"இது என்னுடைய 200-வது பதிவு" எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்துகொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், என் பதிவினை பின் தொடரும் நண்பர்களுக்கும், பின்னோட்டம் எழுதி என்னை ஊக்குவிக்கும் ஆருயிர் தோழர்களுக்கும், நான் எழுதிய 199 பதிவுகளில் சுமார் 195 பதிவுகளை பிரபலமாக்கிய "Tamilish " மற்றும் "Indli "-க்கும் கோடான கோடி நன்றிகள்.
Vampire Squid
நாம் முதலில் காண இருக்கும் ரத்த காட்டேரி ஆழ்கடலில் வாழும் Vampire Squid தனது உடலில் காணப்படும் ஒளி உமிழும் திறனுடைய நீட்சிகளை கண்டு ஏமாந்து வரும் பிற உயிரினங்களை கொன்று ரத்தத்தை குடிக்கும்.
அபூர்வ காணொளி
Vampire Finch
மிக கடினமான அலகினை உடைய இந்த சிறிய பறவையானது மற்ற பறவைகளை (பொதுவாக Nazca and Blue-footed Boobies பறவைகளை) ரத்தம் வரும் வரை தாக்கி ரத்தத்தினை குடிக்கும்.
அபூர்வ காணொளி
Vampire Piranha
பிரானா வகையை சார்ந்த இந்த மீனானது தனது நீண்ட கூரிய முன் பற்களால் தாக்கி கொன்று உண்ணும். நாற்பது கிலோ எடையுடைய அபூர்வ மீனின் காணொளி
ரஷ்யாவில் காணப்படும் இந்த ரத்தம் குடிக்கும் பழபூச்சியானது சாதாரண பழபூச்சியில் இருந்து உருவானதாகும்.
அபூர்வ காணொளி
Vampire Bat
விலங்குகள் உலகின் உண்மையான ரத்த காட்டேரி இவைதான். இதன் உமிழ்நீரில் காணப்படும் draculin (ironic) என்னும் வேதி பொருள் ரத்தத்தினை உறையாமல் தடுத்து தனக்கு தேவையான அளவு ரத்தத்தை குடித்துகொள்ளும்.
அபூர்வ காணொளி