Sunday, September 19, 2010

விலங்கியல் வினோதங்கள்: தாய்மையுள்ள அப்பாக்கள் (Part II)

 நாம் இது வரை அறிந்திராத அபூர்வ நிகழ்வுகள்........

பொதுவாக உயிரினங்களில் தாய்தான் தனது பிள்ளைகளை கருவில் சுமந்து அது பருவம் எய்தும் வரை உணவு ஊட்டி வளர்க்கும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. ஆனால் வித்தியாசமாக விலங்கினத்தில் ஒரு சில அப்பா விலங்குகள் தனது குட்டிகளை வளர்த்து பேணி காக்கும் என்பது நமக்கு ஆச்சரியமான ஒன்றுதான். 

1. Hardhead catfish 
இந்த மீன் இனத்தில் உள்ள தந்தை மீன் தனது வாயினுள் சுமார் 48 கருவுற்ற முட்டைகளை  60 நாட்கள் வரை சுமந்து கொண்டு செல்லும். 60 நாட்கள் சுமப்பது  மட்டும்   ஆச்சரியம் இல்லை கருவுற்ற முட்டையானது பொரித்து வெளிவரும் அந்த 60 நாட்களும் உணவு ஏதும் உண்ணாமல் பட்டினியாக இருப்பத்துதான். ஆனால் தந்தை மீனுக்கு தேவையான சக்தி அதன் உடலில் உள்ள கொழுப்புகள் மூலம் கிடைத்துவிடும். 

Top Ten List Animal Dads - Hardhead Catfish
2. Marsupial frog 
 இந்த தவளை இனத்தின் தாயானது தரையில் முட்டையிட்டுவிட்டு சென்றுவிடும். முட்டைகள் பொரித்து வெளிவரும் நேரத்தில் குட்டிகளுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்காத காரணத்திற்க்காக தந்தை தவளையானது தனது குட்டிகளை தனது உடலில் உள்ள பைகளில் சுமந்து கொண்டே செல்லும். 

 
3 . Darwin 's frog 
இந்த தவளை இனத்தின் தாயானது முட்டைகளை இட்டுவிட்டு சென்றுவிடும், அப்பா தவளை தான் அடைகாக்கும். அது மட்டுமில்லை தனது குட்டிகளை தனது வாய்க்குள் வைத்தே எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துகொள்ளும். குட்டிகளுக்கு கால் வளர்ந்ததும் வெளியே விடும். 
Top Ten List Animal Dads - darwins frog


 4.  Mimic Poison frog
இந்த தவளை இனத்தின் தந்தையானது நல்ல தந்தை மட்டுமில்லை நல்ல கணவனும் கூட.  தாய் தவளை இலையின் மீது முட்டையிட்டுவிட்டு சென்று விடும். தந்தை தவளை முட்டைகளை இலையின் மீது தேங்கியுள்ள நீரினுள் கொண்டு செல்லும் பின் முட்டைகள் பொரித்து குட்டிகள் வெளிவரும்வரை காவல் காக்கும். முட்டைகள் பொரித்து குட்டிகள் வெளி வந்ததும்  குட்டிகளுக்கு தேவையான உணவுக்கு சத்தம் போட்டு தாய் தவளையை கூப்பிடும் உடனே தாய் தவளை வந்து இலையில் தேங்கியுள்ள நீரினுள் கருவுறாத முட்டையினை இடும் அதனை குட்டி தவளைகள் உண்ணும். 
Mimic Poison Frog

5 . Namaqua sandgrous 
ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள பாலைவனத்தில் காணப்படும் இந்த பறவைகளில் ஆண் பறவை முட்டைகளை இரவில் அடைக்காக்கும், பகலில் பெண் பறவைகள் அடைகாக்கும். குஞ்சு பொரித்து வெளிவந்ததும் குஞ்சுகளுக்கு தேவையான தண்ணீர் அந்த பாலைவனத்தில் கிடைக்காது, எனவே பகல் நேரத்தில் ஆண் பறவையானது சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறந்து சென்று அங்கு கிடைக்கும் நீரினை தனது உடலில் உள்ள இறக்கையில் சேமிக்கும் (இறைக்கையில் பஞ்சு போன்று அமைப்பு உள்ளது அதில் நீரினை சேமித்து வைத்து கொள்ளும்). பின் தனது குடும்பம் இருக்கும் பகுதிக்கு திரும்பி சென்று குஞ்சுகளுக்கு பருக கொடுக்கும். அது சுமந்து செல்லும் தண்ணீரின் அளவு தனது எடையை விட எட்டு மடங்கு அதிகம்.  (ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட பட்டுள்ளது http://elibrary.unm.edu/sora/Condor/files/issues/v069n04/p0323-p0343.pdf )

namaqua_sandgrouse
Namaqua Sandgrouse Fledgling

இன்னும் வரும் புதிய தகவலுடன்.........



11 comments:

எஸ்.கே said...

கடல் குதிரை மட்டுதான் இப்படி என நினைத்திருந்தேன். புதிய தகவல்கள் மிக்க நன்றி!

Dr. சாரதி said...

வணக்கம் எஸ் கே வருகைக்கு நன்றி....

venkat said...

தகவல்கள் அருமை

venkat said...

picture supper

Dr. சாரதி said...

வணக்கம் venkat வருகைக்கு நன்றி

துளசி கோபால் said...

அருமை.

நேரம் கிடைக்கும்போது இதையும் கொஞ்சம் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_04.html

Dr. சாரதி said...

துளசி கோபால் தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.....உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் மிகவும் அருமை.....

suneel krishnan said...

நல்ல தகவல்,படங்கள் நல்ல தெளிவு ,நல்ல தேர்வு

Dr. சாரதி said...

வணக்கம் Dr.Suneel Krishnan வருகைக்கு நன்றி

john said...

very very nice. keep it up. publish more like this artical. thankyouuuuu.

Dr. சாரதி said...

வணக்கம் john வருகைக்கு நன்றி

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats