இதுவரை நாம் கண்டிராமல் இருந்தாலும் உலகில் அதிகமாக இரண்டுதலையுடன் காணப்படும் விலங்கினம் இரண்டுதலை பாம்புகளே!
இரண்டு தலை இருந்தாலும் உடலிலில் உள்ள மற்ற உறுப்புகள் யாவும் ஒன்றே.
கரு உருவாகும் போதே இரண்டும் தனி தனியாகவே பிறப்பதற்கு முயற்ச்சிக்கும் ஆனால் இரண்டாக பிரிவதற்கு முன்பாகவே பிறந்துவிடும் ஆகவே இரண்டு தலையும் ஒரு உடலும் இருக்கும்.
இரண்டு தலைகளும் ஒரு உடலை பெற்றிருந்தாலும் இரண்டு தலைகளுக்குமே தெரியாது தாங்கள் இரட்டையர்கள் என்று.
உணவு உண்ணும் போது ஏதேனும் ஒரு தலையால் மட்டுமே உண்ணமுடியும், ஆனால் மற்ற தலையின் பசியும் காணமல் போய்விடும் அதனால் உணவு உட்கொள்ளாத தலைக்கு குழப்பம் ஏற்படும். ஆனால் உணவுக்காக வேட்டையாடும் பொழுது இரண்டு தலையும் வேட்டையாடும்.
உணவு உண்ணும் பொழுது மட்டுமல்ல குழப்பம், தான் போகும் பாதையை முடிவு செய்வதில் கூட குழப்பம் ஏற்படும், அதில் எது பலமானதாக இருக்கிறதோ அது மற்ற தலையுடைய பாம்பையும் தன்னுடனே இழுத்து செல்லும்.
எதிரி பாம்புகளை காணும் பொழுது பாம்பின் ஒரு தலை தப்பித்து கொள்ள நினைத்தாலும், மற்ற தலையானது சண்டையிட முயற்ச்சிக்கும், எனவே இறுதியில் மரணமே ஏற்படும். எனவே தான் காடுகளில் இரண்டு தலை பாம்புகளை காண்பது அரிது.
இரண்டுதலை பாம்புகள் சுமார் இருபது வருடம் வரை வாழும் திறனுடையது, அதைபோன்று இரண்டு தலை பாம்புகளின் வலது தலை தான் முடிவுகளை எடுக்கும் திறனுடையது, அதாவது எந்த உணவை உண்பது, எந்த பாதையில் செல்வது போன்ற முடிவுகளை.
8 comments:
வியப்பூட்டும் தகவல்கள் நண்பா
அரிய அறிய வேண்டிய தகவல், படத்திற்கும் விளக்கங்களுக்கும் பாராட்டுகள்
nandri ....ariya thagavalukku
அருமையான படங்கள், அற்புதமான தகவல்கள்! சில விவரங்கள் பாம்புக்கு மட்டுமல்ல நமக்கே குழப்பமாயிருக்கிறது. //அதில் எது பலமானதாக இருக்கிறதோ அது மற்ற தலையுடைய பாம்பையும் தன்னுடனே இழுத்து செல்லும். // இங்கு பலம் என்பதை விட எந்தத் தலையின் விருப்பப் படி முழு உடல் இயங்கும் என்பது முக்கியம். ஒரு பாம்பு எடுக்கும் முடிவு படிதான் முழு உடலும் இயங்கும் என்றால், இன்னொரு பாம்பு வெறும் பஸ் பிரயாணி போலத்தான் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்க முடியும். //அதைபோன்று இரண்டு தலை பாம்புகளின் வலது தலை தான் முடிவுகளை எடுக்கும் திறனுடையது, அதாவது எந்த உணவை உண்பது, எந்த பாதையில் செல்வது போன்ற முடிவுகளை. // முன்பு பலமானதே பாதையை முடிவு செய்யும் என்று சொல்லப் பட்டுள்ளது, இங்கு மாறாக உள்ளதே??
பகிர்வுக்கு நன்றி.
FARHAN தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.....
கோவி.கண்ணன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.....
baln தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.....
Jayadev Das தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.....
// இங்கு பலம் என்பதை விட எந்தத் தலையின் விருப்பப் படி முழு உடல் இயங்கும் என்பது முக்கியம். ஒரு பாம்பு எடுக்கும் முடிவு படிதான் முழு உடலும் இயங்கும் என்றால், இன்னொரு பாம்பு வெறும் பஸ் பிரயாணி போலத்தான் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்க முடியும் //
இங்கு இரண்டு பாம்புகளும் தாங்களை தனி தனித்தனியாக உள்ளதாகவே நினைத்து கொள்ளும், எனவே இரண்டுக்கும் எப்பொழுதுமே போட்டிதான்....எனவேதான் இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் இறுதியில் வெல்லும், அது வலதாகவோ அல்லது இடதகவோ இருக்கலாம், பெரும்பாலும் வலது தலையே வெற்றி பெறும்....
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்