Wednesday, September 24, 2008


மாறிவரும் கலாச்சாரம்!


தமிழ்ச்சுவடு: உலகுக்கு நாகரீகம் கற்று கொடுத்த இனம் தமிழினம், இன்று நம்முடைய கலாச்சாரமும், மொழியும் சற்று மெருகிழந்து, வலுவிழந்து வருவதை பார்க்கும்போது இது காலத்தின் கட்டாயமா அல்லது நாகரீகம் என்ற பெயரால் நாமாக ஏற்றுக்கொண்ட நாகரீகத்தின் எச்சமா என்ற பயம்தான் தோன்றுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்புள்ள நமது கலாச்சாரம் கடந்த இருபது ஆண்டுகளில் சிதிலம் அடைவதற்கு காரணம் என்ன? இந்த இருபது ஆண்டுகளில் நமக்குள் அப்படி என்ன மாற்றங்கள் உண்டாகியது, என் அறிவிற்கு தெரிந்து அழிந்து போன அல்லது அழிந்து கொண்டிருக்கும் நமது சுவடுகளை தேடி..........


தமிழ்:ஆறாயிரம் மொழிகள் பேசப்படும் உலகில் இன்று ஆறு மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி என்னும் அந்தஸ்து அந்த வரிசையில் என் கன்னி தமிழுக்கும் அந்த பெருமை உண்டு. செம்மொழி என்னும் மணிமகுடம் சூடும் இந்நாளில் என் புறநானுற்று தமிழனின் வாயில் தமிழ் படும் கொடுமையை என்னவென்று சொல்வது.

காணாமல் போன கிராமத்து விளையாட்டுகள்: பசுமையும் பாசமும் பரந்து விரிந்த நம் தமிழக கிராமத்து பால்ய விளையாட்டுகள் முழுமையும் மறைந்து போனதின் முக்கிய பின்னணிகள் பற்றிய சிறு தேடல்.....

எனக்கு இப்பொழுது நினைத்தாலும் எனது பால்ய கால விளையாட்டுகளும் அதனை கற்றுகொண்ட விதமும் என்னை மலைக்க வைக்கிறது. மூன்று அல்லது நான்கு வயதில் என் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் விளையா டிய " ஊருபத்தி ஈர்பத்தி ஒரியமங்கலம் பருப்பம் சுட்டன பன்னிரண்டு ஆற்றில் சுற்றும் முற்றும் செவந்தியமலை பூதும் பூதும் பட்டணம் புதியராஜா பட்டணம் ஆடும் கன்றும் வாரவேளை காலைமடக்கி தோழி பன்" என்று பாடியபடி கைகளை தரையில் வைத்து விளையாடும் விளையாட்டு் இன்று காணாமல் மறைந்து போயிற்று (சமீபத்தில் ஒரு மலையாள திரைப்படத்தில் காணமுடிந்தது).


நான் பிறந்து வளர்ந்தது தமிழகத்தின் தென்கோடியாம் குமரி முனை அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், அங்கு ஒவ்வொரு பருவகாலதிற்கும் வெவ்வேறு விளையாட்டுகள் உண்டு. குறிப்பாக கிளாச்சி (கோலி), கிளியந்தட்டு, கிளிபாஸ், வாளி விடுதல், பம்பரம், பட்டம், கள்ளன் போலீஸ், தொட்டு விளையாட்டு (நொண்டி), கண்டு விளையாடுதல் (கண்ணாமூச்சி), கல்லா மண்ணா, கௌண்டேஸ் (அமெரிக்கன் பேஸ் பால் போன்றது), சிங்கம்புள் (கிட்டி), பாண்டி, சுட்டி பிடித்தல், பேயன் பந்து, குதிரை போர், கொல்லன்கொட்டை எற ிதல், தாயம் போன்ற விளையாட்டுகளை ஒவ்வொரு நாளும் சாயும்காலம் பள்ளிவிட்டதும் ஊர் மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடுவோம்.


கடந்த பத்து வருடங்களாக இது போன்ற விளையாட்டுகளை என் கிராமத்தில் பார்த்தது இல்லை. பொதுவாக இன்றைய சிறுவர்கள் பள்ளிவிட்டா ல் நேராக டியுசன் சென்றுவிடுகிறார்கள். வாரவிடுமுறைகளில் கூட அவர்களுக்கு ஓய்வு என்பது கிடைப்பதில்லை அப்படி கிடைத்தாலும் அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதிலே பொழுதை கழித்து விடுகிறார்கள்.

இது போன்ற விளையாட்டுகள் அத்தனையும் அழிவதற்கு கிரிக்கெட்டும் ஒரு காரணம் அதையும் தாண்டி தொலைக்காட்சியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால் சீரழியும் இளைஞர் சமுதாயம் திசை மாறி செல்லும் காட்சிகளை நாம் கிராமங்களில் காணலாம் , ஆனால் ஒரே ஆறுதல் இன்றைய மாணவ சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டும் மறைந்து போகும் இந்த அரிய விளையாட்டுகளையும், கலாச்சாரத்தையும் மீட்டு கொண்டுவரமுடியாது என்பதுதான் உண்மை.

6 comments:

குடிமகன் said...

தங்களின் சொந்த ஊர் எதுவோ ?

surya said...

woww!!!!!!1
great

ஜுர்கேன் க்ருகேர் said...

ஒவ்வொரு முறை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருக்கும் போது இன்னமும் கிட்டிபுள்,பம்பரம். தாயம், கோலி,விளையாடுவது உண்டு. இந்த விளையாட்டில் ஆறு வயது முதல் நாற்பது வயுதுல்லவர்கள் வரை ஒரே சமயத்தில் விளையாடுவதுண்டு.நான் உட்பட ( ஹி ஹி!)


படைய தமிழர் விளையாட்டுக்களை பற்றி எந்த நூலிலாவது குறிப்பிடபட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிஞ்சா சொல்லுங்க!

பழமைபேசி said...

அளவுக்கு மீறிய அறிவியல்தான் காரணம்.... கல்நெய் வந்தது காளை மாடுகளும், ஏரோட்டிகளும், பொதி சுமக்கும் கழுதைகளும் போச்சு... இந்தா பற்றாக்குறை வந்துட்டே இருக்கு.... ஆனா, போனது திரும்பி வருமா?

அறிவியலுன்னு சொல்வீகளா?

ஜுர்கேன் க்ருகேர் said...

//அதையும் தாண்டி தொலைக்காட்சியும் ஒரு முக்கிய பிரச்சனையாகும்,//

இந்த இனிய தீபாவளியை உங்கள் உற்றார்,பெற்றோர், உடன் பிறந்தவர்களுடனும்,மற்றும் நண்பர்களுடனும் கொண்டாடவேண்டுமே தவிர தொலைகாட்சி பெட்டியுடன் அல்ல .

-இது என் நண்பன் அனுப்பிய தீபாவளி வாழ்த்து செய்தி

Dr. சாரதி said...

குடிமகன், சூர்யா, ஜுர்கேன் க்ருகேர், பழமைபேசி தாங்கள் வருகைக்கு நன்றி......

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats