Arachnophobia என்பது சிலந்தியை பார்த்து பயபடுவது ஆகும் (aráchnē, என்பது சிலந்தி; phobia என்பது பயம்). இவை கடல் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் காணப்படும். இவுலகில் காணப்படும் சில அபூர்வ சிலந்தியினங்களை காண்போம்.....
Bird dung crab spider
இவை பார்பதற்கு பறவையின் எச்சம் போன்று காணபட்டலும், இந்த சிலந்தியின் உடலில் இருந்து வரும் துர்நாற்றம் பறவையின் எச்சம் போன்றே இருக்கும், எனவே இதனை மற்ற உயிரினங்கள் உண்ணுவதில்லை, இதுவே இதன் தற்காப்பு முறையாகும்.
Argyrodes colubrinus
ஆஸ்திரேலியாவில் காணப்படும் இவற்றின் உடல் பாம்பின் உடலை ஒத்து இருக்கும், எனவே தான் இதன் பெயர் colubrinus (snake like). தேளின் வாழ் போல் இருப்பதால் இவை Scorpion-tailed spider என்று அழைக்கபடுகிறது. பெண் தேளுக்கு மட்டுமே இது போன்று வாழ் இருக்கும், ஆண் இன தேள்கள் சதாரண தேள் போலவே இருக்கும். ஆஸ்திரேலியாவில் காணப்படும் இவை விஷமற்றவை.
Bagheera kiplingi
இது ஒரு தாவர உண்ணி இனத்தை சார்ந்தது. Assassin spider
இவை ஆஸ்திரேலியா, ஆபிரிக்க மற்றும் மடகாஸ்கரில் காணபடுகின்றது. இவை மற்ற சிலந்திகளையே உண்ணும். Argyroneta aquatica
இவை ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ள நீர் நிலைகளில் வாழும் சிலந்திகள். இவை நீரினுள் ஒரு நீர் குமுளியை உருவாக்கி அதனுளே பெரும்பாலும் இருக்கும்.
Spiny Orb Weaver
உலகம் முழுதும் காணப்படும் இவை விஷமற்றவை, சுமார் எழுபது வகையான இவ்வகை சிலந்திகள் உள்ளன.
Maratus volans
ஆஸ்திரேலியாவில் காணப்படும் இவை பொதுவாக (Peacock spider ) மயில் சிலந்தி என்றே அழைக்கபடுகிறது.
Myrmarachne plataleoides
Weaver எனப்படும் அதிபயங்கர எறும்புகளை போன்று உடலமைப்பை பெற்றுப்பதால் இதனை கண்டு மற்ற உயிரினகள் பயந்து அருகில் வர பயப்படும். நிஜமாக இவை ஒரு அப்பாவி சிலந்தி வகையாகும். Weaver ants
Happy face spider
ஹவாய் தீவுகளில் காணப்படும் அபூர்வ சிலந்தியினங்கள், பெயரில் தான் மகிழ்ச்சி, மனிதர்களுக்கு இவற்றால் உண்டாகும் ஆபத்து எண்ணிலடங்கா.....இவை அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமாகும்.
5 comments:
பார்க்கவே பயமா இருக்கு! :-)
பொதுவாக சிலந்திகள் என்றாலே பயம்தான்! இவை அனைத்தும் விஷ ஜந்துக்கள் என நினைக்கிறேன்!
(ஒரு சந்தேகம், சாதாரண வீட்டு சிலந்தி கடித்தால் விஷமா சார்?)
சிரத்தையான படைப்பு, தொடர்ந்து எழுதுங்கள்
ரொம்ப நல்ல இருக்கு
எஸ் கே அவர்களே உங்களுக்கு என்னுடைய முதல் வணக்கம், தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் கோடி....
//(ஒரு சந்தேகம், சாதாரண வீட்டு சிலந்தி கடித்தால் விஷமா சார்?)//
வீட்டில் உள்ள சிலந்திகள் விஷ தன்மையுடையாதே ஆனால் உயிர்க்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
jothi, denim,Anonymous தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி....இன்னும் இதுபோல் நிறைய எழுதுகிறேன் தாங்களின் விருபதிற்க்கிணங்க.........
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்