Saturday, December 13, 2008

அறிவோமா அறிவியல்: அனகோண்டா சில வினோதங்கள்!


பாஞ்சாலி அனகோண்டா (Breeding ball): இனபெருக்கத்துக்கு தயாராகும் முறை மிகவும் வித்தியாசமானது, ஒரு பெண் அனகோண்டாவை பல ஆண் (சில நேரங்களில் 12) அனகொண்டாக்கள் ஒரே நேரத்தில் இணைய துடிக்கும், அனைத்து ஆண் அனகொண்டாவும் பந்து போல பெண் அனகோண்டாவை பிணைந்து கொள்ளும். ஆனால் அதில் ஒரே ஒரு ஆண் மட்டுமே இணையும். இந்த வீடியோவில் ஒரு அதிசய நிகழ்வை நீங்கள் காணலாம், அதாவது அனகோண்டாவின் காலை. (இதைதான் பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களோ)




அனகோண்டாவின் வேட்டை: கருவை சுமக்கும் பெண் அனகொண்டாகள் சுமார் ஏழு மாதங்கள் வரை உணவு அருந்தாது அதாவது குட்டிகள் பிறக்கும் வரை, எனவே இதற்க்கு தேவை ஒரு அருமையான உணவு வேட்டை, எனவே உலகின் மிக பெரிய எலி இனமான Capybara -வை தேர்ந்து எடுத்து கொன்று அதனை சாப்பிடும்.




அனகோண்டா பிறப்பு: பெரும்பான்மையான பாம்பினங்கள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும், சில பாம்பினங்கள் குட்டி போடும், அனகோண்டாவும் குட்டி போடும் இனத்தை சார்ந்ததுதான், ஒரு நேரத்தில் சுமார் நாற்பது குட்டிகள் வரை ஈனும் (Video). அதில் இளம் குட்டிகள் உயிர் தப்பி பலிப்பது மிக குறைவே. இந்த வீடியோவில் பிறந்த குட்டிகளை ப்ராணா எனப்படும் மீன்களும், பூனையின விலங்குகளும் எப்படி வேட்டையாடி அவற்றை கொன்று விடுகின்றன என்பதை காணலாம்.



விஞ்ஞானியை கடித்த அனகோண்டா: விஷ தன்மை இல்லாத இந்த பாம்பு ஒரு விஞ்ஞானியை கடிக்கும் காட்சி....




கொசுறு: தற்பொழுது தமிழகத்தை ஆட்டிபடைக்கும் இருதலை மணியன்........


4 comments:

Anonymous said...

this video clips most useful for us thank you very much.

வடுவூர் குமார் said...

மீண்டும் ஒரு அருமையான தகவல்களுடன் கூடிய விடியோ.
நன்றி.

ஆட்காட்டி said...

]

Dr. சாரதி said...

Anonymous, வடுவூர் குமார், ஆட்காட்டி தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.....என்ன ஆட்காட்டி ப்ளீஸ் ஏதாவது எழுதுங்க.......

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats