Saturday, July 31, 2010

வீட்டில் வளர்க்கப்படும் நன்னீர் வாழ் அபூர்வ அலங்கார மீன்கள்

இன்று உலகம் முழுவதும் பொதுவாக செல்ல பிராணிகள் வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் நாய், பூனை, கிளி மற்றும் பலவிதமான மீன்களை வீட்டில் வளர்ப்பதை கண்டிருப்போம். மீன்களை பொறுத்தவரையில் கோல்ட் பிஷ் போன்ற மீன்களை சரவ சாதாரணமாக காணலாம். இன்றும் பெரிய பணக்கார வீடுகளில் மிகவும் விலை உயர்ந்த மீன்கள் வளர்க்கபடுகின்றன அவற்றினை பற்றி....

Silver Arowana 

arowana
தென் அமெரிக்க நாட்டை தாயகமாக கொண்ட இந்த மீன்கள் சில மரபியல் மாற்றம் காரணமாக வெள்ளை நிறமாக மாறிவிட்டது. இந்த மீன் தான் உலகில் மிக விலை உயர்ந்த மீனினமாகும். 

Ghost Shrimp

 

 ghost-shrimp

முன்பெல்லாம் மீன்காட்சியகங்களில் உணவாக பயன்பட்ட இந்த இறால் மீன்கள் மிக அழகாகவும், ஒளி ஓட்டுருவும் தன்மையுள்ளதாகவும், எளிதில் கையாளமுடியும் என்பதால் இவை இன்று மிக அதிகமாக வளர்க்கப்படும்  மீனாகும். 

Lung fish  

முன் காலத்தில் தவளை இனமாக (Amphibians) கருதபட்ட இவற்றிக்கு நுரையீரல் உண்டு எனவே மீன் தொட்டியில் சிறிதளவு காற்று இருந்தாலும் உயிர் வாழும் திறனுடையது. 

Gars 
 File:Lepisosteus oculatus.jpg
 இவற்றிக்கு நுரையீரல் கிடையாது, இவற்றை வளர்ப்பது சிறிது கடினம் இருந்தாலும் இவற்றின் வேட்டையாடும் திறன் மீன் வளர்போரை கவருவதால் இவையும் மிகவும் அதிகமாக வளர்க்கபடும் மீனாகும். 

Cichlids 

 cichlids

 


இவற்றின் நிறங்கள் தான் இதன் தனி சிறப்பு, திலேப்பியா மீன்களை போன்று அமைப்பை உடையது. இது ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஏரிகளில் (Victoria, Malawi, and Tanganyika) காணபடுகின்றன. 

 Oscars 
 oscar

 மிக வேகமாகவும் பெரியதாகவும் வளரும் இந்தவகை மீன்கள் மீன் வளர்ப்போர் கைகளில் வந்து உணவினை எடுத்து சாப்பிடும் திறனுடையது.  அதை போன்று நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அதுவும் ரியாக்ட் செய்யும்.


Freshwater Rays


கடலில் வாழும் rays விட மிக பெரியதாக வளரும் இவற்றிக்கு என பிரத்தியோகமான மீன் தொட்டிகள் தேவைப்படும். 


Channa Snakeheads

வடஅமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த மீன்கள் நன்கு வேட்டையாடும் திறனுடையது.

Pleco 

 pleco-catfish

ஓட்டும் திறனுடைய வாய் அமைப்பை உடைய இந்த மீன்கள் பாசியை உண்டு வாழ்பவை. எனவே மீன் தொட்டியில் அதிக பாசிகள் வளரவிடாமல் பார்த்துகொள்ளும். 

Freshwater Eel 

பாம்பை போன்று அமைப்பை உடைய இந்த மீன்களும் அதிகமாக செல்ல பிராணியாக வீடுகளில் வளர்க்கபடுகிறது.

Freshwater Lionfish 

இவை கல்லைபோன்று அசையாமல் இருக்கும் தன்மையுள்ளது. இவையும் நன்கு வேட்டையாடும் திறனுடையது. 

Ranchu Goldfish 

goldfish

 

மிகவும்  வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் இந்த மீன்கள் கோல்ட் பிஷ் வகையை சார்ந்தது. இதன் முக அமைப்புதான் மற்ற மீன்களில் இருந்து வேறுபடுத்தி காட்டும்.

No comments:

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats