Saturday, November 22, 2008

அறிவோமா அறிவியல்: நம் உடலில் உபயோகம் இல்லாத இருபது உறுப்புகள்! (Part-1)

மனித இனம் விலங்குகளில் இருந்துதான் பரிணாம முறையில் (evolution) உருவானது என்பதற்கான சில அடையாளங்கள் இன்னும் நம் உடலில் தங்கியுள்ளன இவை பொதுவாக நம் உடலில் தேவை இல்லாத உறுப்பாகத்தான் (vestigial organs) இருக்கிறது, அதனை இப்பகுதியில் காண்போம்.

1.
ERECTOR PILI: முடி சிலிர்த்துக்கொள்ள கொள்ள உதவும் இந்த சிறிய தசையானது நமது முடியின் வேர்பகுதியில் காணப்படும். சிலவிலங்குகளில் இந்த பண்பு காணப்படும் இந்த தசை பகுதி நமது உடலிலும் தங்கிவிட்டது.


2. MALE NIPPLES: கருவில் குழந்தை உருவாகும் போது இந்த உறுப்பு உருவாகிவிடும் அதன் பிறகுதான் testosterone ஹார்மோன்களின் மூலம் பாலியல் மாற்றம் நடப்பதால் அவை ஆண்கள் உடம்பிலும் தங்கிவிட்டது.

3.
PALMARIS MUSCLE: மரத்தில் தொங்கிக்கொண்டு வாழும் விலங்குகளின் கைகளில் காணப்படும் இந்த தசை பகுதியானது தற்காலத்தில் சுமார் 89 சதவீதம் மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீளமான இந்த தசை நம் கைகளில் கை முட்டிகளில் ஆரம்பித்து மணிகட்டுவரை நீண்டு இருக்கும்.

4. SUBCLAVIUS MUSCLE: நான்கு கால்களில் நடந்த விலங்குகளுக்கு உபயோகமாக இருந்த இந்த சின்ன தசை பகுதி நம் தோள்களின் first rib to the collarbone-ல் காணப்படுகிறது. இது சிலருக்கு இரண்டும், சிலருக்கு ஒன்றும் சிலருக்கு ஒன்றுமே இல்லாமலும் இருக்கலாம்.


5. DARWIN’S POINT: நமது காதுமடல்களில் காணப்படும் சின்ன மடிப்புதான். இந்த உறுப்பு விலங்குகளில் இருந்து நமக்கு அப்படியே வந்துவிட்டது. இவை பெரும்பாலும் சத்தத்தை கூர்மையாக கேட்பதற்காக விலங்குகளுக்கு அமையபெற்றது.

6. THIRD EYELID: நமது மூதாதையர்களான பறைவகளுக்கும் பாலூட்டிகளுக்கும் இந்த மூன்றாவது கண்ணில் விழும் தூசிகளை தடுக்கவும் வெளியேற்றவும் உதவும் இப்பகுதி நம் கண்ணில் தங்கிவிட்டது. அதாவது நம் கண்ணில் தூசு விழுந்துவிட்டால் நாம் உடனே கையை கொண்டுசெல்லும் இடம்தான் அது.


7. NECK RIB: ஒரு ஜோடி cervical ribs எலும்புகள் ஊர்வன (reptiles) தோன்றும் போதே செயல் இழந்து போன இந்த எலும்புகள் இன்னும் நம் உடலில்
தங்கிவிட்டன.


8.WISDOM TEETH: மனிதகுலம் தோன்றும் பொது இலை தழைகளை உண்டு வாழ்ந்தான் என்பது நமக்கு தெரியும். அந்தகாலகட்டங்களில் அவனுக்கு இந்த பற்கள் (Third molar) பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நம்முடைய இந்த கடவாய் பற்கள் இன்று எதற்கும் எதற்கும் உபயோகம் இல்லாமல் சில நேரங்களில் மரணவலியை ஏற்படுத்தி நம்மை துன்புறுத்தும்.


9. EXTRINSIC EAR MUSCLES: நம் மூதாதையர்கள் விலங்குகள் தான் என்பதற்கு முக்கிய உதாரணமாக அமையும் இந்த உறப்பு நமது காதுகளில் காணப்படுகிறது. அதாவது ஆடு, மாடு, குரங்கு, முயல் போன்ற விலங்குகள் தனது காதுகளை தன்னிச்சையாக அசைக்கும் தன்மையுடையது, அதற்கு தேவையான தசைபகுதி நமது காதுகளில் இன்னும் அப்படியே இருக்கிறது ஆனால் பயன்படாமல். நாம் சிலநேரம் பார்த்திருப்போம் சிலரால் தன்னிச்சையாக காதுகளை அசைக்க முடியும் அதற்கு காரணம் இந்த தசைகள்தான்.


10. VOMERONASAL ORGAN (VNO), or JACOBSON'S ORGAN: நமது மூக்கு நாசி துவாரத்தினுள் காணப்படும் மிக சிறிய nonfunctional chemical receptors உறுப்பு.


3 comments:

Anonymous said...

மனிதன் பிற விலங்கிலிருந்து வரவில்லை மாறாக பிற விலங்காக மாறுகிறான்
naushad

Anonymous said...

சூப்பர்!!!

Dr. சாரதி said...

naushad and Vijay Chinnasamy வருகைக்கு நன்றி....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats