இரண்டு சக்கர வாகனம் என்பது மனிதனுக்கான போக்குவரத்து சாதனம் என்பது நமக்கு தெரியும். ஆனால் சில நாடுகளில் இரண்டுசக்கர வாகனம் எப்படியெல்லாம் விலங்குகளை ஏற்றி செல்வதற்கு பயன்படுகிறது என்பதை காணும் போது நமக்கு ஆச்சரியமே.
பன்றிகளுக்கான போக்குவரத்து
மாடுகளுக்கான போக்குவரத்து
பன்றிகளுக்கான போக்குவரத்து
ஆடுகளுக்கான போக்குவரத்து
கோழிகளுக்கான போக்குவரத்து
வாத்துகளுக்கான போக்குவரத்து
மீன்களுக்கான போக்குவரத்து
13 comments:
ஆகா ..........நல்ல வேடிக்கை ..
நிலாமதி தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
இப்படியெல்லாம் எங்கூர்லே கொண்டு போக முடியாது. பிடிச்சு உள்ளே போட்டுருவாங்க.
வித்தியாசமாக இருந்தாலும் பார்க்க கஷ்டமாக இருக்கு.
மிகவும் கண்டிக்க தக்கது... மனிதன் மிருகம் என்பதை நிரூபிக்கிறான்.. ஈரம் என்பது மனிதனின் மனதில் இருந்து குறைந்து கொண்டே வருகிறது.. படங்கள் மிகவும் கவலையை தருகிறது.உயிரை விடும் சமயத்திலும் கொண்டு போகும் போதே துன்பத்தை அனுபவிக்கறது..பாவம்..
மனிதனை விட உலகில் கொடூரமான பிராணி இல்லவே இல்லை... தான் வாழ்வதற்காக எதையும் அழிக்கும் கொடூர பிராணி.
பசிக்காகவே மற்றொரு மிருகத்தைச் சாப்பிடும் படியே இயற்கை நம்மைப் பணித்து இருக்கிறது. ஆனால் தற்போது, சுவைக்காகவும், ஜாலிக்காகவும் நாம் இதைச் செய்கிறோம்..
மனது கனக்கிறது.. அவைகளும் உயிர்கள் தானே.. கட்டிக் கொண்டு போகும்போது கூட, கொஞ்சம் பரிவு காட்டக் கூடாதா..?? இறக்கப் போகும் உயிரினம்.. கடைசி பட்ச இரக்கம் கூட அதற்குக் கிடையாதா..??
ஆடு அறுக்கும் விதம் ஒரு மாதிரி.. அதனைப் பார்த்தாலே மனது வலிக்கும்.. மாடுகளை அப்படி அறுக்க முடியாதாம். அதற்க்கு ஒரு வழி, நல்ல உருட்டுக் கட்டையால் நடுமண்டையில் ஓங்கி அடிப்பார்களாம்.. துள்ள முடியாதபடி கால்களையும், கத்த முடியாதபடி வாயையும் கட்டி இருப்பார்களாம்.. அந்த மாட்டின் நிலைமையில் இருந்து இதை யோசியுங்கள்.. நாம் செய்வது தவறே இல்லை என்று நம்பும் அளவுக்கு சமூகம் நம்மை வளர்த்துள்ளது.. நம் மனதும் மறுத்துள்ளது.. அதற்கு ஒரு எடுத்துக் காட்டு தான் கீழே..
//நிலாமதி said...
ஆகா ..........நல்ல வேடிக்கை ..
//
நமது குழந்தைகளை இப்படிக் கட்டிக் கொண்டு போனால், ஹையா நல்ல வேடிக்கை என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. அவைகள் வேறு பிராணிகள் தானே.. அப்படித்தானே..??
மன்னிக்கவும்..
//நம் மனதும் மறத்துள்ளது..//
//அவைகள் வெறும் பிராணிகள் தானே..//
ஒன்றும் செய்ய முடியாமல் , என் கண்களில் நீர் வருகிறது.
குரு.
துளசி கோபால் நீங்கள் கூறுவது உண்மையே. மனிதநேயமிக்க மக்கள் வாழும் நாட்டில் கண்டிப்பாக இதுபோன்று விலங்குகளை கொடுமைபடுத்த அனுமதிக்கமாட்டார்கள்
வடுவூர் குமார் sir, இதாவது பரவாஇல்லை நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து இறைச்சிக்காக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் மாடுகளை பார்க்கவேண்டும்....கண்கள் குளமாகிவிடும்.........
கண்ணாடி நீங்கள் கூறியது சரியே.....மனிதன் தான் வாழ பிறரை அழிப்பதில் முதலிடத்தில்....
சாமக்கோடங்கி உங்களின் ஆதங்கம் புரிகிறது.....இன்னும் இருபது வருடங்கள் கழித்து பாருங்கள் கடலில் உள்ள மீன்களை கூட படத்தில் தான் காணமுடியும்.........முழுவதையும் அழித்துவிடுவார்கள் வெகு சீக்கிரத்தில்
Anonymous மனிதநேயமிக்க தாங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி....
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்