Saturday, November 29, 2008

ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன் :நாங்கெல்லாம் கணக்குல புலியாக்கும்....

1. இந்த கணக்கு சரிதானா மக்களே?
2.எனக்கு Trigonometry எல்லாம் மறந்து போச்சு? சரிதான என்று பார்த்து சொல்லுங்களேன்?


3. Example -ஐ அப்படியே try பண்ணிட்டேன், கணக்கு சரிதானே?
4. விரிவாக எழுத சொன்னாங்க ரெம்ப விரிவா எழுதிட்டனோ?
algebra கொஞ்சம் மறந்து போச்சு அதுதான் இப்படி ஆயிடிச்சு.


5.ரெம்ப easy யான கேள்விய கேட்டு இருக்காங்க, கண்ணு முன்னாலேயே X இருக்கு இதை எங்களால கண்டுபிடிக்க முடியாதாக்கும்.....நாங்களெல்லாம் கணக்குல பெரிய புலியாக்கும் 6.இந்த கணக்கை சரியாதானே செஞ்சிருக்கேன் ஏன் முட்டை மார்க் போட்டிருக்காங்க?


அறிவோமா அறிவியல்: டால்பின்கள் சில உண்மைகள்!

டால்பின்கள் வவ்வால்கள் போன்றே எக்கோ (echolocation) மூலம், அதாவது எதிரே இருக்கும் பொருள் மேல் பட்டு வரும் எதிரொலியை பயன்படுத்தியே உணவை கண்டுபிடிக்கவும், இடம் பெயர்ந்து செல்கிறது.

பொதுவாக டால்பின்களின் உணவு மீன்களும், கணவாய்களும்தான் (squid), இவை கூட்டமாக சென்றுதான் வேட்டையாடும்.


டால்பின்கள் தூங்கும் பொது ஒரு கண்ணை திறந்து வைத்துதான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடதுபக்க மூளை வேலை செய்யும். இடதுகண் திறந்து இருந்தால் வலது பக்க மூளை வேலை செய்யும். தூங்கும் பொது மிக மெதுவாகவே நீந்தும்.


டால்பின்கள் பற்கள் இரையை பிடிக்க மட்டுமே பயன்படுத்தும். உண்ணும் பொது அப்படியே விழுங்கிவிடும்.


டால்பின்களில் சுமார் 40 வகையான இனங்கள் உள்ளன, இதில் பெரும்பான்மையான டால்பின்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.

வளைந்த முக அமைப்பை உடைய "bottlenose" டால்பின்களை பார்ப்பதற்கு சிரித்து கொண்டிருப்பதபோன்று தோற்றம் அளிக்கும்.


கூரான உடல் அமைப்பை பெற்றிருப்பதால் மிகவேகமாக நீந்தும் திறனுடையது. அதாவது மணிக்கு சுமார் 41 கிலோ மீட்டர்கள் வேகத்தில் நீந்தும்.

சுமார் 12 -18 மாதங்கள் வரை குட்டிகளுக்கு பால் ஊட்டும்.


உங்களுக்கு தெரியுமா தண்ணீரின் அடியில் டால்பின் குட்டிகள் நீர்க்குமிழி உண்டாக்கி விளையாடும் என்பது.


டால்பின்கள் blowhole மூலமாகவே சுவாசிக்கும், இதன் மேல் காணப்படும் blowhole-லில் திறந்து மூடும் அமைப்பு காணப்படும்.

closed blowhole

Opened blowhole

தண்ணீரின் மேலே சுமார் 20 அடிகள் வரை துள்ளி குதிக்கும் திறனுடையது.


பிரேசில் நாட்டில் உள்ள சின்ன மீன்பிடி நகரமான Laguna-இல் உள்ள மீனவர்கள் டால்பின்களை பிடிப்பதற்கு சிறிய மீன்களை வலையில் கட்டிவிடுவார்கள் இத்தனை உண்ண வரும் டால்பின்கள் வலையில் மாட்டிவிடும். சிலவருடங்கள் கழித்து டால்பின்கள் நன்கு பழகிவிட்டது அதாவது வலையில் கட்டிய மீன்கள் கரையை நோக்கியே அசைந்தாடும், இப்படி கண்டுபிடித்தபின் இவை வலை இருக்கும் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. சிலநேரங்களில் எத்தனும் ஒரு டால்பின் இது போன்று பொய் மீன்களை கண்டால் உடனடியாக எல்லா டால்பின்களுக்கும் தகவல் சொல்லிவிடும். அதிசயமான ஒரு நிகழ்வுதான்.


சீனா மற்றும் தென் அமேரிக்காவில் காணப்படும் நன்நீரில் வாழ் டால்பின்கள் அழியும் தருவாயில் உள்ளது.



Friday, November 28, 2008

மும்பை: தீவிரவாதி தாக்குதல் முடிவிற்கு வந்தது

தாஜ் மஹால் ஹோட்டெலில் இறுதியாக இருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லபட்டத்தின் விளைவாக 60 மணிநேரம் நடைப்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல் முடிவிற்கு வந்தது.


தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கிய தேசிய பாதுகாப்பு படையினருக்கு (NSF) நாமுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வோம்.


இப்போராட்டத்தில் இன்னுயிர் நீத்த காவல் துறைனருக்கும், தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நம்முடைய கண்ணீரினை காணிக்கையாக்குவோம்.

Hemant Karkare



இத்தாக்குதலில் இன்னுயிரை இழந்த 200 மேற்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினர்க்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்.




Thursday, November 27, 2008

அறிவோமா அறிவியல்: தவளைகள் சில வினோதங்கள்!

"Ornate horned frog" அர்ஜென்டினாவில் காணப்படும் இந்த தவளைகள் ஒரு சுண்டலியை அப்படியே விழுங்கும் திறனுடையது.



தவளைகளுக்கு தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியம் இல்லை இதன் தோல்கள் மூலமாக தண்ணீரை உறிந்து கொள்ளும்.



"Spring peeper" தவளையின் உடல் உறுப்புகளில் சுமார் 65 சதவீதம் குளிகாலங்களில் பனியால் உறைந்துவிடும்

"Fire-bellied toad" இதன் வயிற்று பகுதியில் காணப்படும் சிவப்பு நிறம் எதிரிகளை பயமுறுத்தவும், உடலில் விஷம் உள்ளது என்பதையும் உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
"Brazilian baby frog" தான் உலகின் மிக சிறிய தவளையாகும்.

"Toad-fish" தண்ணீருக்குள் உடல்லுறவு கொள்ளும் பொது ஏற்படுத்தும் சத்தம் கரையில் நிற்கும் நமக்கு கேட்க்கும்.


"African clawed frog" இதன் உடலில் சுரக்கும் ஒரு விதமான வேதிப்பொருள் நோயை உண்டுபண்ணும் நுண் உயிரினங்களை கொல்லும் திறனுடையது.


தேரைகளால் (Toad) தவளையை (Frog) போல் துள்ளி குதிக்க முடியாது.

Toad

Frog

"Horned Toad" இந்த தவளைகள் எதிரியை பயமுறுத்த கண்களில் இருந்து இரத்தத்தை பீச்சியடிக்கும்.



சிலதவளைகள் (Wood frogs) குளிர் காலத்தில் பனியுள் உறைந்துவிடும் வெயில் காலம் தொடங்கி பனி உருகியதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இதன் தோலானது உடலினுள் இருக்கும் உறுப்புகளை பனியில் உறயவிடாமல் தவிக்கும் வண்ணம் பலம் வாய்ந்தது.


உலகின் மிக பெரிய தவளையினம் "Goliath frog" தான். சுமார் மூன்று கிலோ எடை வரை வளரும்.
ஆப்ரிக்காவில் காணப்படும் Bee Frog தேனீக்களை விட சிறியதாகத்தான் இருக்கும்.


நன்கு வளர்ந்த "Gold Frog"
1 cm உயரமே இருக்கும்.


தமிழில் டைப் செய்ய


View My Stats