Wednesday, December 3, 2008

உலகின் மிகப்பெரிய மீன் காட்சியகங்கள்

Georgia Aquarium, Atlanta, USA: உலகின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இந்த காட்சியகத்தில் சுமார் 500 மீனினங்கள் வளர்க்கப்படுகிறது, சுமார் 100,000 கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கியது. இதில் 8.1 million US gallons அளவு கடல் நீர் நிரப்பபட்டுள்ளது. குறிப்பாக திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்ற மிக பெரிய கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வளர்க்கப்படுகிறது.



Churaumi Aquarium, Motobu, Okinawa, Japan: உலகின் இரண்டாவது மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இங்கு உலகின் மிக அபூர்வமான மீன்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. இங்கு விதவிதமான சுறா மீன்களும், Sting Ray எனப்படும் மீன்களும் உள்ளது சிறப்பு அம்சமாகும். 1,981,290 gallons கொள்ளவு கடல்நீர் நிரப்பபட்டுள்ளது.


Acquario di Genova, Genova, Italy: ஐரோப்பாவின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இங்கும் பல அரிய வகை மீன்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.


AQWA, Western Australia: ஆஸ்திரேலியாவின் மிக பெரிய மீன்காட்சியகம் இதுதான்.

UShaka Marine World, KwaZulu-Natal, South Africa: ஆப்பிரிக்காவின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். மிக அழகிய பொழுது போக்கு பூங்காவாகிய இதில் சிறிய கடல் குதிரை முதல் பெரிய சுறா மீன்கள் வரை வளர்க்கப்படுகிறது.


AquaDom, Radisson Hotel Aquarium, Berlin: உலகின் மிக பெரிய உருளை வடிவ மீன் காட்சியகம். 25 மீட்டர் உயரமும், 260,000 gallons நீர் நிரப்பபட்டு சுமார் 2500 வகையான மீன்கள் வளர்க்கப்படுகிறது.



The Dubai Aquarium: வருங்காலத்தில் உலகின் மிகப்பெரிய மீன் காட்சியகம் இதுதான். மூன்றடுக்கு உயரம் உடையது இவ்வாண்டின் இறுதியில் திறக்கப்பட உள்ளது.

உலகின் மிக பெரிய Virtual மீன் தொட்டி (30 by 250 meters LED screen) சீனாவின் பீஜிங்கில் உள்ள இரண்டு ஷாப்பிங் மால் களுக்கு இடையே அமைக்கபடுள்ளது.



2 comments:

ஆட்காட்டி said...

000

குடுகுடுப்பை said...

நல்ல தகவல். ஆனா இந்த மீனெல்லாம் சாப்பிட விட மாட்டங்களே.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats