Sunday, November 9, 2008

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள் (Part-2)!

1. நாம் தலைகீழாக நின்று சாப்பிட்டாலும் உணவு நமது வயிற்றிக்குள் செல்லும்.

2. நம் கண்ணில் உள்ள கார்னியா எனப்படும் பகுதிக்கு மட்டும் இரத்த நாளங்கள் செல்லாது. ஆனால் கார்னியாவில் உள்ள செல்கள் தேவையான
ஆற்றலை கண்ணீரில் இருந்தும் அக்குவாஸ் ஹுமர் என்னும் திரவத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்.

3. ஒருநாளைக்கு நமது வாயில் சுமார் ஒரு லிட்டர் எச்சில் சுரக்கிறது.


4. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை எடுத்து ஓன்று ஒன்
றாக இணைத்தால் இவை சுமார் 100,000 கிலோ மீட்டர் நீளம் அதாவது பூமியின் மீது இரண்டு முறை சுற்றலாம்.
5. நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு இன்ச் அளவு தோலை எடுத்து சோதனை செய்தால் அதில் 600 pain sensors, 1300 nerve cells, 9000 nerve endings, 36 heat sensors, 75 pressure sensors, 100 sweat glands, 3 million cells, and 3 yards of blood vessels இருக்கும். 6. நம் மூளையில் உள்ள செல்களை தவிர நமது உடலில் உள்ள செல்களில் 50,000,000 செல்கள் இறந்திருக்கும் நீங்கள் இந்த ஒரு பத்தியை படித்து முடிக்கும் முன்.

7. நமது மூளைக்கு செய்திகள் செல்லும் வேகம் சுமார் 400 கிலோ மீட்டர்
கள்.


8. நமது உடலில் 5.6 லிட்டர் இரத்தம் இருக்கிறது. இந்த 5.6 லிட்டர் இரத்தம் ஒரு நிமிடத்தில் நமது உடலை மூன்று முறை சுற்றி வந்துவிடும். அப்படியென்றால் இரத்தம் முழுவதும் ஒருநாளில் சுமார் 19,000 கிலோமீட்டர் பயணம் செய்யும்.

9. நமது கண்ணால் சுமார் 10,00,000 நிறத்தினை பிரித்து அறியமுடியும்.

10. நமது உடலில் ஒரு நாளைக்கு சுமார் 100 பில்லியன் இரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகும். அதாவது ஒரு வினாடியில் இரண்டு மில்லியன் சிவப்பு
அணுக்கள் புதிதாக உருவாகிறது.


11. நமது மூக்கில் இயற்கையாகவே ஒரு ஏர் கண்டிசன் உள்ளது அதாவது மூக்கினுள் செல்லும் குளிர்ந்த காற்றை சூடாகவும் சூடான காற்றை குளிராகவும் மாற்றம் செய்து நுரைஈரலுக்குள் அனுப்பும்.

12. நமது உடலில் உள்ள நீரை ஒரு தொட்டியினுள் சேகரித்தால் அதில் சுமார் 40 லிட்டர் நீர் இருக்கும். அதாவது நமது உடலில் 70 சதவீதம் நீர்தான் உள்ளது.

13. நமது உடலில் உள்ள கார்பனை தனியாக பிரித்து எடுத்து பென்சில் செய்தால் அதில் 900 பென்சில்கள் செய்ய முடியும்.


14. கருப்பையில் உருவாகும் குழந்தை 6-8 வாரத்திற்கு பிறகுதான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறும்.

15. ஒரு மனிதனால் 40 நாட்கள் வரை தான் உண்ணாமல் உயிர் வாழமுடியும், தண்ணீர் அருந்தாமல் 7 நாட்கள் தான் உயிர் வாழமுடியும், காற்று இல்லாமல் 7 நிமிடங்கள் தான் உயிர் வாழமுடியும்.

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

சுவராஸ்யமான தகவல்கள். நன்றி

madhiyarasu said...

என்னை மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பதிவு. எப்படி முடியுது உங்களால் இது போல.

madhiyarasu said...

என்னை மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பதிவு. எப்படி முடியுது. மேலும் தொடர‌ வாழ்த்துக்கள்.

Anonymous said...

Very good & important information.
Thank you.

Anonymous said...

wow...very useful and interesting....

Dr. சாரதி said...

ஜுர்கேன் க்ருகேர், Madhiyarasu, Anonymous தாங்கள் வருகைக்கு நன்றி. உங்களின் மேலான அதரவு தான் இதுபோன்று எழுத உந்துதலாக இருக்கிறது. நன்றிகள் ஆயிரம்.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats