மனித இனம்தான் புத்திசாலிகள் என்று நினைத்துகொண்டிருகிறோம் ஆனால் விலங்கினகளும் மிகசிறந்த புத்திசாலிகள்தான் என்பது இன்றைய பதிவில் காணலாம்.

Squid and octopus: கடலில் வாழும் உயிரினங்களில் புத்திசாலியான விலங்குகளில் இவை முக்கிய பங்குவகிக்கிறது. ஆக்டோபஸ்கள் தங்களுக்கு தேவையான கூடுகளை கடலில் கிடைக்கும் கழிவு பொருள்களை கொண்டு கட்டும் அதுவும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறத்தை தேர்ந்துஎடுக்கும். தன் உடலில் உள்ள நிறத்தினை மிகவேகமாக மாற்றும் தன்மையுடையது.Sheep: பலவருட ஆராய்ச்சிக்கு பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஆடுகள் சிறந்த புத்திசாலிகள் கண்டுபிடித்துள்ளார்கள். ஆடுகளால் பழகிய மனிதர்களின் முகம் விலங்குகளின் முகத்தினை எத்தனை நாட்கள் கழித்து பார்த்தாலும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும். மனிதர்களே போல் சிந்திக்கும் தன்மையும் உடையது. (நானும் புத்திசாலியாக்கும்....ஆமா)
Crows: உலகில் உள்ள பறவையினிலே காகங்கள்தான் புத்திசாலியானவை. நம்முடைய வட்டரகதைகளில் வருவதை போன்று புத்திசாலிதனமாக உணவு மற்றும் தண்ணீரை உண்ணும் திறன்னுடயது. (எப்படிங்க... உட்க்கார்ந்து யோசிப்பாங்களோ?) Monkeys: கண்ணாடின் முன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் தன்மையுடையது. மாற்ற பெரும்பான்மையான விலங்கினங்களால் தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ளமுடியாது , நம்ம பூனைகளால் கூட முடியாது. (அழகா இருக்கேனா?)Dolphins: நமக்கெல்லாம் தெரியும் டால்பின்கள் மிகவும் புத்திசாலிகள் என்று. இதன் மூளை எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கும். கடலுக்கடியில் உணவு தேடிசெல்லும்போது அதன் மூக்கை பாதுகாக்கும் பொருட்டு பஞ்சு போன்ற பொருளை தனது மூக்கின் மீத வைத்துக்கொண்டு செல்லும், அதனால் அதன் மூக்கின் மீது காயம் ஏதும் இல்லாமல் தப்பித்து கொள்ளும் . இந்த குணநலன்களை அதன் சந்ததிகளும் பின்பற்றும். (ரெம்ப புத்திசாலிதனே....) Elephants: யானைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை இதற்கு மிக அபாரமான நியாபக சக்தியுண்டு. யானைக்கு யாரேனும் தீங்கு செய்தால் அவை சாகும் வரை நினைவில் வைக்கும் தன்மையுள்ளது. யானைக்கும் தன்னை கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் உண்டு. (யானைக்கு கண்ணாடி எங்க செய்வாங்க?)Chimpanzees and Gorillas: பூலோகில் உள்ள விலங்கினத்திலே இவைதான் மிகவும் புத்திசாலியானவை. (படத்தை பார்த்தாலே தெரியுமே?)

4 comments:

Anonymous said...

HI PRIYA HAPPY DIWALI

Subash said...

நல்ல தகவல்
மனிதனுக்கு போட்டியாக வராமலிருந்தால் சரிதான்

ஆட்காட்டி said...

பரவாயில்லையே யானைக்கு கீழ தான் சிம்பன்சி. அதாவது எனக்குக் கீழ தான் நிங்க.

Dr. சாரதி said...

Subash மற்றும் ஆட்காட்டி வருகைக்கு நன்றி.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats