Thursday, December 10, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

உலகில் வெகு தூரம் பறக்கும் வண்ணத்துபூச்சி வடஅமெரிக்காவில் காணப்படும் Monarch வண்ணத்துபூச்சியாகும் இவை சுமார் 3000 கிலோ மீட்டர்கள் பறந்து அதாவது ஹட்சன் வளைகுடாவில் ஆரம்பித்து ப்ளோரிடா வரை வந்து பின் ஹட்சன் வளைகுடாவிற்க்கே திரும்பி செல்லும்திறனுடையது.


பொதுவாக நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் நீரில் முட்டையை இட்டுவிட்டு சென்றுவிடும் ஆனால் ஒருவகையான பெண் தேரைகள் முட்டையிடும் அதனை ஆண் தேரைகள் (Male midwife toad) அவற்றை குஞ்சுகள் பொரிக்கும் வரை தனது முதுகிலேயே சுமந்து கொண்டுதிரியும்.

உலகிலே மிக பெரிய ஆக்டோபஸ்கள் Common Pacific Octopus ஆகும் இவை பொதுவாக 32 அடிகள் வரை இருக்கும்.

Potter waspகள் குடம் போன்று கூடினை கட்டி அதனுள் ஒரு வண்ணத்து பூச்சியின் லார்வவை (caterpillar) ஓட்டிவைத்துவிடும் பின் அதனுள் முட்டையிட்டுவிட்டு வெளியே பறந்து வந்து உயிரைவிட்டுவிடும்.


கடல் குதிரை தனது கண்களால் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் பார்க்கமுடியும்.

Gastric தவளைகள் தனது முட்டைகளை வாயில் வைத்து அடைகாத்து குட்டிகளை வெளியே விடும்.


மனிதர்களின் வயிற்றில் வளரும் நாடா புழுக்கள் (tapeworm) சுமார் 60 அடிகள் வரை வளரும்.
மான்கள் தனது வால்கள் மூலமே சிக்னல் செய்து தனது கூட்டத்திற்கு அறிவிப்பு செய்யும்

Wolf spiderக்கு 8 கண்கள் உண்டு


2 comments:

kovai sathish said...

nallairukku..innum podunga..

Dr. சாரதி said...

நன்றி சதீஷ்

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats