Friday, November 7, 2008

உலகின் மிக நீளமான பாலங்கள்!
10: Seven Mile Bridge: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இந்த பாலம் கல்ப் ஆப் மெக்சிகோ வையும் புளோரிடா வளைகுடாவையும் இணைக்கின்றது. இந்த பாலம் கட்டும் பொழுது (1982-ல்) இதுதான் உலகின் மிக பெரியதாக இருந்தது. இதன் நீளம் சுமார் 10 கிலோமீட்டர்கள்.


9.
San Mateo-Hayward Bridge: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்த பாலம் சான் பிரான்சிஸ்கோ தீபகற்பத்தையும் ஒக்லாந்தையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 11.5 கிலோமீட்டர்கள்.


8. Confederation Bridge: பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் கனடாவின் நியூ ப்ருன்ச்விச்கையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 12.9 கிலோமீட்டர்கள். 1997 ஆம் ஆண்டு திறக்கபட்டது.


7. Rio-Niteroi Bridge: பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவையும் நிடேரோய்யையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 13.3 கிலோமீட்டர்கள். 1974 ஆம் ஆண்டு திறக்கபட்டது.


6. Penang Bridge: பினாங்கு தீவையும் மலேசியாவையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 13.5 கிலோமீட்டர்கள். 1985 ஆம் ஆண்டு திறக்கபட்டது.


5. Vasco da Gama Bridge: போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் நகரின் தகுஸ் நதியின் மேல் கட்டபட்டுள்ளது. ஐரோப்பாவின் மிக நீளமான பாலம் இதுதான். இதன் நீளம் சுமார் 17.2 கிலோமீட்டர்கள்.


4. Chesapeake Bay Bridge: அமெரிக்காவின் மேரிலாண்டு மாகாணத்தில் உள்ள இந்த பாலம் சுமார் 30 கிலோமீட்டர்கள்.

3. King Fahd Causeway: சவூதி அரேபியாவையும் பகரைனையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 25 கிலோமீட்டர்கள், 1986 ஆம் ஆண்டு திறக்கபட்டது.
2. Donghai Bridge: சீனாவின் சங்காய் நகரையும் கடற்கரை நகர் யாங்க்ஷன் யையும் இணைக்கின்றது. இதன் நீளம் சுமார் 33 கிலோமீட்டர்கள், 2008 ஆம் ஆண்டு திறக்கபட்டது.


1. Lake Pontchartrain Causeway: உலகின் மிக நீளமான பாலம் இதுதான். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள இந்த இரட்டை பாலத்தின் நீளம் சுமார் 38.42 கிலோமீட்டர்கள்.

1 comment:

Anonymous said...

Wow. Good one.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats