தமிழகம்- ஒரு மலையாள எழுத்தாளரின் பார்வையில்!
பால் சக்கரியா (மலையாள நாட்டின் பிரபல எழுத்தாளர்)
தமிழகத்தின் வளர்ச்சி:
தமிழ்நாட்டில் சின்னச் சின்ன கிராமங்கள் கூட முன்னேறி வருவதை நான்கவனித்திருக்கிறேன். புதிய நெடுஞ்சாலைகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் இணைக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் பெரும் தொழிற்சாலைகளால் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. என்னை அதிகம் மகிழ்ச்சிக்குள்ளாக்குவது தமிழகத்தின் சிறு கிராமங்களில் தென்படும் பள்ளி மாணவர்களின் அபரிமிதமான வளர்ச்சிதான். தமிழ்நாட்டின் எதிர்காலம் அழியாத எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பது இந்தச் சின்னச் சின்ன முகங்களில்தான்.

முல்லை பெரியாறு பிரச்சனை:

"இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளும் மீடியாவும் ஊதிப் பெரிதாக்கும் விஷயம்தான். அதனால் அவர்களுக்கு ஆதாயம் இருக்கிறது. கேரளாவில் தண்ணீர் கொண்டு என்ன செய்ய முடியும் என எனக்கு நன்றாகத் தெரியும். கேரளாவின் 40 நதிகளில் ஓடும் 7804 கோடி கனமீட்டர் நீரில் வெறும் 8 சதவிகிதம் மட்டுமே அங்கே பயன்படுத்தப்படுகிறது. மீதி 92 சதவிகிதமும் கடலுக்குத்தான் செல்கிறது. நாங்கள் தின்னுகிற அரிசி, காய்கறிகள், கறிவேப்பிலையில் இருந்து குருவாயூரில் அர்ப்பணம் செய்யும் பூக்கள் வரை தமிழ்நாட்டில் இருந்துதான் வருகின்றன. கேரளா கொடுக்கும் தண்ணீரைக் கொண்டு தமிழக விவசாயிகள் வேர்வை சிந்தி உருவாக்கும் விளைபொருட்கள்தான் மலையாளிகளின் அன்றாட உணவு. இரண்டு நாள்கள் லாரி ஸ்டிரைக் வந்தால் கேரளாவில் மக்களுக்கு சாப்பிட காய்கறிகள் கிடைக்காது. உண்மையில் மலையாளிகள் செய்யவேண்டியது, கேரளாவில் வீணாகும் தண்ணீரை மேலும் அதிகமாக தமிழகத்துக்குக் கொடுத்து அதற்கு நியாயமான விலையையும் தன்னிடம் இல்லாத அரிசி, காய்கறி, பழங்களை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்வதும்தான்.''
(5-11.2008 குமுதம் இதழில் வெளியானது)