Tuesday, September 14, 2010

அறிவோமா அறிவியல்: அழிந்துபோன விலங்குகள் சில உயிருடன்

உலகம் தோன்றியதில் இருந்து உருவான உயிரினங்களில் பாதிக்கு மேற்பட்ட விலங்கினங்கள் இன்று உலகில் இல்லை. பருவகாலங்களில் ஏற்பட்ட மாற்றம், இயற்க்கை சீற்றம், மற்றும் தற்காலத்தில் மனிதர்களால் ஏற்பட்ட இழப்புகளின் காரணமாகவே உயிரினங்கள் அழிந்திருக்கும் என்று நாம் அறிவோம். இப்படி அழிந்து போனதாக கருதபட்ட விலங்கினங்கள் இன்று சில உயிருடன் இருப்பது ஆச்சிரியமே.

Coelacanth
பல நூறு வருடங்களுக்கு முன்னால் அழிந்து போனதாக கருதபட்ட இந்த விலங்கினம் 1938 தென் ஆப்ரிகாவில் உள்ள ஒரு ஆற்று முகத்துவாரத்தில் கண்டுபிடிக்கபட்ட போதுதான் இந்த உயிரினம் உயிருடன் இருபதாக நம்பபடுகிறது.  
 

Bermuda Petrel 
330 வருடங்களுக்கு முன்னால் அழிந்து போனதாக கருதபட்ட இந்த பறவை  1951 ஆம் ஆண்டு 18 ஜோடிகள் Castle Harbor என்னுமிடத்தில் உள்ள பாறை கூட்டங்கள் அடங்கிய தீவுகளில் கண்டுபிடிக்கபட்டது. 
 



 Chacoan peccary 
 1930 -களில் தொல்பொருள் ஆய்வாளர்களால் அழிந்து போனதாக கருதபட்ட இந்த விலங்கினம் 1975 -இல் சுமார் 3000 விலங்கினங்கள் உயிருடன் இருப்பதாக பராகுவே நாட்டில் கண்டுபிடிக்கபட்டது. 
 
 



Lord Howe Island stick insect 
 1930 -களில் அழிந்து போனதாக கருதபட்ட இந்த விலங்கினம் 2001 ஆம் ஆண்டு  30 இந்த விலங்கினம் islet of Ball's Pyramid என்னுமிடத்தில் கண்டுபிடிக்கபட்டது. 

 
 
islet of Ball's Pyramid


New Caledonian crested gecko
 1866 ஆம் ஆண்டு அழிந்து போனதாக அறிவிக்கபட்ட இந்த விலங்கினம் 1994 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்டது, ஆனாலும் இது அழியும் தருவாயில் உள்ள விலங்கின பட்டியலில்தான் உள்ளது.




இன்னும் சில விலங்கினங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்......

2 comments:

ரசிகன் said...

புகைப்படங்கள் அருமை.

இவையெல்லாம் இந்த 2010 சூழலில் நிஜமாகவே அழிவின் விளிம்பில் தான் இருக்கும் என தோன்றுகின்றது.

Dr. சாரதி said...

ரசிகன் தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி”

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats