Tuesday, November 18, 2008

அறிவோமா அறிவியல்: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள் (Part-2)

இந்தவருடம் கணகிடபட்ட 45,000 விலங்கினங்களில் சுமார் 38 சதவிதம் விலங்கினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. சர்வதேச சமுதாயம் இதை தடுக்க முயற்ச்சிக்கவில்லை எனில் நம் வரும்கால சந்ததியினர் போட்டவில்தான் விலங்கினகளை பார்க்கமுடியும்.

1. Pere David's deer: சீனாவை தாயகமாக கொண்ட இந்த மானினமும் அழியும் தருவாயில் உள்ளது.


2. Tasmanian Devi: ஆஸ்திரேலியாவின் காணப்படும் இந்த விலங்கினம் கடந்த பத்து வருடத்தில் சுமார் 60 சதவீதம் அழிந்துவிட்டது. இந்த விலங்கினம் அழிய முக்கிய காரணம் நோய் தாக்குதல்களும், கான்சர் போன்ற நோய்களும் தான்.

(Tasmanian Devil Facial Tumour Disease)

3. Cuban Crocodile: க்யுபா நாட்டில் வாழும் நன்னீர் முதலைகள் தான் இவை. கடந்த பத்து வருடத்தில் சுமார் 80 சதவீதம் அழிந்துபோய்விட்டது.


4. Caspian Seal: ஐரோப்பாவில் அழிந்து கொண்டிருக்கும் இந்த சீல் இனம் ஒரு காலத்தில் சுமார் 10,00,000 காணபட்டது ஆனால் கடந்த நூறு வருடங்களில் சுமார் 90 சதவீதம் அழிந்து போய்விட்டது. சுற்றுப்புற சீர்கேடு, நோய் தாக்குதல், மீன் வலையில் தெரியாமல் மாட்டி இறந்து போவதால் தான் அழிந்து கொண்டு இருக்கிறது.


5. Fishing Cat: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த பூனையினம் நீரில் நீந்தி மீன் பிடித்து உண்ணுவதில் கெட்டி. தற்பொழுது சதுப்புநில காடுகள் அழிக்கபடுவதாலும்,சுற்றுப்புற சீர்கேடு, நோய் தாக்குதல் போன்றவற்றால் அழிந்து கொண்டு இருக்கிறது.

6. Grey-Faced Sengi: தான்சானியாவில் காணப்படும் இந்த விலங்கினமும் அழியும் தருவாயில்தான் உள்ளது. காடுகள் அளிக்கபடுவதால் தான் முக்கியமாக இந்த இனம் அழிந்து கொண்டு வருகிறது.


7. Purple Marsh Crab: மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் இந்த நண்டினம் வறண்ட காலநிலைகளில் களிமண் வளைகளில் வாழும். இவை தான் first living specimens of these semiterrestrial air-breathers.


8. Rameshwaram Parachute Spider: ஆமாங்க நம்ம ராமேஸ்வரம் தான். தற்பொழுது சுமார் 500 சிலந்திகள் தான் உயிர் வாழ்வதாக கணக்கிடபட்டுள்ளது.


9. Holdridge's Toad: கோஸ்ட்டா ரிக்காவில் காணப்படும் இந்த தேரைகள் அழியும் தருவாயில் இருக்கிறது.


10. Right Whale: சுமார் 60 டன் எடையும் 60 மீட்டர் நீளம் வரை வளரும் இந்த திமிங்கலம் தான் அதிகமாக வேட்டையாடி அளிக்கப்பட இனமாகும். தற்பொழுது சுமார் 250 தான் உள்ளது. தற்பொழுது இத்தனை காப்பதற்காக புதிய சட்டம் இயற்றபட்டுள்ளது.


இத்தனையும் அழித்த மனிதா....நீ யாரைத்தான் வாழ வைக்கபோகிறாய்?.........

5 comments:

நையாண்டி நைனா said...

/*இத்தனையும் அழித்த மனிதா....நீ யாரைத்தான் வாழ வைக்கபோகிறாய்?.........*/

என்ன ஒரு ஆணவமான கேள்வி...!!!???. நாங்க மனுசனையே வாழ வைக்க மாட்டோம்......

நையாண்டி நைனா said...

என்ன ஒரு ஆணவமான கேள்வி...!!!???. நாங்க மனுசனையே வாழ வைக்க மாட்டோம்.

Dr. சாரதி said...

//என்ன ஒரு ஆணவமான கேள்வி...!!!???. நாங்க மனுசனையே வாழ வைக்க மாட்டோம்......//

அது சரி....

நையாண்டி நைனா அவர்களே தாங்கள் வருகைக்கு நன்றி....

ஆட்காட்டி said...

)))))))

ஆட்காட்டி said...

)))

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats