Monday, October 25, 2010

அறிவோமா அறிவியல்: உலகில் அதிக தூரம் பயணிக்கும் விலங்குகள்

உலகில் உள்ள விலங்கினங்கள் தினமும் உணவுக்காகவும், தனது இணையை கண்டுபிடிக்கவும், தனது சந்ததியை உருவாக்கவும், இடம் தேடி அலையும் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் சில விலங்குகள் பல ஆயிரம் மைல்கள் வரை பயணிக்கும் என்பது அதிசயமே. அதனை பற்றி இந்த பதிவில்.....

Humpback Whales
உலகில் உள்ள பாலூட்டிகளில் இதுதான் அதிக தூரம் பயணிக்கும் விலங்கினமாகும். இவை ஒரு வருடத்தில் சுமார் 5000 மைல்கள் வரை பயணிக்கும்.

 

 Freshwater Eels
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் முட்டையிட்டு பொரித்தபின்  இங்கிலாந்தில் உள்ள நன்னீர் ஆறுகளை நோக்கி பயணிக்கும் (நீங்களே கணகிட்டு கொள்ளுங்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்று). இதன் கல்லீரல் கடல் நீரில் இருந்து நன்னீர்க்கு மாறும் போது அதற்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ளும்.

 

  Monarch butterfly
சுமார் ஆயிரகணக்கான Monarch  butterfly-கள்  கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஆமார் 3000 மைல்கள் பறந்துவரும். இது விலங்கியல் ஆர்வலர்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.


 Ruby-throated hummingbird 
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து மெக்சிகோ வளைகுடா வரை தொடர்ந்து பறந்து செல்லும். 

 Salmon 
அம்மா விலங்குகள் ஆற்றில் இருந்து நீந்தி கடலினுள் சென்று முட்டையிட்டுவிட்டு இறந்துபோய்விடும். ஆனால் முட்டை பொரித்ததுடன் மீன் குஞ்சுகள் தாய் புறபிட்ட இடத்தை நோக்கி நீந்திசெல்லும். பாதைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் தாய் புறபிட்ட இடத்தை அடைந்துவிடும்.  (ஆனால் நாம ரெம்ப ஈசியா வால்மார்ட்ல 5 டாலர் குடுத்து மீனை வாங்கி சாபிட்டு ஏப்பம் விடுவோம்).
   
 



Green turtle

கருவுற்ற பெண்  ஆமையானது சுமார் 1000 மைல்கள் நீந்தி அதாவது பிரேசில் கடலில் இருந்து தென் அட்லாண்டிக் கடலில் உள்ள தீவான scension Island க்கு வந்து முட்டையிட்டுவிட்டு சென்றுவிடும். அதன் பின் குட்டி ஆமையானது தாய் புறபிட்ட இடத்திற்கு நீந்தி செல்லும்.   

 



Wildebeests தான்சானியா மற்றும் கென்யாவின் கோடைகாலத்தை தாங்கமுடியாமல் சுமார் 1000  மைல்கள் நடந்து செல்லும் இவைகளுடன் வரிக்குதிரைகள் மற்றும் மான் கூட்டங்களும்   நடந்து செல்லும்.


Lemmings
ஆர்டிக் பகுதிகளில் காணப்படும் இந்த எலியினம் தனது கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்த உடன் இவை தனது சந்தியினர் வாழ உணவும் தங்க இடமும் வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்துகொள்ள கடலை நோக்கி நடையை ஆரம்பிக்கும். இவை ஒரு நாளைக்கு சுமார் 10 மைல்கள் வரை நடந்து சென்று இறுதியில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும். 






2 comments:

எஸ்.கே said...

அதிக தூரம் பயணிப்பவை!
இயற்கை அதிசயங்கள்! அற்புதம்! நன்றி சார்!

Dr. சாரதி said...

நன்றி எஸ் கே அவர்களே

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats