Saturday, November 8, 2008

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

1. நமது நடு விரலில் நகம் வேகமாகவும் கட்டைவிரலில் மெதுவாகவும் வளரும்.

2. பெண்களின் மாதவிலக்கின் போது கைகளின் நடுவிரலில் உணர்ச்சி குறைவாக இருக்கும்.

3. நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது.


4. நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.


5. நமது உடலில் அலர்ஜியை உண்டுபண்ணும் முக்கிய உணவு பொருள்கள்: பால், முட்டை, கோதுமை, நிலக்கடலை, சோயா, பருப்பு வகைகள், மற்றும் மீன்கள்.

6. கருவறையில் கரு உருவாகி 11 வாரங்கள் ஆனதும் குழந்தை கொட்டாவி (yawn) விட ஆரம்பிக்கும்.

7. நமது காதின் வளர்ச்சி வருடத்திற்கு 0.01 இன்ச் வளரும்.

8. புட்டிபால் குடித்த குழந்தையைவிட பொதுவாக தாய்பால் குடிக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாய் மாறியபின் ஒல்லியாக இருக்கும்.

9. நமது முகத்தில் 60 தசைகள் உள்ளன நாம் சிரிக்கும் போது 5 முதல் 55 தசைகள் வேலை செய்கின்றன.

10. நமது வயற்றினுள் (colon) 400 வகையான பாக்டிரியாக்கள் வாழ்கின்றன.



11. நமது வாயில் உருவாகும் எச்சிலின் கொதிநிலை நீரை விட நான்கு மடங்கு அதிகம். ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 5000 லிட்டர் எச்சில் உற்பத்தியாகிறது.

12. நாம் ஒவ்வொரு பத்து வினாடியும் சுமார் ஒரு லிட்டர் வாயுவை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம்.

13. ஆண்களை விட பெண்களுக்கு நாவில் சுவைமொட்டுக்கள் அதிகம்.



14. மனிதர்கள் முப்பது வயதிற்கு பிறகு வளர்ச்சி குறைந்து உடல் சுருங்க ஆரம்பிக்கிறது.

15. நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.



16. ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரியாக ஒரு இரவில் ஏழு கனவுகள் வரும்.

17. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.

18. சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 15 முறை சிரிக்கிறான்.

19. நமது உடலில் உள்ள எலும்புகளில் பாதிக்கு மேல் நம் கால்களிலும் கைகளிலும் உள்ளது.

20. நாம் பிறக்கும் போது நிறகுருடாகதான் (color blindness) இருப்போம்.

.....................................................................தொடரும்

9 comments:

Anonymous said...

Very usefull Information

Anonymous said...

nantri anna, evalo vishayam therinjirukinga epidi????????

Anonymous said...

மிகவும் அரிதான தகவல்களை தருகிறீர்கள். பணி தொடர வாழ்த்துக்கள்

Dr. சாரதி said...

speed, Anonymous and Mahesh தாங்கள் வருகைக்கு நன்றி....

ஆட்காட்டி said...

வந்திட்டம்.

Anonymous said...

Only blog that gives interesting scientific facts in Tamil.
Continue your good job.
Anbudan
Prakash

நசரேயன் said...

நல்ல பயனுள்ள தகவல்

Dr. சாரதி said...

ஆட்காட்டி, Prakash, நசரேயன், தாங்கள் வருகைக்கு நன்றி. தங்களின் மேலான ஆதரவு மேலும் தொடர வேண்டுகிறேன்.

Unknown said...

மிகவும் அருமையான தகவல்

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats