Thursday, November 6, 2008

அறிவோமா அறிவியல்: பென்குயின் சில வினோதங்கள்!

1. பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.

2. தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காக கழித்துவிடும். 3. நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.

4. இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும்
இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

5. இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.

6. இதன் உடல் வெப்பநிலையும் மனிதர்களை போல் தான். திமிங்கலங்களை போல் தோலின் அடிபகுதி முழுவதும் கொழுப்பால் சூழபட்டிருக்கும். ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும்.

7. இவற்றின் உணவு மீன்கள்,மற்றும் இறால்கள், இதன் அலகின் முன்பகுதி வளைந்து காணப்படும் இவை வழுக்கும் தன்மையுள்ள மீன்களை தவறவிடாமல் பிடித்துகொள்ளும்.

8. இவை நன்னீரை குடிக்காது மற்றும் நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.

9. மூடு வந்துவிட்டால் முதலில் முட்டையிடுவதற்கு அழகான இடத்தை தேர்வு செய்யும். பின் நல்ல ஆண் துணையையை தேடும். அதன்பின் இரண்டும் சேர்ந்து பாடும் அதாவது பின்னர் குரல் மூலம் துணையை கண்டுபிடிக்க. இந்த சொந்தம் பெரும்பாலும் வருடகணக்கில் தொடரும்.


10. பொதுவாக இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன்பின் பெண் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சி
ல நேரங்களில் பெண் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்).


11. பொதுவாக இவை இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். அதன் பின் பென் பறவை இரைதேட செல்லும் அதுவரைக்கும் ஆண்தான் அடைகாக்கும்.(சில நேரங்களில் பறவை திரும்பி வர இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்). குஞ்சு பொரித்து வெளியே வந்ததும் கத்தும், பெற்றோர்கள் அதன் குரலை கேட்டு பின்னர் அடையாளம் கண்டுகொள்ளும்.



12. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்ததும் அவற்றை பிற பறவைகளிடம் ஒப்படைத்து விட்டு (sort of like a daycare) கடலுக்குள் சென்று உணவு தேட ஆர
ம்பிக்கும்.

"daycare"


13. பொதுவாக இதற்கு நல்ல பாதுகாப்பு முறை கிடையாது. சீல்கள் தான் இதன் முதல் எதிரி.

14. மனிதர்களை போல் நன்றாக பொழுதுபோக்க கரணம் அடிக்கும், சர்பிங் பண்ணும்....
15. 17 வகையான பென்குயின் இனம் உள்ளது.

பென்குயின் பற்றிய வீடியோ காண இங்கே சொடுக்கவும்.


5 comments:

ஆட்காட்டி said...

ஆனா இவை உருவத்தில் மிகவும் சிறியவை.

யூர்கன் க்ருகியர் said...

//ஆயிரக்கணக்கான பென்குயின்கள் ஒன்றிணைந்து நின்று கொண்டு வெப்பத்தை பெற்றுக்கொள்ளும். //

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
***************************

நல்ல சுவராஸ்யமான தகவல்களுக்கு நன்றி

Dr. சாரதி said...

ஜுர்கேன் க்ருகேர் மற்றும் ஆட்காட்டி அவர்களே உங்களுடைய வருகைக்கு நன்றி.

Anonymous said...

Realy very interesting one.

Thank you.
Rajkumar.

Dr. சாரதி said...

நன்றி Rajkumar அவர்களே....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats