பெண்களே உஷார்.....
கடந்த வாரம் சென்னையில் ஒரு பரபரப்பு, ஆங்கிலோ இந்தியன் பெண் ஆட்டோ ஓட்டுனரின் துணையுடன் தனது அருமை கணவனை கொன்று விட்டு கள்ளகாதலன் ஆட்டோ ஓட்டுனருடன் தலைமறைவாகி விட்டாள்.
அவள் அலுவலகம் சென்றுவர ஒரு ஆட்டோ ஓட்டுனரை அவளின் கணவனே ஏற்பாடு செய்துள்ளான். கால மாற்றம் அவளின் மனதையும் கல்லாக்கி கட்டிய கணவனையே கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. இங்குதான் அந்த அன்பான கணவனின் நேசத்தை புரிந்து கொள்ளவேண்டும். அவள் ஏற்கனவே இரண்டு முறை அதே ஆட்டோ ஓட்டுனருடன் அழகான இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு ஓடிவிட்டாள், ஆனாலும் அவன் அவளை மன்னித்து என்று கொண்டதன் விளைவு கொலையில் முடிந்தது.
எனக்கு ஓன்று புரியவில்லை, இது போன்று நடைபெற்ற அனைத்து கொலைகளிலும் குற்றவாளிகள் காவல் துறையினரால் கண்டுபிடிக்கபட்டு சிறையில் கம்பிதான் எண்ணி கொண்டு இருக்கிறார்கள் இறுதியில் தனது குழந்தைகளையும் ஆதரவற்ற நிலையில் தவிக்கவிட்டு என்ன சுகத்திற்காக கள்ளக்காதலனை தேடினார்களோ அதுவும் நிறைவேறாமல் கம்பி என்னும் இவர்கள் ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இதுபோன்று நடக்காது, ஆனால் அதற்க்கு நேர் எதிர்மறையாக நடப்பதின் காரணம் புரியவில்லை.
சரி இனி விசயத்திற்கு வருவோம், எளிதில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் பெண்களுக்கானது ஒரு எச்சரிக்கை பதிவு.
பெண்கள் பொதுவாக மலரினும் மெல்லிய குணம் படைத்தவர்கள் என்பதை நான் நம்புகிறவன், இவர்களை மயாக்குவதற்க்காக ஆண்கள் செய்யும் வித்தைகள் பல, நான் எல்லா ஆண்களையும் சொல்லவரவில்லை, பொதுவாக பெண்கள் யார் யாரிடம் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்.....
பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள்: இது சென்னைக்கு பொருந்தாது என்றே நினைக்கிறான், உதாரணத்திற்கு தென் மாவட்டங்களை எடுத்துகொள்வோம், இங்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தான் ஹீரோக்கள் (ரஜினி மற்றும் கமலை மிஞ்சுவிடுவார்கள்) எனக்கு தெரிந்த ஒரு ஓட்டுனருக்கு குறைந்தது பத்து காதலிகளாவது இருந்திருப்பார்கள் அதில் எத்தனை பெண்கள் நாசமாகபட்டு இருப்பார்கள்.....
பஸ்சுக்காக ஓடிவரும் பெண்களுக்கு பஸ் நிறுத்தத்திற்கு முன்பாகவே பஸ்சை நிறுத்தி ஏற்றி கொள்வது, பஸ்சை வேகமாக ஒட்டி கவருவது...மற்றும் உதவி செய்வது போன்று நடித்து திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களை வெகு சுலபத்தில் வசிகரித்து விடுவார்கள்.....
கடைஊழியர்கள் : பெண்கள் பெரும்பாலும் புழங்கும் எந்த கடைகளாக இருந்தாலும் அங்குள்ள பெரும்பாலான ஆண்களுக்கு சபல புத்தி கண்டிப்பாக இருக்கும் அருமையாக பேசுவார்கள், பிறகு ஒன்றிரண்டு இரட்டை அர்த்தமுள்ள ஜோக் அடிப்பார்கள், மெதுவாக கையை வைப்பார்கள் எதிர்ப்பு தெருவித்தால் அடங்கிவிடுவார்கள் இல்லையேல் அவ்வளவுதான்....
ஆட்டோ ஓட்டுனர்கள்: பொது மக்களிடம் மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பு பெர்ற்றவர்கள், எனவே இவர்களின் நாவில் தேன் மழை கொட்டும் (பெண்களிடம் மட்டும்).
இன்ஸ்டால்மேன்ட் வசூலிப்பவர்கள்: இவர்கள் பொதுவாக பகலில் கணவர்கள் மற்றும் ஆண்கள் இல்லாத நேரத்தில் பணம் வசூலிக்கவருவதால் இவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்....
சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள்: இவர்கள் மீது சீக்கிரம் சந்தேகம் வராது, ஆனால் இவர்கள் மீதும் கவனமாக இருக்கவேண்டும்.
பெண்களே உங்களுக்கு யார் மீதேனும்சந்தேகம் வந்தால் உடனடியாக தைரியமாக எதிர்ப்பை காட்டுங்கள் அடங்கி போனால் வாழ்க்கையில் பல சோதனைகள் வர வாய்ப்புண்டு.