இங்கு நான் குமரி மாவட்ட வட்டார சொற்களை தருகிறேன் உங்களால் புரிந்து கொள்ளமுடியுதா என்று பாருங்கள்.
உறவுமுறைகள்:
மூத்தப்பா - பெரியப்பா
மூத்தம்மா - பெரியம்மா
மச்சினன் - மைத்துனன்
பாட்டா- தாத்தா
மாமாவீடுஅம்மா- அம்மாவோட அம்மா
அய்யா - அம்மாவோட அப்பா
அப்பம்மா - அப்பாவோட அம்மா
கொழுந்தன் - மைத்துனன்
கொழுந்தி - மைத்துனி
அத்தான் - அக்காவோட கணவர்
வீடும் வீடுசார்ந்த பொருள்களும்:
மங்களா - வரவேற்ப்பு அறை
அடுக்களை - சமையல் அறை
அடுப்பங்கரை - சமையல் அறை
அரங்கு வீடு - சேமிப்பு அறை
மட்டுப்பா - மாடியில் உள்ள அறை
தட்டு - மொட்டை மாடி
அசல் - துணி போடும் கொடி
குருன்கட்டி - சிறிய வகை நாற்காலி
வெட்டுகுத்தி - வெட்டுஅருவாள்
பத்தாயம் - நெல் போட்டு வைக்கும் பெரிய பெட்டி
சொளவு - பனை ஓலையால் செயப்பட்ட அரிசி புடைக்கும் பொருள்
பிழாவு - பனை ஓலையால் செயப்பட்ட மாவு காயவைக்கும் பொருள்
உழக்கு - அரிசி அளக்க உதவும் சிறிய அளவை
நாழி - அரிசி அளக்க உதவும் பெரிய அளவை
மரக்கால் - நெல் அளக்க உதவும் பெரிய அளவை
குட்டுவம்- நீர் சேமித்து வைப்பது மற்றும் நெல் அவிக்க உதவுவது
டாங்கி - நீர் சேமித்து வைப்பது மற்றும் நெல் அவிக்க உதவுவது
வார்ப்பு- திருமண வீட்டில் சோறு சமைக்க உதவுவது
சட்டுவம் - பெரிய அகப்பை
சிப்பல் - சோறு பரிமாற உதவுவது
நிலவா - சோறு பரிமாற உதவுவது
ஆப்பை - அகப்பை
அண்டை - அடுப்பு
சட்டாப்பை - தோசை சுட பயன்படும் அகப்பை
சீனி சட்டி- வாணலி
யானம் - பாத்திரம்
சருவம் - சின்ன பாத்திரம்
கிண்ணி -கிண்ணம்
குத்துபோணி - பெரிய பாத்திரம்
தூரை - சிறிய மண்பாண்டம்
கலயம் - கலசம்
ஈக்கான்பெட்டி - பனைஒலையால் செய்யப்பட்ட பெட்டி
உழக்கான்பெட்டி - பனைஒலையால் செய்யப்பட்ட பெட்டி
திருவலை - தேங்காய் துருவி
கறி - குழம்பு
இறைச்சி - கறி
மரக்கறி - காய்கறி
தாள் - காகிதம்
சாரம் - லுங்கி
முண்டு, தோர்த்து - துண்டு
போதப்பு - ஜமுக்காளம்
உள்ளுடுப்பு -பெண்களின் உள்ளாடை
நிக்கர் - அரைக்கால் சட்டை
ஊத்தாம்பட்டி - பலூன்
உடல் உறுப்புகள்:
சுண்டு- உதடு
கொப்புள் - தொப்புள்
கன்னாம்மண்டை - உச்சந்தலை
செவளை - கன்னம்
உப்புகுத்தி - கணுக்கால
பெதடி - பிடரி
கம்புகூடு - அக்குள்
ஈரகொலை -ஈரல்
நோய்கள்:
மண்டகனம்- ஜலதோஷம்
மண்டகுத்து - தலைவலி
சர்த்தல் - வாந்தி
வட்டு - மாத்திரை
தட்டி புளியுதல் - காய்ச்சலுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் மருந்து
கருக்கு - வயற்று போக்குக்கு வீட்டில் தயாரிக்கப்படும் மருந்து
வயற்று அலற்ச்சல் - வயற்று போக்கு
வாழைபழம்:
பாளயன்கொட்டன்
பேயன் பழம்
ஏத்தம்பழம் - நேந்த்ரன்பழம்
ரசகதலி - ரஸ்தாளி
படத்தி
மட்டி
செந்தொழுவன் - செவ்வாளைபழம்
வெள்ளைதொழுவன்
மொந்தன்பழம்
மோரிஸ் - பச்சை பழம்
காய்கறி:
பெல்லாரி, பெரிய உள்ளி - பெரிய வெங்காயம்
உள்ளி - வெங்காயம்
பூடு - பூண்டு
வழ்தனகாய் - கத்தரிக்காய்
பெரும்சீரகம் - சோம்பு
மரம், மரம்சார்ந்த பொருள்கள்:
நல்லமாவு - மாமரம்
கொல்லமாவு - முந்திரி மரம்
தெங்கு - தென்னைமரம்
பூசணி - பூவரசு
கொல்லான்கொட்டை - முந்திரிகொட்டை
கொல்லாம்பழம் - முந்திரிபழம்
கருன்காய் - இளம் முந்திரி
அண்டி - இளம் முந்திரிகொட்டை
குரும்பல் - குரும்பை
சில்லாட்டை
கொதம்பு
பாளை
மீன் வகைகள்
சாளை - மத்தி
குத்தா
வள மீன்
வாளை
தெரச்சி - வௌவால்
நெத்திலி
பாரை
மொரல்
லூர்து
சீலா - வச்சிரம்
பூச்சி
கிளர்று
கிளாத்தி
பிற வார்த்தைகள்:
பக்கி - வண்ணதுபூச்சி
புட்டான் - தட்டான் பூச்சி
காடல் - கௌதாரி
தாரா - வாத்து
சவுட்டு - உதைத்தல்
சாடுதல் - குதித்தல்
அலைவாய்கரை - கடற்கரை
அத்தம் - கடைசி, இறுதி
விளை - தோட்டம்
தறவாடு - சொத்து
நிசாரம் - சாதாரணம்
தொலி - தோல்
எல்லு - எலும்பு
வீதி - அகலம்
ஊச்சாழி- ரௌடி
பய்ய - மெதுவா
நாணகேடு - கேவலம்
சோக்கேடு - நோய்
வேதனம் - வலி
அண்டை - அடுப்பு
உறைப்பு - காரம்
தெரக்கு - துரத்து
கோரு - முகர்தல்
கீறு - கிழி
கொழை - தழை
நேட்டம் - சம்பாதித்தல்
ஊரல் - சொறி எடுத்தல்
அடியந்தரம், கூட்டுவா, மோட்ச விளக்கு - பதினான்காம் நாள் காரியம்
தறி - வெட்டு
தவுக்கா - தவளை
No comments:
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்