Saturday, November 1, 2008

அறிவோமா அறிவியல்: அழிவின் விளிம்பில் உள்ள பத்து பாலூட்டிகள்!

உலகில் ஏற்படும் சுற்றுப்புறசூழ்நிலை மாற்றங்களாலும், உணவிற்காகவும், மருத்துவத்திற்க்ககவும் விலங்கினங்கள் கொல்லபடுவதால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது. இது விலங்கின ஆர்வலர்களையும் சுற்றுப்புற சூழ்நிலை ஆராய்ச்சியாளர்களையும் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளது. சிலவருடங்களாக சர்வதேச சமூகம் விழித்துக்கொண்டு பல சட்டங்களும் பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ததினால் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது. இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விழிப்புணர்வு வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

அழியும் தருவாயில் உள்ள நம் பாலூட்டி இனங்களை பற்றி நாம் காண்போம்.

1. Baiji or Yangtze River Dolphin: சீனாவில் உள்ள Yangtze என்னும் ஆற்றில்
காணப்படும் இந்த நன்னீர் வாழ் டால்பின்கள் இன்று உலகில் பத்து அல்லது அதைவிட குறைவாகே உள்ளது. 1950 யில் இந்த இனத்தின் எண்ணிக்கை 6000....இன்று?(தற்பொழுது அழிந்து விட்டதாகவே கருதப்படுகிறது)

2. Vancouver Island Marmot: கனடா நாட்டில் காணப்படும் இந்த அழகான விலங்கினம் தற்பொழுது அழியும்தருவாயில் உள்ளது. 1997 ஆம் ஆண்டு மிக குறைவாகவே காணபட்ட இந்த இனம் ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால் தற்பொழுது சுமார் 200 விலங்குகள் உள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.


(இதன் முகத்தை பாருங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னால் உருவான இந்த இனம் இன்று அழியும் தருவாயில்.....எல்லாவற்றிக்கும் மனிதனின் சுயநலமே.....)

3. Seychelles Sheath-tailed Bat: செஷல்ஸ் தீவுகளில் காணப்படும் இந்த வவ்வால் இனம் இன்று சுமார் 50-100 தான் உள்ளது. இந்த இனம் எதனால் அளிக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

4. Javan Rhinoceros: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணபட்ட இந்த காண்டாமிருக இனம் தற்பொழுது சுமார் 60 தான் உள்ளது. இது அழிவதற்கு முக்கிய காரணம் இதன் கொம்புகள் மருத்துவ குணம் உடையது என்ற மூட நம்பிக்கையால் வேட்டையாடபடுவதால் தான்.
5. Hispid hare: இந்தியாவிலும் நேபாளத்திலும் பரவலாக காணபட்ட இந்த முயலினம் தற்பொழுது 110 தான் உள்ளதாக கணக்கிட பட்டுள்ளது. இவை பொதுவாக வேட்டையாடபட்டதினால் அழிந்துகொண்டிருக்கும் இனமாகும். இன்னொரு காரணம் காடுகள் அழிக்கபடுவதினால்.

(பொன்னுசாமியிலும், தலைப்பாகட்டியிலும் முயல் கறி சாப்பிடும் போது கவனிக்க....)

6. Northern hairy-nosed Wombat: தற்பொழுது சுமார் 113 தான் உயிருடன் இருப்பதாக
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்திலும் கணக்கிடபட்டுள்ளது. கால்நடை பண்ணைகள் அமைத்ததின் காரணமாக இவ்வினம் அழிந்து கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.


7. Tamaraw or Dwarf Water Buffalo: பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டுமே காணப்படும் இந்த எருமைகளின் எண்ணிக்கை சுமார் 30 -200 வரை இருக்கலாம். வேட்டை, காடுகள் அழிப்பு மற்றும் பலவகையான நோயினால் அழிந்துகொண்டிருக்கிறது.
8. Iberian Lynx: ஐரோப்பாவில் அழிந்து கொண்டிருக்கும் மிக முக்கியாமான இனம் இந்த பூனையினம் தான். தற்பொழுது 120 விலங்குகள் தான் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ளதாக கணக்கிட பட்டுள்ளது. வேட்டையாடுதல், உணவு பற்றாகுறை போன்றவற்றால் அழிந்துவருவதாக சொல்லப்படுகிறது. (இதன் முக்கிய உணவு முயல்கள்தான், முயலைத்தான் மனிதன் விடுவதில்லையே)


9. Red Wolf: அமெரிக்கா மற்றும் கனடா காடுகளில் காணப்படும் சிவப்பு ஓநாய்கள் தற்பொழுது சுமார் 150 தான் உள்ளது. இவை வேட்டை மற்றும் காடுகள் அழிப்பு போன்றவற்றால் அழிந்துவருகிறது.


10. Dwarf blue sheep: சீனாவில் காணப்படும் இவ்வகை மலையாடுகள் சுமார 200 தான் உள்ளதாக கணகிடபட்டுள்ளது. அதிக வேட்டையாடுதல், மற்றும் காடுகள் அழிப்பு போன்றவற்றால் அழிந்துவருகிறது.

இன்னும் அதிர்ச்சியான விஷயங்களுடன் வரும்..........




2 comments:

ஆட்காட்டி said...

மலையாடுகளா? வரையாடுகளா?

Dr. சாரதி said...

ஆட்காட்டி அவர்களே சீனாவில் உள்ள வரையாடுகளாக இருக்கலாம்.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats