அறிவோமா அறிவியல்: டால்பின்கள் சில உண்மைகள்!
டால்பின்கள் வவ்வால்கள் போன்றே எக்கோ (echolocation) மூலம், அதாவது எதிரே இருக்கும் பொருள் மேல் பட்டு வரும் எதிரொலியை பயன்படுத்தியே உணவை கண்டுபிடிக்கவும், இடம் பெயர்ந்து செல்கிறது.
பொதுவாக டால்பின்களின் உணவு மீன்களும், கணவாய்களும்தான் (squid), இவை கூட்டமாக சென்றுதான் வேட்டையாடும்.

டால்பின்கள் தூங்கும் பொது ஒரு கண்ணை திறந்து வைத்துதான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடதுபக்க மூளை வேலை செய்யும். இடதுகண் திறந்து இருந்தால் வலது பக்க மூளை வேலை செய்யும். தூங்கும் பொது மிக மெதுவாகவே நீந்தும்.

டால்பின்கள் பற்கள் இரையை பிடிக்க மட்டுமே பயன்படுத்தும். உண்ணும் பொது அப்படியே விழுங்கிவிடும்.

டால்பின்களில் சுமார் 40 வகையான இனங்கள் உள்ளன, இதில் பெரும்பான்மையான டால்பின்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.

வளைந்த முக அமைப்பை உடைய "bottlenose" டால்பின்களை பார்ப்பதற்கு சிரித்து கொண்டிருப்பதபோன்று தோற்றம் அளிக்கும்.

கூரான உடல் அமைப்பை பெற்றிருப்பதால் மிகவேகமாக நீந்தும் திறனுடையது. அதாவது மணிக்கு சுமார் 41 கிலோ மீட்டர்கள் வேகத்தில் நீந்தும்.
சுமார் 12 -18 மாதங்கள் வரை குட்டிகளுக்கு பால் ஊட்டும்.

உங்களுக்கு தெரியுமா தண்ணீரின் அடியில் டால்பின் குட்டிகள் நீர்க்குமிழி உண்டாக்கி விளையாடும் என்பது.

டால்பின்கள் blowhole மூலமாகவே சுவாசிக்கும், இதன் மேல் காணப்படும் blowhole-லில் திறந்து மூடும் அமைப்பு காணப்படும்.
பிரேசில் நாட்டில் உள்ள சின்ன மீன்பிடி நகரமான Laguna-இல் உள்ள மீனவர்கள் டால்பின்களை பிடிப்பதற்கு சிறிய மீன்களை வலையில் கட்டிவிடுவார்கள் இத்தனை உண்ண வரும் டால்பின்கள் வலையில் மாட்டிவிடும். சிலவருடங்கள் கழித்து டால்பின்கள் நன்கு பழகிவிட்டது அதாவது வலையில் கட்டிய மீன்கள் கரையை நோக்கியே அசைந்தாடும், இப்படி கண்டுபிடித்தபின் இவை வலை இருக்கும் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. சிலநேரங்களில் எத்தனும் ஒரு டால்பின் இது போன்று பொய் மீன்களை கண்டால் உடனடியாக எல்லா டால்பின்களுக்கும் தகவல் சொல்லிவிடும். அதிசயமான ஒரு நிகழ்வுதான்.

சீனா மற்றும் தென் அமேரிக்காவில் காணப்படும் நன்நீரில் வாழ் டால்பின்கள் அழியும் தருவாயில் உள்ளது.

2 comments:
)))))
நன்றி ஆட்காட்டி அவர்களே.....
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்