இன்று உலகம் முழுவதும் பொதுவாக செல்ல பிராணிகள் வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் நாய், பூனை, கிளி மற்றும் பலவிதமான மீன்களை வீட்டில் வளர்ப்பதை கண்டிருப்போம். மீன்களை பொறுத்தவரையில் கோல்ட் பிஷ் போன்ற மீன்களை சரவ சாதாரணமாக காணலாம். இன்றும் பெரிய பணக்கார வீடுகளில் மிகவும் விலை உயர்ந்த மீன்கள் வளர்க்கபடுகின்றன அவற்றினை பற்றி....
Silver Arowana
தென் அமெரிக்க நாட்டை தாயகமாக கொண்ட இந்த மீன்கள் சில மரபியல் மாற்றம் காரணமாக வெள்ளை நிறமாக மாறிவிட்டது. இந்த மீன் தான் உலகில் மிக விலை உயர்ந்த மீனினமாகும்.
Ghost Shrimp
முன்பெல்லாம் மீன்காட்சியகங்களில் உணவாக பயன்பட்ட இந்த இறால் மீன்கள் மிக அழகாகவும், ஒளி ஓட்டுருவும் தன்மையுள்ளதாகவும், எளிதில் கையாளமுடியும் என்பதால் இவை இன்று மிக அதிகமாக வளர்க்கப்படும் மீனாகும்.
Lung fish
முன் காலத்தில் தவளை இனமாக (Amphibians) கருதபட்ட இவற்றிக்கு நுரையீரல் உண்டு எனவே மீன் தொட்டியில் சிறிதளவு காற்று இருந்தாலும் உயிர் வாழும் திறனுடையது.
Gars
இவற்றிக்கு நுரையீரல் கிடையாது, இவற்றை வளர்ப்பது சிறிது கடினம் இருந்தாலும் இவற்றின் வேட்டையாடும் திறன் மீன் வளர்போரை கவருவதால் இவையும் மிகவும் அதிகமாக வளர்க்கபடும் மீனாகும்.
Cichlids
இவற்றின் நிறங்கள் தான் இதன் தனி சிறப்பு, திலேப்பியா மீன்களை போன்று அமைப்பை உடையது. இது ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஏரிகளில் (Victoria, Malawi, and Tanganyika) காணபடுகின்றன.
Oscars
மிக வேகமாகவும் பெரியதாகவும் வளரும் இந்தவகை மீன்கள் மீன் வளர்ப்போர் கைகளில் வந்து உணவினை எடுத்து சாப்பிடும் திறனுடையது. அதை போன்று நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அதுவும் ரியாக்ட் செய்யும்.
Freshwater Rays
கடலில் வாழும் rays விட மிக பெரியதாக வளரும் இவற்றிக்கு என பிரத்தியோகமான மீன் தொட்டிகள் தேவைப்படும்.