Tuesday, January 26, 2010

அறிவோமா அறிவியல்: உலகின் சில விசித்திரமான விலங்குகள்

Hooded Seal: ஆர்டிக் பகுதியில் காணப்படும் இவ்வகை ஆண் சீல்களுக்கு வாய் மற்றும் மூக்கு பகுதியில் பலூன் போன்ற அமைப்பு உள்ளது. புவி வெப்பமடைதல் காரணத்தால் இவை அழியும் தருவாயில் உள்ளது.




Olm (human fish): ஐரோப்பாவின் தென் பகுதியில் காணப்படும் இவை பார்வை இல்லாதவை, சுமார் நூறு வருடங்கள் வரை வாழும், குறிப்பாக பத்து வருடங்கள் வரை உணவில்லாமல் உயிர்வாழும். இதன் தோல்கள் மனிதர்களை போல் உள்ளதால் இவை human fiah என்று பட்டபெயர் இட்டுஅழைக்கபடுகிறது.



Leaping Lesbian Lizards: அமெரிக்க பாலைவனக்களில் காணப்படும் இந்த பல்லியினத்தில் ஆண் உயிரினங்கள் கிடையாது, பெண் ஓணான் சில நேரங்களில் ஆண் போல் செயல்பட்டு உடலுறவில் ஈடுபடும்.




Kakapo: உலகில் மிக அரிதாக காணப்படும் கிளி வகையை சார்ந்த இவற்றால் பறக்க இயலாது, இது சுமார் நான்கு கிலோ எடைஉடையது, நியூசிலாந்து நாட்டில் காணப்படும் இவற்றின் எண்ணிக்கை சுமார் அறுபது தான்.


Solenodon: கரிபியன் தீவு நாடுகளில் காணப்படும் இவை மிக கொடிய விஷம் உடையதாகும். இன்னும் ஒரு சில உயிரினங்கள் மட்டுமே இப்புவியில் உயிரோடு இருக்கிறது.



- தொடரும்

2 comments:

அண்ணாமலையான் said...

gud post. congrats

Dr. சாரதி said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats